ஸ்பெஷல் 2
ஸ்பெஷல் 1
அவள் 16
Published:Updated:

'ஸ்குவாஷ்' நம்பிக்கை!

'ஸ்குவாஷ்' நம்பிக்கை!

'ஸ்குவாஷ்' நம்பிக்கை!

'ஸ்குவாஷ்' விளையாட்டில் தமிழக நம்பிக்கை நட்சத்திரம், லக்ஷ்மி ஸ்ருதி சேட்டிப்பள்ளி. 17 வயதான இவர், தேசிய மற்றும் சர்வதேச போட்டிகள் பலவற்றில் வென்றிருப்பதுடன்.... விளையாட ஆரம்பித்த நான்கே ஆண்டுகளில் சர்வதேச ஜூனியர் தரவரிசைப் பட்டியலில் 30-ம் இடத்திலும், இந்திய ஜூனியர் தரவரிசைப் பட்டி யலில் 6-ம் இடத்திலும் அசத்தலாக இடம் பிடித்திருக்கிறார். தற்போது சென்னை, லேடி ஆண்டாள் பள்ளியில் 12-ம் வகுப்புப் படிக்கும் லக்ஷ்மிக்கு, பேச்சு... எக்ஸ்பிரஸ் வேகம்!

''2009-ல் சென்னை, எம்.சி.சி. கிளப்ல ஸ்குவாஷ் அறி முகமாச்சு. பொழுதுபோக்கா இல்லாம, அதை என் லட்சி யமா வளர்த்துக்கிட்டேன். ஆர்வத்தோட, தினமும் 7 மணி நேரம் கடும் பயிற்சி எடுத்துக்கிட்டேன். இதுதான்... ஸ்டேட், நேஷனல், இன்டர் நேஷனல் (சென்னை ஓபன், ஆஸ்திரே லியன் ஜூனியர் ஓபன், ஸ்பானிஷ் ஓபன், சுவிஸ் ஓபன்) இப்படி எல்லா போட்டிகள்லயும் வெற்றியைத் தேடித் தந்துச்சு.

'ஸ்குவாஷ்' நம்பிக்கை!

'ஸ்குவாஷ்’ல ரோல் மாடல்னு எனக்கு யாரும் இல்ல. எல்லோரோட மேட்சையும் கவனிச்சுப் பார்ப்பேன். அடுத்த வருஷத்துல இருந்து 'சீனியர்’ பிரிவில் விளையாடப் போறேன். அதிலும் டாப் ரேங்க் எடுக்கணும். என் பயணத்தில் பாதை முழுக்க ஊக்கம் தந்துட்டே வர்றது, பெற்றோரும்... நான் படிக்கற பள்ளிக்கூடமும்தான்!''

- க.சுபராமன்  

படங்கள்: ஸ்டீவ்ஸ் சு.இராட்ரிக்ஸ்