ஸ்பெஷல் 2
ஸ்பெஷல் 1
அவள் 16
Published:Updated:

எங்கள் வளர்ச்சியில் ‘அவள் விகடன்’!

எங்கள் வளர்ச்சியில் ‘அவள் விகடன்’!

''2002-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது எங்கள் Vcare நிறுவனம். ஹேர் ட்ரீட்மென்ட் துறையில்தான் முதன்முதலாக கால்பதித்தோம். அதற்குப்பிறகு, ஸ்கின் ட்ரீட்மென்ட், எஜுகேஷன், எஃப்எம்சிஜி, ரீடெயில், ரிசர்ச், புரொடக்ஷன் என பல துறைகளிலும் தனி இடத்தை உருவாக்கினோம். 2014-ம் ஆண்டில் ஹெல்த் அண்ட் வெல்த் துறையில், குறிப்பாக... தென்னிந்தியாவின் மிகப்பெரிய சக்தியாக இயங்கி கொண்டிருக்கிறது எங்கள் நிறுவனம்.

தூர்தர்ஷன், நாளிதழ்கள், பருவ இதழ்கள் என்றிருந்த ஊடகங்களின் வளர்ச்சி, இன்று சேட்டிலைட் டெலிவிஷன், இன்டர்நெட், சமூக வலைதளங்கள் என்று மேலே மேலே உயர்ந்துகொண்டிருக்கிறது. இது எங்களின் வளர்ச்சிக்கும் மிகப்பெரிய பங்களிப்பைச் செய்துகொண்டிருக்கிறது.

எங்கள் வளர்ச்சியில் ‘அவள் விகடன்’!

பெண்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் உயரியதொரு பணியைச் செய்துகொண்டிருக்கும் 'அவள் விகடன்', எங்கள் நிறுவன வளர்ச்சியில்... குறிப்பாக எங்களுடைய தயாரிப்புகளை விளம்பரப்படுத்துவதில் சிறந்த பங்காற்றிக் கொண்டிருக்கிறது. இந்த 400-வது இதழிலும் 'அவள் விகட’னுடன் இணைந்திருப்பதில் நாங்கள் பெருமைப்படுகிறோம்!''

- பிரபா ரெட்டி, நிர்வாக இயக்குநர், வி கேர்

இதழுடன் வரும் வாசகிகள்!

 ''முதல்முதலாக 2000-ம் ஆண்டில்தான் 'அவள் விகடன்’ இதழில் எங்களுடைய விளம்பரத்தைக் கொடுத்தோம். தரமான பொருள் நியாயமான விலை இவற்றைக் கருத்தில்கொண்டே எங்கள் விளம்பரங்களை வடிவமைக்கிறோம். 'வாடிக்கையாளர்களே... எங்கள் முதலாளிகள்' என்பதை தாரக மந்திரமாகவே நினைத்து, அவர் களின் தேவைக்குத் தகுந்தபடி, உற்பத்தியாளர்களிடமே நேரடி யாக ஆடைகளை வாங்குகிறோம்.

விளம்பரங்கள் மக்களைக் கவருகிற வண்ணம் இருக்க வேண் டும் என்பதில் முழு கவனம் செலுத்துகிறோம். உதாரணத்துக்கு... த்ரிஷாவை மாடர்ன் உடையில் பார்த்தவர்கள், போத் தீஸ் விளம்பரத்தில் சேலையில் பார்க்கும்போது அவர்களுக்கு அந்த சேலை மனதில் அப்படியே பதிந்துவிடுகிறது.

எங்கள் வளர்ச்சியில் ‘அவள் விகடன்’!

'அவள் விகடன்' இதழில் விளம்பரங்கள் தருவதால், பெண்கள் மத்தியில் பெருமளவு சென்று சேர்ந்துவிடுகிறது. இதற்கு சாட்சி, அந்த விளம்பரம் வெளி யான 'அவள் விகடன்’ இதழுடன் நேரடியாக கடைக்கு வந்து, 'இதே மாதிரி சேலை கொடுங்க' என்று கேட்டு வாங்கிச் செல்லும் உங்கள் வாசகிகள்தான்.

'அவள் விகடன்’ 400-வது இதழுக்கு வாழ்த்துக்கள்!''

- ரமேஷ், நிர்வாக இயக்குநர், போத்தீஸ்

பயணம் சிறப்பாகவே இருக்கிறது!

''பிரின்ஸ் ஜுவல்லரியின் முதல் விளம்பரம் எனக்கு நன்றாக நினை விருக்கிறது. மக்கள் மனதில் பிரின்ஸ் ஜுவல்லரியை பதியவைக்க வேண்டும் என்பதற்காக அப்போது நாங்கள் அதி கம் மெனக்கெட்டோம். எங்கள் ஜுவல்லரியின் லோகோவை டிசைன் செய்து, விளம்பரமாக வெளியில் கொண்டுவரு வதற்கே சில மாதங்கள் ஆகிவிட்டன.

தங்கம் மற்றும் வைர நகைகள் விளம்பரம்... இப்போது நவீன தொழில்நுட்பத்துடன் இணைந்து வருகி றது. ஒரு பெண்ணின் குழந்தைப் பருவம் முதல், மணப்பெண் ஆகும் வரை அவளின் அனைத்துத் தேவை களுக்கும் உரிய தங்கம் மற்றும் வெள்ளி நகைகளை வழங்குவதில் பிரின்ஸ் ஜுவல்லரி பெருமைப்படுகிறது.

எங்கள் வளர்ச்சியில் ‘அவள் விகடன்’!

பிரின்ஸ் ஜுவல்லரியின் வர்த்தகத்துக்கு விளம்பரங்கள் பெரிதாகவே உதவி செய்கின்றன. உதாரணத்துக்கு, வரிசையாக செல்லும் எறும்புகள் தங்கள் முதுகில் வளையலை சுமந்து செல்வது போல் வரும் விளம்பரம், லைட் வெயிட் நகைகள் பிரின்ஸ் ஜுவல்லரியில் கிடைக்கும் என்பதை அழகாக எடுத்துச் சொல்லும். இந்த மாதிரியான கற்பனைத் திறனும் டெக்னா லஜி வளர்ச்சியும் இந்த நவீன காலத்தில் நமக்கு கிடைத்திருப்பது மகிழ்ச்சியே. அதேபோல் தங்கம், வைரம் மட்டு மல்லாது... பிளாட்டினம் நகைகளுக்கும் விளம்பரங்கள் பெரிதும் துணை நிற்கின்றன.

குறிப்பாக, 'அவள் விகட’னுடனான பிரின்ஸ் ஜுவல்லரியின் பயணம் சிறப் பாகவே உள்ளது. எங்கள் விளம்பரத்தை வாசகர்களிடம் கொண்டு சேர்த்ததில், 'அவள் விகடன்’ மிகவும் உதவியாகவே இருக்கிறது.''

- பிரின்ஸன் ஜோஸ், மேனேஜிங் டைரக்டர், பிரின்ஸ் ஜுவல்லரி

'லைட் வெயிட்' இளையதலைமுறை!

''ஜி.ஆர்.டி. ஜுவல்லரி ஆரம்பித்த காலகட்டங்களில் வந்த விளம்பரங்கள் எல்லாம் பொதுவான நகைக்கடையில் இருந்து வெளிவரும் விளம்பரங்கள் போலத்தான் இருந்தன. அதன் பிறகு தான் மக்களுடைய மனநிலை, அவர்களுடைய விருப்பம், இன்றைய இளையதலைமுறையினரின் விருப்பம் என்று எல்லாவற்றையும் ஆராய்ந் தறிந்து, எல்லோருடைய எண்ணத்தையும் பிரதிபலிப்பது போல விளம் பரங்களை வெளியிட ஆரம்பித்தோம்.

எங்கள் வளர்ச்சியில் ‘அவள் விகடன்’!

மூத்த தலைமுறையைப் பொறுத்த வரை தங்கம் என்பது விசேஷங்களுக்கும், எப்போதாவது அணிந்து செல்கிற ஒரு விஷயமாகவும் எடுத்துக் கொள்ளப்பட்டது. ஆனால், இன்றைய இளையதலைமுறையோ... தினமும் அணிந்து செல்லும் வகையிலான 'லைட் வெயிட்' தங்க நகைகளையே அதிகம் எதிர்பார்க்கிறது. எனவேதான், அவர்களை நோக்கியே எங்களுடைய விளம்பரங்கள் எடுத்துச் செல்லப்படு கின்றன. இதற்காக 'லைட் வெயிட்' தங்க நகைகளை விளம்பரம் மூலமாக அறிமுகப்படுத்தும்போது... எங்களிடம் எப்படிப்பட்ட கலெக்ஷன்ஸ் இருக்கின் றன என்பதை எல்லோருக்கும் தெரிவிக்கவும் முடிகிறது!

'நகைகள் மேளா' என்கிற பெயரில் விதம்விதமான எக்ஸிபிஷன்ஸ் நடத்துவது எங்களுடைய சிறப்பு. இதைப் பற்றிய விளம்பரங்களை வெளியிடும்போது, மக்களை எளிதாக நாங்கள் சென்றடைகிறோம் என்பதில் எங்களுக்கு மகிழ்ச்சியே!''

- ராதாகிருஷ்ணன், மேனேஜிங் டைரக்டர், ஜி.ஆர்.டி. ஜுவல்லரி

நவீன மங்கையரை ஈர்க்கும் நல்வழி!

''முதன் முதலாக நாங்கள் அறிமுகப்படுத்திய 'சின்ட்ரல்லா' பட்டு பாவாடையை மறக்கவே முடியாது. சிறுவர் முதல் பெரியவர் வரை மனம் கவர்ந்த இந்த விளம்பரம், அன்று தமிழ்நாட்டையே கொள்ளைகொண்டது!

எங்கள் வளர்ச்சியில் ‘அவள் விகடன்’!

சமீபத்தில் ஒரு பெண் முகூர்த்தப்புடவை வாங்க வந்திருந்தார். அவர், 'சின்ன வயதில் பெற்றோரின் கரம்பிடித்து பட்டுப்பாவாடை வாங்க இதே கடைக்கு வந்தவள் நான். இப்போது, வாழ்க்கைத் துணை கரம் பிடிப்பதற்காக... பட்டுப்புடவை வாங்க வந்திருக்கிறேன்' என்று அறிமுகப்படுத்திக் கொண்டது... எங்கள் நிறுவனத்தின் பெருமையை எங்களுக்கே சொல்வது போலிருந்தது!

ஒவ்வொரு முறையும் மக்களை எங்கள் பக்கம் திருப்புவதற்காக விதம் விதமான யுக்திகளை விளம்பரங்களில் கடைபிடிக்கிறோம். புகழ்பெற்ற ராஜா ரவிவர்மனின் தமயந்தி ஓவியத்தை பட்டுப்புடவையின் முந்தானையில் நெய் தது, பாரதியாரின் 'சின்னஞ்சிறு கிளியே’ பாடலுக்கேற்ற அபிநயங்களை சேலையின் முந்தானை மற்றும் பார்டரில் நெய்தது, 108 நாட்டிய முத்திரை களை நெய்தது, ரிவர்சிபிள் பட்டுப்புடவை என்று எப்போதும் மக்களின் ரசனை களைப் புரிந்து... அவர்களை ஆச்சர்யப்படுத்திக் கொண்டே இருக்கிறோம்.

எங்கள் விளம்பரங்கள் பாரம்பரியம் மாறாத எதார்த்த வாழ்க்கைக்கு ஏற்றாற்போலத்தான் எப்போதுமே இருக்கும். இவை, 'அவள் விகடன்' மூலமாகச் செல்லும்போது, நவீனகால மங்கையரை நிச்சயம் கவர முடியும்... முடிந்திருக்கிறது என்பதைப் பகிர்வதில் எங்களுக்குப் பெருமையே!''

- சிவக்குமார், நிர்வாக இயக்குநர், ஆரெம்கேவி