Published:Updated:

“ஷூட்டிங்னா... காலேஜுக்கு லீவுதான்!”

மாடலிங்கில் கலக்கும் மாடர்ன் கேர்ள்ஸ்

“ஷூட்டிங்னா... காலேஜுக்கு லீவுதான்!”

மாடலிங்கில் கலக்கும் மாடர்ன் கேர்ள்ஸ்

Published:Updated:

மாடலிங், ஃபேஷன், போட்டோகிராஃபினு கலக்கிட்டிருக்கிற டீன் பட்டாம்பூச்சிகளிடம் ஒரு சிட் சாட்!

சென்னை, வள்ளியம்மாள் பொறியியல் கல்லூரியில் மூன்றாம் வருடம் படிக்கிற அதுல்யா டிகௌத்... ''நடிகை அமலா பால், என்னோட கஸின். அவங்கள பார்த்துதான் மாடலிங் பண்றதுல எனக்கும் விருப்பம் வந்துச்சி.

என்னோட நண்பர்கள் 'நாளைய இயக்குநர்’ நிகழ்ச்சிக்காக, குறும்படங்கள் எடுத்தாங்க. அதில் பல படங்களில் எனக்கு ஹீரோயின் வாய்ப்பு தந்தாங்க. 'ஏப்ரல் 11’, 'லா’, 'நிலவே நெருங்காதே’, 'முதல் பார்வை’னு நிறைய குறும்படங்கள் பண்ணியிருக்கேன். அதுவே எனக்கு மாடலிங் ஃபீல்டுக்கு விசிட்டிங் கார்டா அமைஞ்சது. 'மெகா மார்ட்’டுக்கான போட்டோ ஷூட் மறக்க முடியாதது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

“ஷூட்டிங்னா... காலேஜுக்கு லீவுதான்!”

அப்படியே வெள்ளித்திரைக்கும் ஒரு ஜம்ப் போயாச்சு. 'யமுனா’, 'நினைத்தது யாரோ’ திரைப்படங்கள்ல நடிச்சிருக்கேன்; 'கடல் மீன்கள்’, 'கபடி’ உள்ளிட்ட படங்கள்ல இப்போ நடிச்சுட்டு இருக்கேன். நான் படிக்கிற இன்ஜினீயரிங் டிகிரி, சும்மா பேருக்குதான். என் ஆசை முழுக்க முழுக்க மீடியாவில்தான். அதனால போட்டோ ஷூட், ஷூட்டிங்னா யோசிக்காம காலேஜுக்கு லீவு போட்டுடுவேன்!''னு சொல்லி, ஏரியா அதிர சிரிக்கிறாங்க.

''மாடலிங், கன்டன்ட் ரைட்டர்னு என்னோட லைஃப் அட்டகாசமா போயிட்டு இருக்கு'' என்று சிரிக்கும் உபர்சனா ஐயர், படிப்பது எத்திராஜ் காலேஜில் ஃபைனல் இயர் பிசினஸ் எகனாமிக்ஸ்.

''ஸ்கூல் முடிச்சதும் வேர்ட் ஆஃப் மவுத் மூலமாதான் மாடலிங் இண்டஸ்ட்ரியில நுழைஞ்சேன். அப்படியே முன்னேறி, தனிஷ்க், பிக்பஜார், நல்லி சில்க்ஸ் விளம்பரங்களுக்கு எல்லாம் மாடலா

“ஷூட்டிங்னா... காலேஜுக்கு லீவுதான்!”

இருந்திருக்கேன். இந்த வருஷம் விர்கோ ஈவன்ட்ஸ் நடத்தின மிஸ் சென்னை போட்டியோட டைட்டில் வின்னர் நான்தான். பாலிவுட் நடிகை மாதுரி தீட்ஷித்தோட காஸ்ட்யூம் டிசைனர் ஜூல்ஸ்கிட்ட கொஞ்சநாள் வொர்க் பண்ணியிருக்கேன். இப்ப, பியூட்டி பிகாஸ்ங்கிற இன்டர்நேஷனல் மேகஸினோட கன்டன்ட் ரைட்டரா வொர்க் பண்ணிட்டு இருக்கேன். எப்போவும் பிஸியா என்னை வெச்சிக்கற நான், இதுவரைக்கும் காலேஜுக்கு பங்க் அடிச்சதே இல்லை தெரியுமா!’' என்று சிரிக்கிறார்.

''ப்ளஸ் டூ முடிச்சதுமே போட்டோகிராஃபர் கார்த்திக் ஸ்ரீனிவாசன் சார்கிட்ட போர்ட்ஃபோலியோ பண்ணிக்கிட்டேன். அதுதான் என்னோட மாடலிங் கேரியர்க்கு ஒரு என்ட்ரி பாஸ் மாதிரி அமைஞ்சது!''னு ஆரம்பிச்ச மெகந்தி ஜாஸ்,

''டபுள்யூ.சி.சி. காலேஜ்ல விஸ்காம் படிச்சிட்டு, நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டிசைனிங்ல பி.ஜி., பேஷன் டிசைனிங் பண்ணினேன்.  படிக்கிறப்ப ஹாபியா இருந்த மாடலிங், அதுக்கப்புறம் ஃபேஷனா மாறிச்சு. அதுவே, தொழிலாவும் ஆயிடுச்சு. இப்போ சென்னையில எனக்கு சொந்தமா ஒரு டிசைனிங் யூனிட் இருக்கு. பெண்களுக்கான ஆடைகளுக்கு மட்டுமேயான அந்த யூனிட்டில், நான் டிசைன் பண்ணின ஆடைகளுக்கு நானே மாடலா இருக்கேன். இதுவரைக்கும் 250-க்கும் மேல ஃபேஷன் ஷோ பண்ணி இருக்கேன். சமீபத்தில் நடந்த கனடா நாட்டின் டொரன்டோ நகரத்தில் நடந்த 'விவா பிரைடல் ஷோ’ல கலந்திருக்கேன். ரிது குமார், விவேக் கருணாகரன், ரெஹானே, எரும் அலி போன்ற புகழ்பெற்ற ஃபேஷன் டிசைனர்கள்கூட எல்லாம் வேலை பார்த்திருக்கேன். கோக், ஆங்கர் மில்க் (ஸ்ரீலங்கா), மலபார் ஜுவல்லர்ஸ், நாதெள்ளானு நேஷனல் தொடங்கி இன்டர்நேஷனல் பிராண்ட்கள் வரை மாடலா இருந்திருக்கேன். ஐ ஆம் பிஸி ஆல்வேஸ்!''னு பை சொன்னாங்க.

பை பை!

- சுகன்யா வர்மா

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism