Published:Updated:

களைகட்டிய வாசகிகள் திருவிழா!

செ.கிஸோர் பிரசாத் கிரண்,  படங்கள் : ர.சதானந்த் 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

வேலைப்பளுவை மறந்து, விளையாடி மகிழ்ந்த அந்தத் தருணம், நம் வாசகிகளுக்கு நீண்ட நாள் நினைவில் நிற்கும். அப்படிப்பட்ட ஒரு குதூகலத் திருவிழாவான 'வாசகியர் திருவிழா’... சென்னை, டேம்ஸ் சாலையில் உள்ள பி.எஸ்.என்.எல். அலுவலக வளாகத்தில், மார்ச் 22 அன்று நடந்தேறியது. 'பி.எஸ்.என்.எல்.' நிறுவனம், 'ஜி.ஆர்.டி. ஜுவல்லரி' மற்றும் 'அவள் விகடன்' இணைந்து நடத்திய இந்நிகழ்வை, முகம் நிறைய எதிர்பார்ப்புடன் எதிர்கொண்டனர்... பி.எஸ்.என்.எல். ஊழியர்களான நம் வாசகிகள்!

முதலில் மைக் பிடித்த பி.எஸ்.என்.எல். நிறுவன சீஃப் ஜெனரல் மேனேஜர் பாலசுப்ரமணியன், ''ஆண்கள் அலுவலகம் சென்று வேலை பார்த்து சம்பாத்தியம் தருவதோடு சரி. ஆனால், பெண்கள் அப்படி அல்ல... அலுவலகம் செல்வதுடன், வீட்டையும் பார்த்துக் கொண்டு தங்கள் வேலை நேரத்தை இருமடங்காக்கிக் கொண்டிருக்கிறார்கள். இந்த அடிப்படையான விஷயத்திலேயே பெண்கள் எப்படிப்பட்ட பொறுப்பாளிகள், திறமைசாலிகள் என்பதை புரிந்துகொள்ள முடியும். எங்கள் நிறுவனத்தைப் பொறுத்தவரை ஆண்களுக்கும், பெண்களுக்கும் சரிசமமான உரிமையும், மரியாதையும் அளிக்கப்படுகிறது. பொதுவாகவே பெண்கள் சிறப்பாக பணியாற்றுகிறார்கள்'' என்று போற்றிப் புகழ்ந்தார்.

களைகட்டிய வாசகிகள் திருவிழா!

சிறப்பு விருந்தினராக வந்திருந்த மனநல மருத்துவர் அபிலாஷா, ''இந்த பரபர உலகத்தில் சமீபகாலமாக 'ஹவுஸ் வொய்ஃப் சிண்ட்ரோம்’ என்கிற மனநோய் பரவி வருகிறது. வீட்டிலேயே இருக்கும் பெண்கள், தங்களுடைய சுக துக்கங்களை வெளிப்படையாக பகிர்ந்துகொள்ளக்கூட முடியாத மன அழுத்த நிலையில் இருக்கிறார்கள். விளைவு... டி.வி சீரியல்களுக்கு தங்கள் நேரத்தை தின்னக் கொடுக்கிறார்கள். சீரியல்கள் பெரும்பாலும் பெண்களுக்கு மன உளைச்சலைத் தான் தருகின்றன. இதன் காரணமாக நாளுக்கு நாள் அதிகரிக்கும் மன பாதிப்பானது, இறுதியில் உடலில் கோளாறுகளைக் கொடுத்துவிடுகிறது'' என்று எச்சரித்தவர்,

களைகட்டிய வாசகிகள் திருவிழா!

''குடும்பத்தில் உள்ளவர்களிடம் கஷ்ட நஷ்டங்களைப் பகிர்ந்துகொள்வதற்கான நேரத்தை அனைவருமே ஒதுக்குவதன் மூலம், இதிலிருந்து தப்பிக்கலாம். ஒருவேளை இந்த பாதிப்பு அதிகமாக இருந்தால்... மனநல மருத்துவரை அணுகலாம்'' என்று அழகான ஆலோசனையும் சொன்னார்.

இதையடுத்து, வாசகிகள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த கலகல போட்டிகள் ஆரம்பமாயின. முதல் போட்டி, ஸ்டிக்கர் போட்டி. போட்டியாளர்கள் ஜோடியாக கலந்துகொள்ளும் இதில், ஒருவரின் நெற்றியில், ஒரு சினிமா நடிகரின் ஸ்டிக்கரை மற் றொருவர் ஒட்ட வேண்டும். ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருப்பவர், அது யார் என்பதை, தன் ஜோடியிடம்

களைகட்டிய வாசகிகள் திருவிழா!

நேரடியாக கேட்காமல், பற்பல கேள்விகளை எழுப்பி, 'ஆம், இல்லை’ என்கிற பதில்களை மட்டுமே பெற்று, விடையைக் கண்டுபிடிக்க வேண்டும்.

அடுத்து, 'பேக் பாஸ்ஸிங்’ போட்டி. தலையில், முகத்தில் அணிந்துகொள் ளக்கூடிய மாஸ்க் போன்ற பொருட் கள் நிரம்பிய ஒரு பை தயாராக இருக்கும். இசை ஒலிக்கும்போது... அந்தப் பை ஒருவர் கையிலிருந்து மற்றவருக்கு மாறிக்கொண்டே இருக்கும். இசை நிறுத்தப்படும்போது யார் கையில் பை உள்ளதோ, அவர்கள் குறிப்பிட்ட நேரத்துக்குள் அதில் உள்ள பொருட்களை எடுத்து அணிந்துகொள்ள வேண்டும். யார் அதிகமான பொருட்களை அணிகிறார்களோ, அவர்களுக்குப் பரிசு.

மூன்றாவதாக 'பலூன் ஸ்டிக்கர்’ போட்டி. வாசகிகள் போட்டிபோட்டுக் கொண்டு இதில் பங்கேற்றனர். ஒரு நிமிடத்துக்குள் பலூனை ஊதி, கட்டி, அதன் மீது ஸ்டிக்கர் பொட்டினை பிரித்து ஒட்ட வேண்டும். அதிக அளவில் யார் ஒட்டுகிறார்களோ அவர்களுக்குப் பரிசு.

இதற்கிடையே... ஜி.ஆர்.டி நிறு வனம் ஸ்பெஷலாக நடத்திய வளையல் பிரித்து வைக்கும் போட்டியும் நடந்தது. கூட்டம் அலைமோதிய அந்தப் போட்டியில் பரிசுபெற்றவர், நிர்மலா.

ஒரு 'மினி ஜாலி டே' எனும் அளவுக்கு வாசகிகளைக் குதூகலிக்க வைத்த இந்நிகழ்வின் அனைத்துப் போட்டிகளுக்கான பரிசுகளையும் ஜி.ஆர்.டி. நிறுவனம் வழங்கியது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு