Published:Updated:

“அவிய்ங்க ஆச்சி... இவிய்ங்க ஏ.டி.எம்...”

இது கோலி சோடா கலாட்டா! பொன்.விமலா, படங்கள்: பா.காளிமுத்து, ஜெ.வேங்கடராஜ்

“அவிய்ங்க ஆச்சி... இவிய்ங்க ஏ.டி.எம்...”

இது கோலி சோடா கலாட்டா! பொன்.விமலா, படங்கள்: பா.காளிமுத்து, ஜெ.வேங்கடராஜ்

Published:Updated:
##~##

'பசங்க' படத்தில் நடித்த குட்டீஸ்களின் கூட்டணியோடு, விஜய்மில்டன் இயக்கத்தில் பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கிறது சமீபத்தில் வெளி வந்திருக்கும் 'கோலி சோடா’ திரைப்படம். இதில், தங்களுடைய அட்டகாசமான நடிப்பால்... 'அட' என்று அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளனர் 'ஆச்சி’ சுஜாதா, 'ஏ.டி.எம்’ சீதா என்ற இரு பெண்கள். திடீர் சந்திப்பாக இந்த இருவரையும் சந்தித்தபோது...

''இதுவரைக்கும் என்னை 'பருத்திவீரன்’ சுஜாதானு சொல்லுவாங்க. 'கோலி சோடா’வுக்கு அப்புறம் 'ஆச்சி’னு கூப்பிட ஆரம்பிச்சிட்டாங்க. 'ஆச்சி’னு கூப்பிடறதே பெரிய விருதுதாங்க!''

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

- மதுரைத் தமிழில் ஆரம்பித்தார், சுஜாதா.

''என் வீட்டுக்காரரோட சேர்ந்து மதுரையில மேடை நாடகத்துல நடிச்சுக்கிட்டிருந்தேன். அதப் பார்த்த கமல் சார், 'விருமாண்டி’ படத்துல சான்ஸ் கொடுத்தாரு. அதுக்கப்புறம் 'பருத்திவீரன்’, 'பசங்க’, 'கேடி பில்லா கில்லாடி ரங்கா’னு 50 படங்களுக்கு மேல நடிச்சுட்டேன். 2007-ல தென்னிந்திய திரைப்பட விழாவுல 'சிறந்த துணை நடிகை விருது’ கெடச்சது. ரெண்டு பொம்பளைப் புள்ளைங்களுக்கு அம்மாவான நான், தொடர்ந்து நடிச்சுட்டும் இருக்கேன்னா... அதுக்கு முழுக்க முழுக்க கணவர்தான் காரணம்.

“அவிய்ங்க ஆச்சி... இவிய்ங்க ஏ.டி.எம்...”

ரொம்ப இயல்பா நடிக்கிறதா எல்லோருமே சொல்லுவாக. ஆனா, என்னோட நடிப்புக்குப் பின்ன ஒவ்வொரு டைரக்டரும் படுறபாடு எனக்குத்தேன் தெரியும். 'பசங்க’ படத்துல நடிச்ச பசங்க எல்லோருமே எனக்கு நல்லா பழக்கம் ஆனவங்க. அதனால 'கோலி சோடா’ படத்துல அவய்ங்களோட நடிக்கிறது ரொம்ப சுலபமா இருந்துச்சு.

“அவிய்ங்க ஆச்சி... இவிய்ங்க ஏ.டி.எம்...”

கோயம்பேடு மார்க்கெட்டுல ஷூட்டிங். படப்பிடிப்புக்கு போய் இறங்கின முதல் நாளே எனக்கு வாந்தியும் மயக்கமுமா வந்திருச்சு. அழுகின காய்கறி, தேங்கிக் கிடக்கற சாக்கடை, கொட்டிக் கிடக்குற குப்பைனு அந்த மார்க்கெட்டுல வேலை பார்க்குறவங்களோட நிலைமை அப்பதான் எனக்குப் புரிஞ்சுது. ஷூட்டிங் நடந்த சமயம் மழை வேற பேய்ஞ்சதால அழுகின காய்கறிகளோட சகதியும் சேர்ந்து... ஆளையே உள்ளே இழுக்கற மாதிரியே இருக்கும். ஒரு தடவை, அந்தக் காய்கறி குப்பையில என் காலு பொதைய, 'என்னை மதுரைக்கே கொண்டு போயி விட்டுருங்க சார்’னு மில்டன் சார்கிட்டயே போய் நின்னுட்டேன்னா பார்த்துக்கோங்க. 'இந்தக் கதைக்கு நீங்கதான் சரியான சாய்ஸ்!’னு சொல்லி, தேத்தினாரு.

ஒரு டைரக்டரா மில்டன் சார் ஷூட்டிங்ல நடந்துக்கிட்ட விதம் எங்க எல்லோருக்குமே பிரமிப்பாவும் பூரிப்பாவும் இருக்கும். இன்னிக்கு எல்லோரும் 'ஆச்சி... ஆச்சி’னு கொண்டாடுறதுக்கு அவர்தான் காரணம். இந்தப் படத்துல வர்ற எல்லா இயல்பான வசனங்களுக்கும் பாண்டிராஜ் சாருக்குத்தேன் நன்றி சொல்லணும்.

படத்துல நாயுடு (வில்லன்), 'கொல்லுங்கடா அவள’னு சொல்லும்போது, 'நான் செத்து ரெண்டு மணி நேரம் ஆச்சு’னு சொல்லுவேன். அந்த எடத்துலதேன் நிறைய கிளாப்ஸ் வரும். படத்துல நடிக்கிறப்ப எனக்கு முழுக்கதை என்னனே தெரியாது. படம் முடிஞ்சு பார்க்குறப்ப, 'அடி, இம்புட்டு அழகா வந்திருக்கே!’னு அம்புட்டு சந்தோஷமால இருக்கு!''

- சுஜாதாவின் குரலில், கோலி சோடா குடித்த திருப்தி!

''அதை ஏன் கேட்கறீங்க..! ஸ்கூலுக்குப் போனா, என் ஃப்ரெண்ட்ஸ்ங்க எல்லாரும் என்கிட்ட வந்து, 'பணம் எடுத்துக்கலாமா?’னு கேட்குறாங்க. என்னோட நிஜ பேரே மறந்துடும்போல. எங்க அம்மாவே என்னை 'ஏ.டி.எம்’னு கூப்பிட்டாதான் திரும்பிப் பார்க்குறேன். 'கோலி சோடா’வுல 'ஏ.டி.எம்-னா அழுகுன தக்காளிதானே?’னு கேட்பேன். 'இல்ல... அட்ட மேட்டர்!’னு பசங்க சொல்வாங்க. அப்புறம் அவங்களே 'அழகிய திருமகள்’னு சொல்வாங்க!''

- கண்கள் படபடக்கிறார் 'ஏ.டி.எம்.’ சீதா.

“அவிய்ங்க ஆச்சி... இவிய்ங்க ஏ.டி.எம்...”

''இப்ப ப்ளஸ் டூ படிச்சுட்டு இருக்கேன். ஒரு நாள் என் ஃப்ரெண்டு வீட்டுக்குப் போயிருந்தேன். அப்ப மில்டன் சார் அவங்க வீட்டுக்கு வந்திருந்தார். என் ஃப்ரெண்டுகிட்ட பேசுறதைப் பார்த்து, 'உன் பேரு என்னம்மா..?’னு கேட்டார். எனக்கு செம டென்ஷன். 'ச்சீ...தூ...ப்பே'னு சொல்லிட்டேன். அவருக்கு அப்பவும் என் மேல கோபம் வரல. 'சரி, உன்னோட போன் நம்பர் கொடும்மா...’னு சொன்னார். நான் கையில இருந்த போனை ஒளிச்சுட்டு, 'என்கிட்ட போனும் இல்ல, ஒண்ணும் இல்ல’னு சொல்லிட்டு வீட்டுக்கு ஓடி வந்துட்டேன்.

திடீர்னு ஒருநாள் அவரோட அசிஸ்டென்ட் வீட்டுக்கு வந்தார். 'டைரக்டர் மில்டன் சார் அனுப்பியிருக்கார்’னு சொன்னார். நான் முறைச்சிப் பார்க்கறதுக்குள்ள எங்க அம்மா அவரை, 'வாங்க தம்பி, எப்படி இருக்கீங்க?’னு விசாரிக்க ஆரம்பிச்சாங்க. அப்புறம்தான் தெரிஞ்சது... மில்டன் சாரோட அசிஸ்டென்ட் எங்கம்மாவுக்கு தெரிஞ்சவங்கனு. என்னை சினிமாவுல நடிக்க கூப்பிட்டி ருக்கார்னு சொன்னதும், அம்மாவும் 'ஓ.கே’ சொல்லிட்டாங்க. இப்படித்தான் 'கோலி சோடா’ வாய்ப்பு'' என்று சிரித்த சீதா, தொடர்ந்தார்.

''பொதுவா நான் கண்ணாடி போடமாட்டேன். படத்துக்காகத்தான் கண்ணாடி போட்டேன். கண்ணாடியில என்னைப் பார்க்கும்போது எனக்கே செம டயலாக் எல்லாம் தோணும். மில்டன் சார் சொல்லித் தந்த மாதிரியே நடிச்சதாலதான் இவ்ளோ பாராட்டு. கிட்டத்தட்ட பப்ளிக் எக்ஸாம்ல பாஸான மாதிரியே ஒரு ஃபீல். 'அழகா இல்லனு சொன்னா... அதுக்கு நான் ஏன் ஃபீல் பண்ணணும்? அழகா பொறக்காதது என் தப்புல்ல... அது எங்க பேரன்ட்ஸ் தப்பு. என் தப்பில்லாத ஒரு விஷயத்துக்காக நான் ஏன் ஃபீல் பண்ணணும்?’னு ஒரு டயலாக் வரும். அதுக்கு தியேட்டர்ல பயங்கர க்ளாப்ஸ்!

படத்துக்காக மொட்டையடிக்கணும்னு டைரக்டர் சார் தயங்கிட்டே சொன்னார். தயங்காம 'சரி’ சொன்னேன். அந்த ஸீன் படத்துல பேசப்படுற மாதிரி ரொம்ப நல்லா வந்திருக்கு. எனக்கு அப்பதான் முளைவிட்ட மாதிரி முடி இருக்கும். அதைப் பார்த்து படத்துல, 'என்னடி உனக்கும் தலை வாரி விடணுமா..?’னு ஆச்சி அக்கா கேட்கும். 'பல்லு இல்லாதவனுக்கு பக்கோடாவும் பஞ்சு மிட்டாயும் ஒண்ணுதான்’னு நான் சொன்னதும், செம விசில் பறக்கும்.

எல்லாத்துக்கும் மேல 'பச்சை கலரு தாவணி’... பட்டைய கிளப்பும். படத்துல வர்ற 'ஒரு செடி... ஒரு ஃப்ளவர்’ டயலாக், இப்போ லவ்வர்ஸ்கிட்ட ஹிட்டோ ஹிட்டு!''

- கண்களை மூடி வெட்கம் பொங்கச் சிரிக்கிறார் 'ஒரு ஃப்ளவர். ஏ.டி.எம்.’

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism