Published:Updated:

பிரியதர்ஷினி...'லேடி ஆஃப் தி இயர் !'

பிரியதர்ஷினி...'லேடி ஆஃப் தி இயர் !'

 ப்ரீத்தி பிரியதர்ஷினி... சமுதாய அக்கறையின் இளம் கிளை. வகுப்பறைகளுக்கு வெளியேயும் சமுதாய மாற்றத்துக்காக அக்கறைப்பட்டதால், இன்று மாலத்தீவு, தென்கொரியா என்று பல நாடுகளுக்கும் சென்று 'சோஷியல் வொர்க் கேம்ப்’களில் கலந்துகொள் ளும் வாய்ப்பைப் பெற்றிருக் கிறார். சமீபத்தில் கிடைத்த 'இந்திரா காந்தி அவார்டு’, இவருடைய சாதனை பயணத்தின் வெளிச்சம்!

பிரியதர்ஷினி...'லேடி ஆஃப் தி இயர் !'
##~##

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

''திருச்சிதான் சொந்த ஊர். அப்பாவுக்கு ரயில்வேயில் வேலை. அம்மா, திருச்சி காவேரி கல்லூரியில் அக்கவுன்டன்ட். ப்ளஸ் டூ-வில் 86 சதவிகித மதிப்பெண்கள் எடுத்து, இன்ஜினீயரிங் கவுன்சிலிங்குக்காக காத்திருந்த நாட்கள்ல அம்மா வேலை பார்த்த கல்லூரிக்குப் போய் வந்தேன். பிரின்சிபால் சுஜாதா மேடம், 'சோஷியல் வொர்க்' கோர்ஸ் பத்தி எனக்குச் சொல்ல, 'கவுன்சிலிங் வரைக்கும் படிக்கலாம்’னு 'பேச்சிலர் ஆஃப் சோஷியல் வொர்க்ஸ்' (BSW) கோர்ஸ்ல விளையாட்டா சேர்ந்தேன். முழுக்க சமுதாயத்தின் பக்கங்களைப் புரிய வைக்கற அந்தப் பாடத்துல ஈடுபாடு அதிகமாக, மெரிட்ல கிடைச்ச இன்ஜினீயரிங் ஸீட்டை வேணாம்னு சொல்லி, பி.எஸ்.டபுள்யூ கோர்ஸையே கண்டினியூ பண்ணிட்டேன்'' எனும் ப்ரீத்தி... மதிப்பெண்களுக்காக அல்லாமல், சகமனிதன் மீதான அக்கறைக்காக படித்ததுதான் அவருடைய வளர்ச்சிக்கான அஸ்திவாரம்!

''விளிம்புநிலை மக்களின் அறியாமை, அவங்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள், அவங்களோட கண்ணீர், வலினு எல்லாம் அந்தக் கோர்ஸ் மூலமா தெரிஞ்சுது. 'ஐம்பது ரூபாய்தானே!'னு நம்மில் பலர்  ரொம்ப எளிதா செலவழிக்கிறோம். ஆனா, அதே ஐம்பது ரூபாயை சம்பாதிக்க ஒரு ஏழைக் குடும்பம் எவ்வளவெல்லாம் கஷ்டப்படறாங்கனு தெரிஞ்சப்போ, அதிர்ந்தேன். அவங்களுக்காக ஏதாவது செய்யணும்னு தோழிகள்கூட சேர்ந்து குழுவை ஏற்படுத்தினேன். கல்லூரி பக்கத்துல இருக்கற குடிசைப் பகுதி மக்கள்கிட்ட சுகாதாரம், கல்வி, சுயதொழில்னு விழிப்பு உணர்வு ஊட்டுற முயற்சியில இறங்கினப்போ... 'படிக்கிற வேலையைப் பார்க்காம, எங்களுக்கு ஏன் தொந்தரவைக் கூட்டுறீங்க?’னு அந்தப் பெண்கள் சலிச்சுக்கிட்டாங்க. அவங்களுக்குள்ள விஷயத்தைக் கடத்தறதுக்கு என்ன வழினு யோசிச்ச எங்களுக்கு கை கொடுத்துச்சு தெருக்கூத்து (ஸ்ட்ரீட் ப்ளே)'' என்ற ப்ரீத்தி,

''புகையிலை, மது, ஹெச்.ஐ.வி-னு அவங்களுக்கு நெருக்கமான பிரச்னைகளை நாடகம் மூலமா நாங்க பேசினப்போ, காது கொடுத்துக் கேட்டாங்க. பாதிக்கப்பட்டவங்களே எழுந்து எங்களோட இணைஞ்சு, தங்களோட வாழ்க்கையை மத்தவங்களுக்கு எச்சரிக்கைப் பாடமா சொன்னாங்க. அடுத்த கட்டமா, மருத்துவமனை, சிகிச்சைகள்னு பிரச்னைகளுக்கான தீர்வுகளை பிராக்டிகலாவே செயல்படுத்தி கொடுத்தோம்'' எனும் ப்ரீத்தி, சென்னை, டி.ஜி. வைஷ்ணவா கல்லூரியில் 'மாஸ்டர் ஆஃப் சோஷியல் வொர்க்ஸ்' படிப்பில் சேர்ந்து, அங்கேயும் தன் சேவைப் பயணத்தைத் தொடர்ந்திருக்கிறார் இன்னும் வேகத்துடன்.

இந்த ஆர்வமும் அக்கறையும்தான் 'கோலசரஸ்வதி கோல்ட் மெடல்’, 'லேடி ஆஃப் தி இயர்’ என கல்லூரி அளவிலான பரிசுகள் முதல்... இந்திய அளவிலான 'இந்திரா காந்தி அவார்டு’ வரை பல பாராட்டுகளைப் பெற்றுத்தந்துள்ளது.

இதுமட்டுமா... ப்ரீத்தியின் கைகளில், கேம்பஸ் இன்டர்வியூ மூலம் தனியார் நிறுவனத்தின்   ஹெச்.ஆர் பணியும் இப்போதே ரெடி!

- ம.மோகன்
படம்: அ.ரஞ்சித்