ஸ்பெஷல் 2
ஸ்பெஷல் 1
அவள் 16
Published:Updated:

யூடியூபில் 'காதல் மழை!'

யூடியூபில் 'காதல் மழை!'

##~##

 'காதல் மழையே!' என்ற பெயரில், சமீபத்திய காதலர் தினத்தன்று யூடியூபில் ரிலீஸ் ஆன வீடியோ ஆல்பம், வெளியிட்ட சில தினங்களிலேயே பார்வையாளர்களை ஈர்த்திருக்கிறது! 'இந்த மழை'யைப் பொழிய வைத்தவர்கள்... 'அறிவியன்’ என்ற பெயரில் கைகோத்த மதுரை கல்லூரி மாணவர்கள்!

இந்த இசைக் குழுவின் ஒரே பெண்ணான பவித்ரா, முதலில் பேசினார். ''நான், இன்ஜினீயரிங் மூன்றாமாண்டு மாணவி. கர்னாடக சங்கீதம் பயின்றிருக்கேன். என்கூட படிக்கிற ஃப்ரெண்ட் சித்து, 'நானும் என்னோட ஃப்ரெண்ட்ஸும் சேர்ந்து 'அறிவியன்’னு ஒரு குரூப் ஆரம்பிச்சுருக்கோம். அதுக்கு ஒரு பாட்டு எழுதி கம்போஸ் பண்ணிப் பாடணும். எழுத, கம்போஸ் பண்ண ஆள் இருக்காங்க. பாடறதுக்கு நீ வர்றியா?’னு கேட்டான். சித்து வீட்டுல 'காதல் மழையே...’ பாட்டு தயாராச்சு. ஆனா, அதுக்கப்புறம் டெவலப் பண்ணாம அப்படியே விட்டுட்டோம்.

ஒரு வருஷம் ஓடின நிலையில... திடீர்னு சித்து அந்தப் பாட்டை எடுத்து தூசி தட்டினான். அப்புறம் டெக்னிக்கலா ஸ்டூடியோவில் ரெக்கார்ட் செய்து, ஆன்லைன்ல ரிலீஸ் செய்தோம். ஃபேஸ்புக்ல ஷேர்ஸ், லைக்ஸ்களை அள்ளிடுச்சு. அந்த உற்சாகத்துல அதை வீடியோவாவும் ரிலீஸ் செய்ய முயற்சிகள் எடுத்து ஷூட் பண்ணினோம். வெற்றிகரமா 'வேலன் டைன்ஸ் டே’ அன்னிக்கு வீடியோ ரிலீஸ் ஆகிருச்சு'' என்று பவித்ரா நிறுத்த...

யூடியூபில் 'காதல் மழை!'

'அறிவியன்’ பற்றி பேசிய குழு உறுப்பினர்களில் ஒருவரான ரவிவர்மா, ''நண்பர்கள் சேர்ந்து முறையா பதிவு பண்ணி ஆரம்பிச்ச குரூப்தான் 'அறிவியன்’. ஒரு வருஷம் ஆச்சு. பாட்டு, நடிப்புக்கு பவித்ரா... கான்செப்ட், இயக் கத்துக்கு நான்... இசைக்கு சித்து, ஒளிப்பதி வுக்கு செல்லப்பா, பாடல் வரிகளுக்கு ராம்கிமதன், ஆடை வடிவமைப்புக்கு ராகேஷ்னு பலர் ஆன்ஸ்க்ரீன், ஆஃப்ஸ்க்ரீன்ல இயங்கிட்டு இருக்கோம். எங்களோட வெற்றிகள் தொடரும்!''

டெயில் பீஸ்: ''அறிவியலில் தேர்ச்சி பெற்ற வனை 'அறிவியன்’னு சொல்லுவாங்க. அந்த வார்த்தைதான் மருவி 'அறிவாளி’ ஆகிவிட்டதுனு ஒரு குறிப்பு சொல்லுது. அந்த அழகான வார்த்தையை நாங்க எங்க குரூப்புக்கு கேட்ச் பண்ணிக்கிட்டோம்!''

- லோ.இந்து  

படம்: பா.காளிமுத்து