ஸ்பெஷல் 2
ஸ்பெஷல் 1
அவள் 16
Published:Updated:

ஐ.ஐ.எம்-மில் அசத்தும் கிராமத்து மின்னல்!

ஐ.ஐ.எம்-மில் அசத்தும் கிராமத்து மின்னல்!

கர்ப்புறங்களில் படித்து வளரும் மாணவர்களுக்கே... ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., ஐ.பி.எம். போன்ற உயர் கல்வி நிறுவனங்கள் எல்லாம், வேற்றுக்கிரகம் போலத்தான் மிரட்டும். இத்தகைய சூழலில், கிராமப்புற பின்னணியில் இருந்து புயலென புறப்பட்டு போய், லக்னோ நகரிலிருக்கும் ஐ.ஐ.எம். கல்வி நிறுவனத்தில் எம்.பி.ஏ. படிக்கும் நம்ம ஊர் மாணவியை, நிச்சயமாக உங்களுக்கு அறிமுகப்படுத்தியே ஆகவேண்டும்.

ஐ.ஐ.எம்-மில் அசத்தும் கிராமத்து மின்னல்!

மீட் மிஸ். நவீனா!

''சொந்த ஊர் சேலம் பக்கத்துல கொங்கணாபுரம் கிராமம். ஈரோடு, பாரதி வித்யா பவன் பள்ளியிலதான் படிச்சேன். ப்ளஸ் டூ-ல நான் வாங்கிய மதிப்பெண்கள், கிண்டியில இருக்கற பொறியியல் கல்லூரியில இன்ஜினீயரிங் ஸீட் வாங்கிக் கொடுத்துச்சு. எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் படிச்சேன். 90% மதிப்பெண்களோட தேர்ச்சி பெற்றேன். நல்ல வேலை கிடைச்சுது. ஆனா, சராசரி இன்ஜினீயர்கள்ல ஒருத்தரா வேலை பார்க்க விருப்பமில்ல. பெரிய நிறுவனத்தை தலைமை தாங்கி நடத்தணும்ங்கிறதுதான் என் லட்சி யமா இருந்துச்சு. அதனால இன்ஜினீயரிங் படிக்கும்போதே 'கேட்' (CAT) தேர்வுக்கு என்னைத் தயார்படுத்திக்கிட்டேன். இந்த தேர்வுல நல்ல மதிப்பெண்களை வாங்கி தேர்ச்சி அடையறது சுலபமான காரியமில்ல. அப்படி தேர்ச்சி அடைந்தாலும் உலக அளவுல டாப் கல்வி நிறுவனங்கள்ல ஒண்ணா இருக்கற ஐ.ஐ.எம்-ல படிக்கறதுக்கு வாய்ப்புக் கிடைப்பது மிகமிகக் கடினம். பல இந்திய மாணவர்களுக்கும் கனவே... இந்த ஐ.ஐ.எம்தான். அப்படிப்பட்ட இடம் எனக்குக் கிடைச்சது... என் முயற்சிகளுக்குக் கிடைச்ச பெருவெற்றினுதான் சொல்லணும்.

எம்.பி.ஏ. இறுதியாண்டு படிச்சுட்டிருக்கற எனக்கு... இப்ப கேம்பஸ் இன்டர்வியூல 'க்ரைஸில்' (CRISIL - Credit Rating Information Services of India Limited) நிறுவனத்தில் வேலை கிடைச்சாச்சே!''    

- செ.கிஸோர் பிரசாத் கிரண்