'நீ எங்கிருந்து வந்தாய்... எங்கே போகப் போகிறாய் என்பதைத் தெரிந்துகொள்... தெய்வத்தைப் புரிந்துகொள்வாய்’ என்று அன்புடன் கூறும் பகவான் ஸ்ரீசத்ய சாயிபாபாவின் தெய்விகப்பாதைக்கு... சத்தியப்பாதைக்கு நான் வந்தது எப்படி?

கனவுகளும் கற்பனைகளும் எண்ணங்களும் எதிர்பார்ப்புகளும் வண்ணமிகு வாழ்க்கையும் முன்னேற்றங்களும் மும்முரமாய்க் கும்மியடித்துக் கொண்டிருந்த எனக்குள், அமைதியானதொரு தபோவனம் உருவானது எதனால்?

'பக்தியில்லாமல் செய்யும் கடமை, அடித்தளமில்லாமல் சுவரெழுப்புவது போன்றது. கடமையில்லாமல் புரியும் பக்தி, சுவரெழுப்பாமல் நிற்கும் அடித்தளம் போன்றது. பக்தியோடு கூடிய கடமையே அடித்தளத்தோடு கூடிய வாழ்க்கை என்னும் கட்டடமாகும்’ என்று கூறும் ஸ்வாமியின் வழியில் என்னை ஈர்த்தவை என்னென்ன?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சத்தியப் பாதையில்..!

ஆன்மிகம் பற்றி சொல்வதற்கு பக்குவமோ ஞானமோ எனக்கில்லை. என் ஆன்மிக அனுபவமென்பது... சின்னஞ்சிறு சுடர்... மின்மினி... இந்த சிறுவெளிச்சத்தில் நான் கண்ட தெளிவுதான் என்ன?

தெய்வத்தைப் பற்றி சொல்வதும்கூட அப்படித்தான். ஸ்வாமி சொல்வதைப் போல 'விண்மீனால் ஆகாயத்தை அளக்க முடியுமா?’

- இந்தக் கேள்விகளுக்கெல்லாம் 'இந்தத் தொடர்’ பதிலாகலாம். ஓரளவுக்கு நான் உணர்ந்ததையும், ஸ்வாமி பாபா தந்த ஒரு சில தெய்விக அனுபவங்களையும் உங்களோடு பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

சத்தியப் பாதையில்..!

என் வாழ்க்கையும் ஒரு புத்தகமே... அதில் தேவையான அல்லது போதுமான பக்கங்களை மட்டுமே இங்கு புரட்டப் போகிறேன்.

எனக்குள்ளிருந்து எழுதுவதும் பேசுவதும் சாயியே! இந்த இனிய தொடர் என்னைப் பொறுத்தவரை சாயிசங்கல்பமே!

'எல்லா உலகங்களும் நலமடையட்டும் எல்லாரும் நலம் பெறட்டும்’ என்ற ஸ்வாமியின் பிரார்த்தனை வாசகத்தை அன்றாடம் சொல்பவள் நான். உங்களுக்குள் இந்தத் தொடர் ஏதேனும் ஒருவிதத்தில் திருப்தியையோ... திருப்பத்தையோ தருமேயானால், அதுவே எனக்கு மகிழ்ச்சி!

'ஆனந்த விகடன்’ எப்போதேனும் நான் வந்து போகும் அன்பான குடும்பம். 'அவள் விகடன்’ வாசலுக்கு வருவதென்னவோ இப்போதுதான். 'அவள் விகடன்’ கண்மணிகளே! இந்த நம் சந்திப்பு... உங்களுக்கு நல்லதொரு மகிழ்ச்சியையும் நற்பயனையும் தரவேண்டுமென்று எல்லாம் வல்ல பகவான் ஸ்ரீசத்ய சாயிபாபாவின் பொற்பாத கமலங்களை வணங்கிப் பிரார்த்திக்கிறேன்!

ஜெய் சாயிராம்

அன்புடன்,

பொன்மணி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism