Published:Updated:

பறக்குது வெள்ளைக் கொடி!

க.சுபராமன் , படம் : தி.குமரகுருபரன் 

ன்னதான் சொல்லுங்கள்.... வெள்ளை நிற சட்டை என்றால், அதன் மகத்துவமே தனி. அதிலும் இந்தத் தேர்தல் நேரத்தில் எங்கு திரும்பினாலும், பளீரிடுவது வெள்ளை நிற சட்டைகளே! வேட்டிக்குத்தான் என்றில்லாமல், இப்போதெல்லாம் நீல நிற ஜீன்ஸுக்கும்கூட பளீர் வெள்ளைச் சட்டை அணிவதுதான் ஃபேஷனாக இருக்கிறது!

பறக்குது வெள்ளைக் கொடி!
பறக்குது வெள்ளைக் கொடி!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

ஏற்கெனவே தன் தயாரிப்புகள் பலவற்றிலும் 'வெள்ளைக்கொடி' பறக்கவிட்டுக் கொண்டிருக்கும் ராம்ராஜ் நிறுவனம்... இந்த நேரம் பார்த்து கேஷ§வல் மற்றும் ஃபார்மல் சட்டைகளை அசத்தலாக அறிமுகப்படுத்தியிருக்கிறது. கூடவே, இந்த வெள்ளைச் சட்டைகளுக் கான பிரசார தூதராக தமிழக கிரிக்கெட் நட்சத்திரம் அஸ்வின் ரவிச்சந்திரனையும் அழைத்து வந்திருப்பதுதான் ஹிட்!

83-ம் ஆண்டு முதல் வேஷ்டி, ஷர்ட்டுகள் மற்றும் உள்ளாடை கள் தயாரிப்பில் முன்னோடி யாக விளங்கும் 'ராம்ராஜ்’ நிறு வனத்தின் புதிய வெண்மை நிற ஷர்ட்டுகள், சென்னை, ரெயின் ட்ரீ ஹோட்டலில் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டன.

நிகழ்வில் பேசிய 'ராம்ராஜ்’ நிறுவன அதிபர், கே.ஆர்.நாகராஜன், ''தென்னிந்தியாவில் மிகுந்த வரவேற்பு பெற்றுள்ள எங்கள் தயாரிப்புகளை, வடமாநிலங்களிலும் பிரபலமாக்கும் முயற்சியின் ஒரு பகுதியாகத்தான், கிரிக்கெட் வீரர் அஸ்வின் ரவிச்சந்திரனை, எங்கள் நிறுவன தூதுவராக அறிமுகப்படுத்தியுள்ளோம். எங்கள் நிறுவனத்தைப் போலவே, இந்தியா முழுவதும் அஸ்வினும் கிரிக்கெட் டுக்கான தமிழக அடையாளமாகத் திகழ்கிறார்'' என்று சொல்லி, அஸ்வினை பளீரெனச் சிரிக்கவைத்தார்!

''ராம்ராஜ் நிறுவனத்தில் துணியானது நூலால் மட்டுமின்றி, கலாசாரம், பாரம்பரியம் ஆகியவற்றாலும் நெய்யப்படுவதுதான் சிறப்பே! 'சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத வண்ணம் கொண்ட வெண்மை நிற ஆடைகளை மட்டுமே தயாரிப்போம்' எனும் இவர்களின் கொள்கை என்னை மிகவும் கவர்கிறது'' என்று பாராட்டிவிட்டு, வெள்ளைச் சட்டையில் அசத்தலாக நடை போட்டார் அஸ்வின்!