Published:Updated:

கோ... கோ... மெக்ஸிகோ!

ம.பிரியதர்ஷினி

கோ... கோ... மெக்ஸிகோ!

ம.பிரியதர்ஷினி

Published:Updated:

ந்தமான் சென்று வந்தாலே நமக்கு வெளிநாடு டூர் போய் வந்த உணர்வுதான். இந்நிலையில், இங்கிருந்து புறப்பட்டுபோய் காலமெல்லாம் வெளிநாடுகளிலேயே வாழ்ந்துகொண்டிருக்கும் நம்மவர்களின் டூர் அனுபவம் எப்படி இருக்கும்? அயல்நாட்டில் வசிக்கும் 'அவள் விகடன்' வாசகிகள் சிலரிடம் கேட்டோம்!

சுபஸ்ரீ மோகன், சீனா: ''தாய்லாந்து, இந்தியாவின் தாக்கம் நிறைந்த நாடு என்பதால், அங்கே போக முடிவெடுத்தோம். அந்த நாட்டு விமான நிலையத்தோட பேரே, 'ஸ்வர்ண பூமி’. தாய்லாந்து மக்கள் அங்க வர்ற சுற்றுலா பயணிகள்கிட்ட‌ ரொம்ப பணிவாவும், அன்பாவும் இரு கைகளையும் குவித்து, தலை குனிந்து, 'சுவாதி கப்’னு சொன்னப்போ, நம்மோட 'வணக்கம்’தான் ஞாபகம் வந்தது.

கோ... கோ... மெக்ஸிகோ!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

புத்த மதத்தை பின்பற்றும் நாடுங்கறதனால, எங்கெங்கும் புத்தர் சிலைகள். மிக பிரமாண்டமா சயன கோலத்துல புத்தர் படுத்திருக்கிற 'வாட்போ’ புத்தர் கோயில், கருணையே வடிவானது. தங்கத்தகடு போர்த்தப்பட்ட, சுமார் ஐந்து டன் எடை  கொண்ட அந்த புத்தர் சிலையை, ரெண்டு கண்களால் விழுங்க ரொம்ப நேரம் ஆச்சு. மாரியம்மன், லஷ்மினு இந்து கோயில்களும் அங்க இருக்கு.

அடுத்து நாங்க போன இடம், மிதக்கும் படகு சந்தை. சின்ன பழத்துல ஆரம்பிச்சி பெரிய பெரிய வியாபாரம் வரைக்கும் படகுல வெச்சிதான் நடக்குது. அங்க பேரம் பேசுறதை வேடிக்கை பார்க்கறது, பக்கத்து படகு நம்மைக் கடந்து போறப்ப அதுல உள்ள பொருட்களை வேடிக்கை பார்க்கறதுனு நேரம் போறதே தெரியாது. தீவுகள், ஏராளமான தென்னை மரங்கள், பிரமாண்டமான அரண்மனைகள்னு பார்க்க அப்படியே கேரளாவுக்குள்ள நுழைஞ்ச மாதிரியே இருந்துச்சி. 'ஹுரத்’ங்கிற இடத்துல இந்தியன் உணவு விடுதிகள் நிறைய இருக்கு. விசாவும் சுலபமா கிடைக்கறது... தாய்லாந்து நாட்டோட ஸ்பெஷல்!

கோ... கோ... மெக்ஸிகோ!
கோ... கோ... மெக்ஸிகோ!

மத்திய சீனாவின் ஹெனான் மாநிலத்தைச் சேர்ந்த புராதன நகரான லெவுயாங் நகரில் உள்ள, சுமார் 1,400 குகைகளை உள்ளடக்கிய லாங்மன் குகை, ஆச்சர்ய தரிசனம். ஒவ்வொரு குகையிலும் விதவிதமா சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட புத்தர் சிலைகள் இருக்கு. இந்த குகையில வாழ்ந்த துறவிகள், தவம் செஞ்சுகிட்டே ஒவ்வொரு சிலையா செதுக்கினாங்களாம். 1 அடி உயரத்துல ஆரம்பிச்சி... 57 அடி உயரம் வரைக்கும்கூட சிலைகள் இருக்கு. ஷியான் நகரத்துல சுமார் 200 ஆண்டுகள் பழமையான, ஏழாயிரம் போர் வீரர்களோட சுடுமண் சிற்பங்கள் நிக்கறத பார்த்து, சும்மா அசந்து போயிட்டோம்.''

ஆர்த்தி (நார்த் கலிஃபோர்னியா, அமெரிக்கா): ''அமெரிக்கா வர்றவங்க முதல்ல மெக்ஸிகோதான் பார்க்கணும். ரம்மியமான இடம். அமெரிக்காவுக்கு வர்ற பழங்கள், வேலைக்குக்

கோ... கோ... மெக்ஸிகோ!

கிடைக்கிற ஆட்கள் எல்லாமே மெக்ஸிகோவுல இருந்துதான். அமெரிக்காவோட செகண்ட் லாங்வேஜ், ஸ்பானிஷ். அந்தளவுக்கு மெக்ஸிகோவோட தாக்கம் நிறைஞ்சது அமெரிக்கா.

மெக்ஸிகோவுல வளர்ற டியூலிப் ஃப்ளவர், அங்க இருக்கிற டச் மக்கள் ஆடுற டச் டான்ஸ்... இதெல்லாம் பார்த்து மெய்மறந்து போயிட்டோம். டச் மக்களோட ஷூவை நாம போட்டுட்டு நடக்கக்கூட முடியாது; அவ்வளவு கனமா இருக்கும். ஆனா, அந்தப் பெண்கள் அதை போட்டுட்டு, அவ்வளவு அழகா டான்ஸே ஆடினது... ஆச்சர்யத்தோட உச்சத்துக்கு கொண்டு போயிடுச்சி.

அமெரிக்கானு சொன்னாலே... கட்டாயம் நயாகரா நீர்வீழ்ச்சி விசிட் இருக்கும். அது எங்களுக்கு நல்ல அனுபவம். கனடா, அமெரிக்கா ரெண்டு நாட்டு எல்லையிலதான் இருக்கு இந்த நயாகரா. இதை அமெரிக்காவில் இருந்தும் பார்க்கலாம். ஆனா... 'கனடா பாயின்ட் ஆஃப் வியூ'தான் நல்ல சாய்ஸ். இதுக்காக கனடா போறதுக்கு விசா வாங்கணும். அருவியில தண்ணி விழுற இடத்துக்கு கொஞ்ச முன்னவரைக்கும் போட்ல கூட்டிட்டு போய் காண்பிச்சாங்க. ஆஹா... டமடமனு கொட்டுற அருவியை பக்கத்துல இருந்து பார்க்கற த்ரில்லுக்கு இணையா, வேற ஒரு த்ரில் இருக்கவே முடியாது!''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism