ஸ்பெஷல் 2
ஸ்பெஷல் 1
அவள் 16
Published:Updated:

படிப்பும் நானே... பாட்டும் நானே!

படிப்பும் நானே... பாட்டும் நானே!

படிப்பும் நானே... பாட்டும் நானே!

பார்வதிக்கு அறிமுகம் தேவையில்லை! சமீபத்தில் நடந்து முடிந்த விஜய் டி.வி 'சூப்பர் சிங்கர்’ நிகழ்ச்சியின் ஃபைனலிஸ்ட்! ஏற்கெனவே கேரளாவில் 'சூப்பர் ஸ்டார் ஜூனியர்’ என்ற ரியாலிட்டி ஷோவில் பட்டம் வென்ற இந்த 19 வயதுச் சிட்டு, அடுத்த ஆண்டு, சென்னை... எத்திராஜ் கல்லூரியில் பி.எஸ்சி., மேத்ஸ் படிக்கத் தயாராக இருக்கிறார்!

''முறையா சங்கீதம் ஏதும் கத்துக்கல. இப்போதான் ஏழு மாசமா விஜய் சுர்சேன் சார்கிட்ட ஹிந்துஸ்தானி கத்துக்கிறேன். 'சூப்பர் சிங்கர்’ நிகழ்ச்சி மூலமா இப்போ ஏ.ஆர்.ரஹ்மான் சார் இசையில் ஒரு டிராக் பாடவும், 'அன்பா அழகா’ திரைப்படத்தில் ஒரு பாட்டுப் பாடவும் வாய்ப்புக் கிடைச்சுருக்கு.

'சூப்பர் சிங்கர்’ போட்டிக்கான ஆடிஷன் நடந்தப்போ, ப்ளஸ் டூ படிச்சிட்டு இருந்தேன். ஒரு பக்கம் படிப்பு, ஒரு பக்கம் போட்டினு மாறி மாறி ஓடினாலும் பரீட்சையில 95 பர்சன்ட் மார்க்ஸ் எடுத்துட்டேன். படிப்பு, சங்கீதம், எப்பவும் எனக்கு எந்த பிரஷரும் கொடுக்காத அப்பா, அம்மா, அப்புறம் என் குட்டி தங்கச்சி... இதுதான் என் உலகம்!''

அ.பார்வதி 

படம்: ஸ்டீவ்ஸ்.சு.இராட்ரிக்ஸ்