Published:Updated:

ப்ரியதர்ஷினிக்கு முதல் வெற்றி!

ஃபாலோ-அப் ம.பிரியதர்ஷினி

ப்ரியதர்ஷினிக்கு முதல் வெற்றி!

ஃபாலோ-அப் ம.பிரியதர்ஷினி

Published:Updated:
ப்ரியதர்ஷினிக்கு முதல் வெற்றி!

ன்னைக் காதலித்து ஏமாற்றிய ஐ.பி.எஸ். அதிகாரியான வருண்குமாருக்கு எதிராக மூன்று வருடங்களாக தொடர்ந்து சட்டப் போராட்டம் நடத்திக்கொண்டிருக்கிறார் சென்னையைச் சேர்ந்த ப்ரியதர்ஷினி. இவருடைய சோகக் கதையின் ஃபாலோ-அப் செய்தியை, 25.3.2014 தேதியிட்ட இதழில், 'உன்னை விடமாட்டேன்’ என்ற தலைப்பில் எழுதியிருந்தோம். அவரின் இடைவிடாத போராட்டத்தின் பலனாக, தற்போது வருண்குமார், நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்.

முயற்சிக்கு கிடைத்திருக்கும் வெற்றி தந்த தெம்பில் பேசிய ப்ரியதர்ஷினி, ''பல அழுத்தங்களுக்கு இடையிலயும், சமூகம் தந்த மன உளைச்சலுக்கு மத்தியிலயும் விடாம போராடிட்டே இருக்கேன். வருண்குமாரை கைது செய்ய சுப்ரீம் கோர்ட் ஆர்டர் போட்ட பிறகும், பலநாள் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்த வருண், கொடுமையோட உச்சகட்டமா போலீஸ் பணியில் சேர்ந்ததோட, நடந்து முடிஞ்ச தேர்தல்ல வேலை யும் பார்த்திருக்கார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ப்ரியதர்ஷினிக்கு முதல் வெற்றி!

போலீஸ் கைகட்டி வேடிக்கை பார்த்திருக்கு. இந்த நிலையில, ஒருவழியா சென்னை, மெட்ரோ பாலிட்டன் கோர்ட்ல சரணடைஞ்சிருக்கார் வருண். தண்டனை வாங்கித்தராம நான் ஓயப்போறதில்லை'' என்று குரலில் மேலும் உறுதியைக் கூட்டிக் கொண்டு சொன்னார்.

ப்ரியதர்ஷினியின் வழக்கறிஞர் செந்தில்குமார் பேசும்போது, ''வருண் ஜாமீன்க்கு அப்ளை பண்ணினார். ஆனா, போலீஸ் அவரை தங்கள் கஸ்டடியில எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டாங்க. அதுக்கு அரசாங்க வக்கீல், இன்னிக்கே பெயில் கேஸை எடுத்து விசாரிங்கனு கோர்ட்ல பேசினார். கஸ்டடி எடுத்து விசாரிக்கிறது தொடர்பா தன்னோட வாதத்தையே முன் வைக்கல. சாதாரணமா கோர்ட்ல ரிமாண்ட் பண்ணிட்டாலே ஜெயிலுக்குத்தான் கூட்டிட்டுப் போகணும். ஆனா, வருண்குமார் ஜாமீனுக்காக கோர்ட்லயே காத்திருந்தார். இதைப்பத்தி நான் கேட்ட பிறகு, புழல் ஜெயிலுக்கு கொண்டு போனாங்க. ஆனா, 'முதுகு வலி'னு சொல்லி, உடனடியா ராயப்பேட்டை ஆஸ்பத்திரியில சேர்ந்துட்டார் வருண்குமார்.

அவரை போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரிக்கறதுக்கு சைதாப்பேட்டை கோர்ட் அனுமதிக்கல. இதை எதிர்த்தும், வருணை போலீஸ் காவல்ல விசாரிக்கிற வரைக்கும் பெயில் தரக்கூடாதுனும் ஹைகோர்ட்ல நாங்க உத்தரவு வாங்கிட்டோம். வர்ற ஏழாம் தேதி வழக்கு விசாரணைக்கு வருது. அப்ப கிடைக்கற முடிவைப் பொறுத்துதான் எங்களோட அடுத்தகட்ட நடவடிக்கை இருக்கும்'' என்று சொன்னார்.

சாதாரணமானவர்களிடமே, எளிதில் நியாயம் பெற்றுவிட முடிவதில்லை பெண்களால். அப்படியிருக்க... போலீஸ் அதிகாரி என்கிற வகையில் அசாதாரணமானவராக இருக்கும் வருண்குமாரிடம்..?

ம்... இந்த இளம்பெண், இன்னும் எத்தனை தூரம்தான் போராட வேண்டுமோ?!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism