உறவுச் சிக்கல்களுக்கு உருப்படியான தீர்வு!படம் : ப.சரவணகுமார்
''பிரச்னை இல்லாத மனிதர்களே இந்த உலகத்தில் இல்லை. ஆனால், அதை எதிர்கொள்வதில்தான் ஒருவரின் வெற்றி - தோல்வி, துயரம் - நிம்மதி எல்லாமும் இருக்கிறது. அதை, தானே சரிசெய்து கொள்கிறவர்கள் சிலர்... பிறரின் துணை தேவைப்படுபவர்கள் சிலர். அந்த 'பிறர்’, உங்களின் பிரச்னையை மேலும் குழப்புபவர்களாக, தவறான வழிகாட்டலை வழங்குபவர்களாக இருந்துவிடக் கூடாது என்பதுதான் முக்கியம்.
எலும்பில் பிரச்னை என்றால், அதற்கான சிறப்பு மருத்துவரை நாடிச் செல்வதைப்போல, மனதில் பிரச்னை என்றால், மனநல மருத்துவரை நாடிச் செல்வதில் எந்த தயக்கமும் வேண்டாம்''
- அக்கறையோடு பேசும் சென்னையைச் சேர்ந்த மனநல மருத்துவர் அசோகன், இன்று தமிழகத்தின் பிரபல மனநல மருத்துவர்களில் ஒருவர்! பல்வேறு அரசு மருத்துவமனைகளில் பணிபுரிந்தவர், கல்லூரிகளில் பேராசிரியர், தற்போது தேசிய மனநல மருத்துவச் சங்கத்தின் தலைவர்.

நேரடியாக பல்லாயிரம் பேருக்கும், பல்வேறு தொலைக்காட்சிகள், பத்திரிகைகள் மூலமாக பல லட்சம் பேருக்கும் மன உளைச்சலில் இருந்து மீண்டு வர தீர்வுகள் வழங்கிக்கொண்டிருக்கும் இவர், உறவுச் சிக்கல்களைத் தீர்ப்பதில் காட்டும் அக்கறை, தொழில் என்பதையும் தாண்டி தூய்மையானது.
''என் மருத்துவத்தில் நான் நம்புவது... 'தீர்வில்லாத பிரச்னை என்று எதுவும் இல்லை’ என்பதைத்தான்! குறிப்பாக, கணவன் - மனைவி உறவுச் சிக்கல்களையே இன்று அதிக எண்ணிக்கையில் எதிர்கொள்கிறேன். திருமண வாழ்க்கையில் கணவன், மனைவிக்கான ரோல் என்ன? அவர்களுக்குள் பிரச்னைகள் எப்படியெல்லாம் வருகிறது? அவற்றை தொடர்ந்து நீடிக்கவிடாமல் செய்ய என்ன வழி?
கணவன் - மனைவி உறவே பிரச்னைக்குரிய உறவுதான். அதேசமயம், மகிழ்ச்சிகரமான புரிதல்கள் இருக்கக்கூடிய உறவும் அதுதான். அப்படிப்பட்ட உறவில் விரிசல்கள் வராமல், புரிதல்களைக் கொண்டு ஜெயிப்பது எப்படி?
கணவன் - மனைவி தங்களுக்குள் பகிர்ந்துகொள்ள வேண்டிய விஷயங்கள் என்னென்ன? அதை எப்படி பகிர வேண்டும்? பிரச்னையே இல்லாத விஷயத்தை, பெரும் பிரச்னையாகக் கருதி நீதிமன்ற படியேறும் தம்பதிகள் சிந்திக்க வேண்டிய விஷயங்கள் என்ன?
இப்படி கணவன் - மனைவி உறவுக்குள் தினம் தினம் எழும் பிரச்னைகள், அதனால் உண்டாகும் விரிசல்கள், அதிலிருந்து வெளிவரும் வழிகள்... உள்ளிட்ட பல விஷயங்களையும் சொல்லக் காத்திருக்கிறேன். கேட்டுப் பயன்பெற தினம் மூன்று நிமிடம் ஒதுக்குங்கள்... இல்லற வாழ்வு இனிமையாகட்டும்..!''
என்றும் அன்புடன்,
மனநல மருத்துவர் அசோகன்
ஏப்ரல் 8 முதல் 21 வரை
04466802932 (சாதாரண கட்டணம்)
இந்த எண்ணுக்கு ஒரு போன் போடுங்கள்.