Published:Updated:

குட்டீஸ் குறும்பு!

வாசகிகள் பக்கம்

குட்டீஸ் குறும்பு!

வாசகிகள் பக்கம்

Published:Updated:

ஒவ்வொன்றுக்கும் பரிசு:

குட்டீஸ் குறும்பு!

 200

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

'ஐயாம் வெயிட்டிங்!’

நான் பணிபுரிந்து வந்த ஆரம்பப் பள்ளியின் குழந்தைகளை, விளையாட்டு மைதானத்துக்கு அழைத்துச் சென்றேன். அதில் ஒரு குரூப் குழந்தைகள் ரயில் விளையாட்டு விளையாடப் போவதாகச் சொல்லி... ஒரு குழந்தை இன்ஜின் டிரைவர், இன்னொன்று டிக்கெட் பரிசோதகர் மற்றும் சில குழந்தைகள் காபி, டீ விற்பவர்கள், நிறைய பேர் பயணிகள் என விளையாட ஆரம்பித்தனர். ஒரு சிறுவன் மட்டும் இதில் சேராமல் ஒதுங்கி நின்றதைப் பார்த்து, ''நீ ஏன் விளையாடல... உனக்கு இந்த விளையாட்டு பிடிக்கலையா?’' என்று கேட்டேன். ''நானும் விளையாடிட்டுதான் இருக்கிறேன்'' என்றவன், ''இது நான் போக வேண்டிய வண்டி இல்லை. என் ரயிலுக்குக் காத்துக்கிட்டு இருக்கேன்'' என்றானே பார்க்கலாம்!

குட்டீஸ் குறும்பு!

விளையாட்டைக்கூட 'சீரியஸாக’ எடுத்துக்கொண்டு, அதில் கற்பனையைப் புகுத்தும் இந்தக் காலத்து பிள்ளைகள் சூப்பர் இன்டெலிஜென்ட்தானே?!

- சாந்தி நாதன், பெங்களூரு

குட்டீஸ் குறும்பு!

'படாஃபட்’ கேள்வி!

குடும்பத்துடன் கொல்கத்தாவில் வசிக்கும் என்னுடைய அண்ணன், ஒருநாள் எங்கள் வீட்டுக்கு வந்திருந்தான். அம்மா, அப்பாவும் அங்கேதான் இருக்கிறார்கள். நாங்கள் பேசிக்கொண்டிருந்தபோது, என் மூன்று வயது மகன், ''பாட்டி, தாத்தா ஏன் வரல..?'' என்று கேட்டான். அதற்கு, என் அண்ணன், ''நீ கூப்பிடல... அதான் வரல'' என்று விளையாட்டாக சொன்னான். ''உங்களையும்தான் நான் கூப்பிடல... நீங்க மட்டும் எப்படி வந்தீங்க..?'' என்று என் மகன் 'சட்’டென்று கேட்டதும், எங்களால் சிரிப்பை அடக்க முடியவில்லை.

குட்டீஸ் குறும்பு!

- உஷா ராஜகோபால், செகந்திராபாத்

கரகாட்டக்காரன் கிளப்பிய 'கிக்கிரி பிக்கிரி’!

ஒரு விடுமுறை நாளில், சின்னத்திரையில் ஒளிபரப்பான 'கரகாட்டக்காரன்’ திரைப்படத்தைக் குடும்பத்துடன் கண்டுகளித்துக் கொண்டிருந்தோம். ஒரு காட்சியில் நடிகர் சண்முகசுந்தரம், நடிகை காந்திமதியிடம், ''அதை எப்படி அக்கா நான் என் வாயாலே சொல்லுவேன்!'' என்று உணர்ச்சி பொங்க வசனம் பேசினார். அதைப் பார்த்தவுடன் என் அக்கா பெண் காவியா வியப்புடன், ''ஏன் சொல்ல முடியாது! அந்த தாத்தா வாயில் புண்ணா?'' என்று கேட்டுவிட்டு, ''சொல்ல முடியலேனா... பேப்பர்ல எழுதிக் காட்டலாமே'' என்று 'ஐடியா’ வேறு கொடுத்தாள். பிறகென்ன... வீட்டில் ஒரே 'கிக்கிரி பிக்கிரி’தான்!

- எஸ்.நிர்மலா, திருப்பாலை

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism