Published:Updated:

டெரர் ட்ரீஈஈஈஈஈஈஈஈட்..!

டெரர் ட்ரீஈஈஈஈஈஈஈஈட்..!

'ஹேய்ய்ய்... ஊஊஊ... ஆஆஆ...’னு கேர்ள்ஸ் சவுண்ட் விட, சேலம், 'ஃப்ளேக்ஸ் ரெஸ்டாரன்ட்’ அதகளமாயிட்டு இருந்தது. கொஞ்சம் டெரர்ராகி எட்டிப் பார்த்து, ''என்ன நடக்குது இங்க..?''னு கேட்டா... 'பீம்ம்ம்ம்ம்ம்' ஸ்டைல்ல.... 'ட்ரீஈஈஈஈட்!’னு பொண்ணுங்க கத்தினதுல... அங்க இருந்த பலருக்கும் அரை நிமிஷத்துக்கு ஸ்பீக்கர் அவுட்.

''ஒரு ட்ரீட்டுக்கு இவ்வளவு அளப்பறையா?''னு தெரியாத்தனமா கேட்டுட்டோம்... கையில் வேப்பிலை இல்லாமலே சாமியாடிட்டாங்க பொண்ணுங்க!

''என்ன கேள்வி கேட்டுட்டீங்க? சாமிக்குத்தம் ஆகிப்போச்சே! காலேஜ் பசங்க அரியர் இல்லாமகூட இருப்போம் (!), ஆனா, ட்ரீட் இல்லாம இருக்கவே மாட்டோம். பரீட்சையில பாஸானா ட்ரீட்... ஃபெயிலானாலும் ட்ரீட், அப்பா பாக்கெட் மணி கொடுத்தா ட்ரீட், புரொஃபஸர்கிட்ட திட்டு வாங்கினா ட்ரீட், ஹாஸ்பிட்டல்ல அட்மிட் ஆகி டிஸ்சார்ஜ் ஆனா ட்ரீட், ஃப்ரெண்ட்ஸ் சண்டை போட்டா ட்ரீட், சேர்ந்துகிட்டா ட்ரீட்... இப்படி நாங்க கேட்காத ட்ரீட்டும் இல்ல, கொடுக்காத ட்ரீட்டும் இல்ல. ட்ரீட் இல்லைனா, இந்த வாழ்க்கை வாழ்ந்து என்ன பிரயோஜனம்!''

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

- ஒரே குரல்ல பொண்ணுங்க சொன்னாங்க... கேம்பஸ் தத்துவம்.

டெரர் ட்ரீஈஈஈஈஈஈஈஈட்..!

தொடர்ந்து, 'ட்ரீட்’ சம்பிரதாயங்களைப் பொண்ணுங்க சொல்ல, ஒண்ணு விடாம குறிச்சுக்கிட்டோம். குஷியா ஆரம்பிச்சாங்க, கிருத்திகா... ''பொதுவா ட்ரீட்டுக்கு வழக்கமா சாப்பிடுற ரெஸ்டாரன்ட், காபி ஷாப், ஐஸ்க்ரீம் பார்லர்னு போகாம... புதுசு புதுசா இடம் கண்டுபிடிச்சுப் போவோம். அந்த வகையில, சேலம் சிட்டியில இருக்கற ஹோட்டல், ரெஸ்டாரன்ட் அத்தனையும் காலேஜ் முடிக்கறதுக்குள்ள எங்களுக்கு அத்துப்படி ஆகிடும். அதேமாதிரி, வழக்கமா சாப்பிடுற அயிட்டம் எல்லாம் 'உவ்வே’னு ஒதுக்கி வெச்சுட்டு, பெயரே வாய்க்குள்ள நுழையாத புதுப்புது அயிட்டங்களை எல்லாம் ஆர்டர் பண்ணி அட்டூழியம் பண்ணுவோம். ஏன்னா, பில் கொடுக்கப் போறது வேற பயபுள்ளதானே!''னு சொல்ல,

''வெய்ட்டீஸ்... நான் சொல்றேன்''னு அடுத்த ரவுண்டை ஆரம்பிச்ச தாரணி,

''ட்ரீட்டுக்குக் கிளம்பும்போது, ஏதோ கல்ச்சுரல்ஸுக்கு கிளம்பற மாதிரி கலக்கலா டிரெஸ் பண்ணிட்டுப் போவோம். ஏன்னா, போட்டோஸ் எடுத்து ஃபேஸ்புக்ல போடுவோம்ல! அயிட்டங்கள் எல்லாம் டேபிளுக்கு வந்ததும், 'இவ்ளோ ஆர்டர் பண்ணியிருக்கோம்டா மக்கா!’னு கெத்து காட்ட ஒரு 'க்ளிக்’, சாப்பிட்டு முடிச்சதும் காலி பிளேட்ல கையைத் துடைச்ச டிஷ்யூ பேப்பரைப் போட்டு ஒரு 'க்ளிக்’னு எடுத்து, ஃபேஸ்புக்ல போட்டா, லைக்ஸ் கொட்டும்ல!''னு பெருமையா சொன்னாங்க.

''டெங்கு ஃபீவரா இருக்குமோனு போர்வை யைப் போர்த்திட்டுக் கிடந்தாலும், 'ட்ரீட்’னு மெஸேஜ் வந்தா, உடனே அடிச்சுப் பிடிச்சுக் கிளம்பி வந்துடுவோம். ஏன்னா, அது ட்ரீட்ங்க!''னு அதோட முக்கியத்துவத்தை அழுத்திச் சொன்ன ஜெகஜோதி,

''சரியில்லாத சாப்பாடு, சுத்தமில்லாத ரெஸ்டாரன்ட்னு விருந்தோம்பல் (!) சரியில்லாம போனா... ட்ரீட் கொடுக்கற பட்சி காலி. அவ மேல சாஸ் பூசி, தண்ணி ஊத்தி, 'இனிமே மொக்கை ட்ரீட் கொடுப்பியா, கொடுப்பியா...’னு கொலவெறி ஆகிடுவோம். இப்படி ஒருமுறை விளையாடிட்டு (!) இருக்கும்போது, தங்க மோதிரத்தை தொலைச்சுட்டா பிருந்தா. அதைத் தேடுறேன் பேர்வழினு ரெஸ்டாரன்ட்ல சாப்பிட்டு இருந்தவங்களை எல்லாம் கிரிமினல்ஸ் மாதிரி செக் பண்ணி, ஸீட்டை எல்லாம் பிய்ச்சு எடுத்துனு ஆர்ப்பாட்டம் பண்ணிட்டா. கடைசியில பார்த்தா, கையைத் துடைக்கும்போது டிஷ்யூ பேப்பரோட மோதிரத்தையும் உருவி பிளேட்ல போட்டிருந்தா''னு டெரர் தகவல் சொல்ல, நைஸா எஸ்கேப் ஆகி... வெளியில வந்தோம். அங்க பார்த்தா... கையேந்தி பவன்ல 'ட்ரீட்’ கொண்டாடிட்டு இருந்தது இன்னொரு கேங்.

''ஹோட்டலா இருந்தா என்ன, கையேந்தி பவனா இருந்தா என்ன... கலாட்டாவோட கலக்கலா சாப்பிடணும்.... அதுதான் ட்ரீட்!''னு தீபிகா சொல்ல,

''எக்ஸாம்ஸ் நெருங்கிடுச்சு. இப்போதான் ஃபீஸ் கட்டியிருக்கோம். வீட்டுல பாக்கெட் மணி கறக்குறது கஷ்டம். அதுக்காக ட்ரீட் இல்லாம இருக்க முடியுமா? அதான் இருக்கற காசுக்கு இதுபோதும்னு கையேந்தி பவனுக்கு வந்துட்டோம்!''னு அபி பிரஷோதரா சொல்லிட்டிருக்கும்போதே...

''ட்ரீட்ல எப்பவும் ஃபைனல் டச் உண்டு. இல்லாட்டி ரகளை ஆயிடும்ப்பா...''னு தனலஷ்மி சொல்ல, ''ஐஸ்க்ரீம்...''னு கத்தினாங்க கீர்த்தி.

''எவளாவது வித்தியாசமான ஃபிளேவர் வாங்கினா, அந்த ஐஸ்கிரீம் அவளுக்கில்லைனு ஆயிடும். எல்லாரும் பாய்ந்து அதை 'டேஸ்ட்’ பார்த்துடுவோம். அதனால, முன் ஜாக்கிரதையா 'எனக்கு வெனிலா போதும்’னு சொல்றவதான் இங்க புத்திசாலி!''னு வெனிலாவை வெளுத்துக்கட்டினபடியே சொன்னாங்க கவிதா!

ரொம்ப சின்னப்புள்ளத்தனமா இருக்குல்ல!

- ந.அபிநயரோஷிணி  

படங்கள்: க.தனசேகரன்