ஸ்பெஷல் 2
ஸ்பெஷல் 1
அவள் 16
Published:Updated:

இப்போதைக்கு ஐ.எஃப்.எஸ்... நாளைக்கு ஐ.ஏ.எஸ்!

இப்போதைக்கு ஐ.எஃப்.எஸ்... நாளைக்கு ஐ.ஏ.எஸ்!

இப்போதைக்கு ஐ.எஃப்.எஸ்... நாளைக்கு ஐ.ஏ.எஸ்!

டந்த ஆண்டுக்கான 'ஐ.எஃப்.எஸ்.' தேர்வு (IFS-Indian Forest Service Examination - 2013) முடிவுகளில், இந்திய அளவில் 14-வது இடம் பெற்று, அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளார் கோயம்புத்தூர் சாருஸ்ரீ!

''சிவில் சர்வீஸ் பரீட்சை எழுதி, அதில் வெற்றிபெற வேண்டும் என்பதே... சிறு வயதிலிருந்தே என் இலக்கு. பத் தாம் வகுப்பில் மாவட்ட அளவில் மூன் றாம் இடத்தையும், பன்னிரண்டாம் வகுப்பில் மாவட்ட அளவில் முதல் இடத்தையும் பெற்றேன். சிவில் சர்வீஸ் பரீட்சைக்குத் தயார் செய்வதற்கான பயிற்சியைச் சிறப்பாகப் பெறலாம் என் பதற்காகவே... சென்னை, கிண்டியில் இருக்கும் பொறியியல் கல்லூரியில் எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் பிரிவில் சேர்ந்தேன்.

படிப்பை சிறப்பாக முடித்து, கோல்டு மெடலும் வாங்கிய எனக்கு, மிகப்பெரிய கார்ப்பரேட் நிறுவனமொன்றில் நல்ல வேலை கிடைத்தது. ஆனால், என மனமெல்லாம் சிவில் சர்வீஸ் ஆசையே வியாபித்திருக்க... வேலை முடிந்ததும் தினமும் மாலை ஆறு மணிக்கு அலு வலகத்தில் இருந்து திரும்பிய பின், குறைந்தது ஐந்து மணி நேரம் படிப் பேன். அதற்கான பலனாகத்தான் தேசிய அளவில் 14-ம் ரேங்க் பெற்றிருக் கிறேன். இதில் என் பெற்றோருக்கு மகிழ்ச்சியோ மகிழ்ச்சி!'' என்று சொல் லும் சாருஸ்ரீ, தன்னுடைய சிவில் சர்வீஸ் ஆசையை இத்துடன் முடித்துக்கொள்ளவில்லை.

''ஐ.எஃப்.எஸ்-க்கான பயிற்சி இன்னமும் ஆரம்பமாகவில்லை. அதற்குள்ளாக, ஐ.ஏ.எஸ். எனும் இலக்கை வைத்து மீண்டும் பரீட்சை எழுதியிருக்கிறேன். அதன் முடிவுகளையும் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்!''

- கண்கள் சிமிட்டிச் சிரிக்கிறார் 23 வயதாகும் சாருஸ்ரீ!

- செ.கிஸோர் பிரசாத் கிரண்

படம்: எஸ்.பி.ஜெர்ரி ரினால்டு விமல்