Published:Updated:

பொதுத் தேர்வுக்கான விசேஷ சலுகைகளைப் பெறுவது எப்படி?

பொதுத் தேர்வுக்கான விசேஷ சலுகைகளைப் பெறுவது எப்படி?

கொஸ்டீன் ஹவர்

''என் மகளுக்கு, உள்ளங்கை மற்றும் உள்ளங்காலில் அதிகப்படியாக வியர்த்துக் கொட்டும் பிரச்னை இருக்கிறது. 'இப்பிரச்னையை சரிசெய்ய அறுவை சிகிச்சை செய்யலாம்' என்றார் டாக்டர். 'அந்த அளவுக்கெல்லாம் போக வேண்டுமா?' என்று யோசித்த நாங்கள், அதைத் தவிர்த்து விட்டோம். ஆனால், பள்ளித் தேர்வுகளின் போதுதான் அந்தப் பிரச்னை படுத்தி எடுக்கிறது. உள்ளங்கை வியர்வை காரணமாக தேர்வுத்தாள் நனைவதால், கைக்குட்டை வைத்துக்கொண்டு சமாளிக்கிறாள் பள்ளியின் அனுமதியோடு. அதேசமயம், இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத இருப்பதால், கைக்குட்டைக்கு அனுமதி கிடைக்குமா? என்று தெரியவில்லை. கிடைக்கும் என்றால், அதை எப்படிப் பெறுவது?'' என்று கேட்டிருக்கிறார் பெரம்பூர் ஆர்.வைதேகி சிற்றம்பலம். பதில் தருகிறார் திருச்சி மாவட்ட முன்னாள் முதன்மைக்கல்வி அலுவலர் முத்துக்கிருஷ்ணன்.

பொதுத் தேர்வுக்கான விசேஷ சலுகைகளைப் பெறுவது எப்படி?

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
 ##~##
''அரசுப் பொதுத்தேர்வுகளில் கலந்துகொள்ளும் மாணவ, மாணவியர்களுக்கு என பொதுவான விதிமுறைகள் இருக்கின்றன. தேர்வு எழுதுபவர்கள் தேர்வறையில் நடந்து கொள்வதற்கான நெறிமுறைகள், உள்ளே எடுத்துச் செல்லவதற்கு அனுமதிக்கப்பட்ட பொருட்கள் என பல கட்டுப்பாடுகள் உண்டு. இதில் சலுகை பெற வேண்டுமானால்... உரிய காரணத்தோடும், முறையான அத்தாட்சிகளோடும் தலைமையாசிரியர் பரிந்துரையோடு, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மூலமாக பள்ளிக்கல்வி இயக்குநரகத்துக்கு விண்ணப்பித்து, முறையான அனுமதியைப் பெற்று டென்ஷன் இன்றி மாணவர்கள் தேர்வெழுதலாம்.

உதாரணத்துக்கு, பார்வைத்திறன் அல்லது செவித்திறன் அற்றவர்கள் மற்றும் குறைபாடுள்ள மாணவர்களுக்கு, அவர்கள் சொல்லச் சொல்லக் கேட்டு தேர்வு எழுதி உதவும் 'ஸ்கிரைப்’ அமர்த்தப்படுவார்கள். இன்னும் சிலருக்கு இரண்டு மொழிப்பாடங்களில் ஏதேனும் ஒன்றை எழுத

பொதுத் தேர்வுக்கான விசேஷ சலுகைகளைப் பெறுவது எப்படி?

சலுகை அளிக்கப்படும். 'டிஸ்லெக்ஸியா’ குறைபாடுள்ளவர்கள், கூடுதல் தேர்வு நேரத்தைப் பெறமுடியும். இதேபோல விபத்தில் கையில் அடிபட்டு தேர்வெழுத முடியாது தவிப்பவர்கள், திடீர் உடல்நலக்கோளாறால் இதே சங்கடத்தில் தவிப்பவர்களுக்கும் சம்பந்தப்பட்டவரின் கோரிக்கையின் அடிப்படையில் வழக்கமான விதிகள் தளர்த்தப்படுகின்றன.

அரசுப் பொதுத்தேர்வுகளில் மேலே குறிப்பிட்டது போன்ற சில பொதுவான பிரச்னைகளுக்கு மட்டுமே அளிக்க வேண்டிய சலுகைகள், விதிவிலக்குகள் பற்றிய தெளிவான வழிகாட்டுதல் களும், முன் வரையறைகளும் இருக்கின்றன. அதனால் டிஸ்லெக்ஸியா, பார்வை, பேச்சு, செவித்திறன் குறைபாடுள்ள வர்கள் எளிதில் அவர்களுக்கான சலுகைகளைப் பெற்று விடலாம். ஆனால், உங்கள் மகளுக்கு ஏற்பட்டுள்ளது போன்ற வித்தியாசமான பிரச்னை உள்ளவர்கள், அரசின் வழிகாட்டுதல் குறிப்புகளில் அதற்கான வழிகாட்டல்கள் இருக்காது என்பதால், அனுமதி பெற முன்கூட்டியே விண்ணப்பிப்பது நல்லது.

உங்கள் மகளின் மருத்துவச் சான்றுகள் மற்றும் மருத்துவரின் அறிக்கை, அரசு பரிந்துரைக்கும் ஒரு பொது அறுவை சிகிச்சை நிபுணர் அளிக்கும் மருத்துவச் சான்று, இவற்றோடு ஏற்கெனவே மெடிக்கல் போர்டின் சான்று ஏதேனும் இருப்பின் அதனையும் இணைத்து தலைமை ஆசிரியரின் பரிந்துரையோடு மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் வழியாக பள்ளிக் கல்வித்துறையின் சம்பந்தப்பட்ட இணை இயக்குநர் பார்வைக்கு விண்ணப்பிக்க வேண்டும். பொதுவாக இதுபோன்ற விண்ணப்பங்கள் பொதுத்தேர்வுக்கு முன்னதாக ஜனவரி மாதத்தில் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்பதால், நவம்பர் அல்லது டிசம்பரிலேயே அனுப்பி வைக்கலாம்.

முன்கூட்டியே முறையான சிறப்பு அனுமதியைப் பெற்றுவிடுவது தேர்வாளருக்கும், மேற்பார்வை செய்யும் பணியில் இருப்பவர்களுக்கும் கடைசி நேர சங்கடங்களைத் தவிர்க்கும். கூடுதல் விவரங்களுக்கும் சந்தேகங்களுக்கும் உங்கள் மகளின் தலைமையாசிரியர் வாயிலாக மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகத்தை நாடலாம்.''