Published:Updated:

40 ஆயிரம் ரூபாய் தரும் நங்கநல்லூர் இன்ஃபோ!

இளம்பெண்ணின் இணைய முயற்சி

40 ஆயிரம் ரூபாய் தரும் நங்கநல்லூர் இன்ஃபோ!

இளம்பெண்ணின் இணைய முயற்சி

Published:Updated:

'நங்கநல்லூர் இன்ஃபோ' (www.nanganallurinfo.in)

- கலக்கிக்கொண்டிருக்கிறது இப்படியொரு வெப்சைட்!

தென்சென்னையில் இருக்கும் நங்கநல்லூர் பற்றிய ஏ டு இஸட் தகவல்கள் அனைத்தையும் தொகுத்து வழங்கும் இந்த வெப்சைட், வாணிஸ்ரீயின் மூளைவண்ணம்! 'ஒவ்வொரு ஊர் பற்றியும் இதுபோல் ஒரு வெப்சைட் இருந்தால் நன்றாக இருக்குமே' என்கிற ஆசையையும், அதை வெற்றிகரமான தொழிலாக ஆரம்பிக்கும் எண்ணத்தையும் சேர்த்தே விதைத்திருக்கிறார் இந்த இளம் எனர்ஜி!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''நான் பிறந்தது, வளர்ந்தது எல்லாம் இந்த நங்கநல்லூர்தான். விஷ§வல் கம்யூனிகேஷன் முடிச்சதும், என் தோழிகள் எல்லோரும் வேலை தேடினாங்க. ஆனா, எனக்கு இன்டர்வியூ போக பிடிக்கல. மத்தவங்களை இன்டர்வியூ பண்ற மாதிரி ஒரு தொழிலதிபர் ஆகணும்னு ஆசை. இந்த வெப்சைட் ஐடியா கிளிக் ஆச்சு.

40 ஆயிரம் ரூபாய் தரும் நங்கநல்லூர் இன்ஃபோ!
40 ஆயிரம் ரூபாய் தரும் நங்கநல்லூர் இன்ஃபோ!

நானும் என் ஃப்ரெண்ட் கீர்த்தனாவும் நங்க நல்லூரைச் சுற்றிவந்து, எல்லா கடைகளையும் அணுகி, வெப்சைட்டுக்காக அவங்களோட விவரங்களை சேகரிச்சோம். 'உங்களுக்கு ஏன் என் கடையோட விவரங்களைத் தரணும்? இத னால எங்களுக்கு என்ன லாபம்?’னு பலரும் பல கேள்விகள் கேட்டாங்க. 'நான் ஆரம்பிக்கப் போற வெப்சைட்ல நங்கநல்லூரைப் பத்தின எல்லா தகவல்களையும் தொகுக்கிறேன். உதாரணமா, நங்கநல்லூரில் பட்டுப்புடவைக் கடை எங்க இருக்குனு தெரிஞ்சுக்க என் வெப் சைட்டைப் பார்க்கறவங்களுக்கு, உங்களோட கடை விலாசம் கிடைக்கிறது வசதியா இருக்கும். அந்த வகையில் அது உங்கள் வியாபாரத்துக்கான விளம்பரமாவும் அமையும். இப்படி பல விலாசங் களையும் என் வெப்சைட் மூலமா மக்களை பார்க்க வைக்கிறதுலயே எனக்கான லாபத்தை எடுத்துடுவேன்'னு பலருக்கும் சொல்லிப் புரிய வைத்தேன்'' எனும் வாணிஸ்ரீ, கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் இதற்காக களத்தில் சுழன் றிருக்கிறார்.

''ஃப்ரீலான்ஸ் டிசைனரான என் அக்கா தமிழரசிகிட்ட இந்த ஐடியாவை சொல்ல, அவங்க என்னை உற்சாகப்படுத்தி, கிட்டத்தட்ட நான்கு மாதங்கள் உழைச்சி வெப்சைட் லோகோ, டிசைன் எல்லாம் செய்து தந்தாங்க. உடனடியா, கால் டாக்ஸி, சினிமா தியேட்டர், பள்ளி, மருத்துவமனை, பேக்கரினு நான் சேகரிச்ச அனைத்து கமர்ஷியல் ஏரியாக்களின் விவரங்களையும் 61 தலைப்புகள்ல என் வெப்சைட்டில் தொகுத்து வெளியிட்டேன்'' என்பவர், அதன் பின் தன் வலைதளத்தை இன்னும் மெருகேற்றியிருக்கிறார்.

''அடுத்தகட்டமா, நங்கநல்லூரில் நடக்கும் நிகழ்ச்சிகள் அனைத்தையும் வெளியிட்டேன். அதுக்காக நியூஸ் ரிப்போர்ட்டர்களா ரம்யா, நிவேதிதானு ரெண்டு பேரை நியமிச்சேன். இவங்க ரெண்டு பேர்கூட போட்டோகிராஃபர் பிரித்வி காந்தியும் சேர்ந்து, நங்கநல்லூரின் எல்லா ஏரியா நிகழ்வுகளையும் என்னோட வலைதளத்துக்கு கொண்டு வந்து சேர்த்துடுவாங்க. அந்தந்த ஏரியாவில் இருக்கும் திறமைசாலிகளையும் வெளிச்சத்துக்கு கொண்டு வர்றாங்க. அதேபோல, ஹேமாஸ்ரீ மார்க்கெட்டிங் பொறுப்பை பார்த்துக்கறாங்க'' என்று தன் ஊழியர்களை அறிமுகப்படுத்தியவரின் வெப்சைட், நங்கநல்லூர், பழவந்தாங்கல், ஆதம்பாக்கம், வேளச்சேரி, மடிப்பாக்கம், கீழ்க்கட்டளை என ஆறு ஏரியாக்களை கவர் செய்கிறது.

''ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்து இந்த வெப்சைட்டை ஆரம்பிச்சேன். தொடங்கின ஏழே மாசத்துல என்னோட மாத வருமானம் 40 ஆயிரம் வரை ரீச் ஆகியிருக்கு. 'சின்ன பொண்ணு, என்ன ஏதுனு தெரியாம காலை வெச்சி மாட்டிக்காம, பேசாம இரு’னு அடக்கிப் போடுற பெற்றோரா இல்லாம, என் முயற்சிக்கும் ஆர்வத்துக்கும் பக்கபலமா இருந்த எங்கப்பா, அம்மாவுக்கு இந்த வெற்றி சமர்ப்பணம்!''

- அழகாகச் சிரிக்கிறார் வாணிஸ்ரீ!

- சுகன்யா வர்மா,  படம்: தி.குமரகுருபரன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism