''திருச்சி மலைக்கோட்டை, திருப்பதி, கொடைக்கானல், ஊட்டி... மிஞ்சிப்போனா இந்த மலையில எல்லாம்தானே நீங்க ஏறியிருப்பீங்க? ஆனா, நாங்க ஏறிட்டு வந்திருக்கிற மலை எது தெரியுமா... தி கிரேட் ஹிமாலயாஸ்... உலகத்திலேயே உயரமான மலை!''

- இளமைக்கேயுரிய துள்ளலோடு சொல்கிறார்கள், கோயம்புத்தூர், கிருஷ்ணம்மாள் கல்லூரியில், இறுதியாண்டு பி.சி.ஏ மற்றும் ஐ.டி படிக்கும் மாணவிகள் கீதா மணிகண்டனும், அபிநயாவும்.

''கல்லூரியில் என்.சி.சி மாணவிகள் நாங்க. அதுல பெஸ்ட் பெர்ஃபார்மன்ஸ் கொடுத்துதான், இமயமலையில ட்ரெக்கிங் போற வாய்ப்பைப் பெற்றோம். ரயிலில் கோவை டு டெல்லி, மணாலியில் ஒரு காட்டேஜில் ஓய்வு, அப்புறம் உயிர்வாழத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை எடுத்துக்கிட்டு மலை ஏறக் கிளம்பிட்டோம். ஏழு நாள் பிளான் அது. தினமும் எட்டு மணி நேரம் நடைபயணம். இரவில் ஒரு தற்காலிகக் கூடாரம் போட்டு ஓய்வும் உணவும். பனி போர்த்திய மலை, செம குளிர்!

நடக்குறோம் நடக்குறோம் நடந்துட்டே இருக்கோம். ஒருவழியா எங்களோட இலக்கான 16,442 அடி உயரத்தை அடைந்த நிமிஷம், எல்லாருக்கும் சாதனை சந்தோஷம். டென்ட் போட்டு, பனிக்கட்டியை தூக்கிப் போட்டு விளையாடி, போட்டோ எடுத்துனு ஒரே அதகளம்! அடுத்த நாள் கீழ இறங்கறதுக்காக புறப்பட்டா.... கிளைமேட் தாறுமாறா மாறி, பனிக்கட்டி எல்லாம் உருக ஆரம்பிச்சிடுச்சு. கூடவே மழை வேற. காலே வைக்க முடியாம எங்க பார்த்தாலும் ஒரே வழுக்கல்ஸ். 'ஆத்தா மாரியாத்தா...’னு சிலபல வேண்டுதல்களை எல்லாம் போட்டுட்டு உட்கார்ந்திருந்தோம். கொஞ்ச நேரத்துல கிளைமேட் சரியாகவும்தான், உயிரே திரும்பி வந்துச்சு.

அது ஒரு திக்... திகில்... த்ரில்... ட்ரெக்கிங் அனுபவம்!''

- தி.ஜெயப்பிரகாஷ்

படம்: அ.ஜெஃப்ரி தேவ்