Published:Updated:

'இது மதுரைதானா?!’

'இது மதுரைதானா?!’

- இப்படி ஆச்சர்யம் தந்தது, 'VIBES 360’ ஃபேஷன் ஷோ!

மதுரை, அண்ணாநகரில் உள்ள 'ட்ரீம் ஸோன்’ கிரியேட்டிவ் ஸ்டடீஸ் இன்ஸ்டிடியூட்டின் ஃபேஷன் டிசைனிங் மாணவர்கள் வடிவமைத்த ஆடைகளை... சென்னை, பெங்களூரு என வந்திருந்த மாடல்கள் அணிந்து அறிமுகம் செய்த இந்நிகழ்ச்சி, கலர்ஃபுல் விருந்து!

சட்டம், ஒழுங்கு துணை ஆணையர் சம்மந்த் ரோஹன் ராஜேந்திரா, 'வாழை’ உணவகம் ராஜகுமாரி ஜீவகன், ஃபேஷன் டிசைனர் மம்தா ஃபோர்மா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்ற இந்நிகழ்ச்சியில்... சீஸனல் ஆடைகள், செலிப்ரிட்டி ஆடைகள், மணப்பெண் உடைகள், ஸ்ட்ரீட் ஃபேஷன், டிசைனர் வேர் எனும் ஐந்து தலைப்பில் மாணவர்கள் ஆடைகளை வடிவமைத்திருந்தனர். நிகழ்ச்சியின் இடையே நடத்தப்பட்ட நடனப் போட்டிகளும், திடீர் போட்டிகளுக்கும் சந்தோஷ சர்ப்ரைஸ்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
'இது மதுரைதானா?!’

தமிழ்நாடு முழுக்க கிளைகள் கொண்ட, 'ட்ரீம் ஸோன்’ பயிற்சி நிறுவனத்தின் மதுரைக் கிளை அலுவலர் தங்க ராஜேஸ்வரி, ''மதுரையில் ஃபேஷன் டிசைனிங் படிப்புகள் பற்றி இன்னும் பெரிய விழிப்பு உணர்வு இல்லை. இந்தத் துறைக்கு உள்ள முக்கியத்துவம், வரவேற்பு, மாணவர்களோட திறமைனு எல்லாவற்றையும் எடுத்துச் சொல்வதே இந்த ஃபேஷன் ஷோவின் நோக்கம்'' என்றார்.

'ரேம்ப் வாக்’கில், பிளாக் அண்ட் வொயிட்டில் அசத்திய ஃபிஷ் கட் டிசைன், பூக்கள் மலர்ந்திருந்த ஃபிராக், கறுப்பு மற்றும் கோல்டன் ஸ்டோன்கள் பதித்த செலிப்ரிட்டி வேர் என கண்ணெடுக்க முடியாமல் கவர்ந்தன ரகம் ரகமான ஆடைகள். டிரெண்டியான உடைகள் ரசிக்க வைக்க, இன்னொருபுறம் 'பிரைடல் வேர் தீம்’-ல் டிரெடிஷனல் ஸ்டைல்களில் கலக்கிஇருந்ததோடு, நம் பாரம்பரியத்தைப் பிரதிபலிப்பதாக நகைகளையும் அதிகமாகப் பயன்படுத்தியிருந்தனர் மாணவர்கள்.

'இது மதுரைதானா?!’
'இது மதுரைதானா?!’

விழா ஹிட் ஆனதில், ஆடைகளை உருவாக்கிய மாணவர்களிடம் மகிழ்ச்சியும் உற்சாகமும். அவர்களில் ஒருவரான அபெக்ஷா, ''இந்த நாளுக்காக கிட்டத்தட்ட ஒன்றரை மாதங்களாக நாங்க உழைச்சிருக்கோம். ஷோவுக்கான மெட்டீரியல்கள் எல்லாம் பெங்களூரு போய் பர்ச்சேஸ் செய்தோம். கிட்டத்தட்ட 80 வகையான மெட்டீரியல்களை இதில் பயன்படுத்தியிருக்கோம். ஒரு ஃபேஷன் ஷோ நடத்துவதில் உள்ள பொறுப்பு, நடைமுறைப் பிரச்னை, அதை எதிர்கொள்ற பக்குவம்னு எல்லாத்தையும் இப்போ கத்துக்கிட்டோம்!'' என்றார் உற்சாகமாக!

- ந.ஆஷிகா,   படங்கள்: பா.காளிமுத்து