Published:Updated:

கேமரா பெண்!

கேமரா பெண்!

கேமரா பெண்!

கேமரா பெண்!

Published:Updated:

''நேஹா போட்டோகிராஃபி... உங்களுக்கெல்லாம் நிச்சயம் பிடிக்கும்!''

- நேஹா சாமுவேல் கொட்டும் வார்த்தை ஒவ்வொன்றிலும் தன்னம்பிக்கை தகதகக்கிறது!

''எனக்கு சின்ன வயதில் இருந்தே போட்டோகிராஃபியில் ஆர்வம். ப்ளஸ் டூ முடிச்சப்போ, 'நாளைய இயக்குநர்’ நிகழ்ச்சியில் பங்கேற்ற ஒரு டீமில் உதவி இயக்குநரா வேலை பார்த்தேன். அந்த டீம் மேட் ஒருத்தர்கிட்ட இருந்த சோனி டிஜி கேமராவை வாங்கி, போட்டோஸ் எடுத்தேன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அடுத்து, சென்னை, மகளிர் கிறிஸ்தவக் கல்லூரியில் பி.பி.ஏ ஈவ்னிங் காலேஜ் சேர்ந்தேன். அந்த நேரத்தில் ஆழ்வார்பேட்டையில் ஒரு ஜிம்மில் பார்ட் டைம் வேலை பண்ணினேன். தோழிகிட்ட சோனி டிஜி கேமராவை தினமும் 200 ரூபாய்க்கு வாடகைக்கு வாங்கி, பெரம்பூரில் இருக்கும் எங்க வீட்டில் இருந்து ஜிம்முக்கு பஸ்ஸில் போற வழியெல்லாம், ஷூட் பண்ணுவேன். நான் எடுத்த போட்டோக்களைப் பார்த்தவங்க, 'உன் போட்டோல ஏதோ ஒரு மேஜிக் இருக்கு!’னு பாராட்டுவாங்க. பலர், 'இதெல்லாம் பொண்ணுங்களுக்கு சரிப்படாத வேலை’னு சொல்லுவாங்க. ஆனா, அவங்கள்லாம் இப்போ என் வாடிக்கையாளர்கள்!'' என்று பாஸிட்டிவாகச் சிரிக்கும் நேஹா,

''போட்டோகிராஃபிதான் என் எதிர்காலம்னு வீட்டில் சொன்னேன். அம்மாவுக்கு கலக்கம். '9 டு 6 வேலை எல்லாம் எனக்கு சரிப்பட்டு வராது... கடவுள் எனக்குக் கொடுத்த திறமையை நான் வீணாக்க மாட்டேன்!’னு உறுதியா நின்னேன். அப்பா உற்சாகப்படுத்தினார். ஆனா, ஒரு புரொஃபஷனல் கேமரா கேட்டப்போ, அண்ணனை கனடா அனுப்ப நிறைய செலவு செய்திருந்ததால, அவரால வாங்கிக் கொடுக்க முடியல. ரெண்டு வருஷத்துக்கு முன்ன 'நிக்கான் D90’ வாங்கிக் கொடுத்தார்.

கேமரா பெண்!

ஆங்கிலப் பத்திரிகைகளுக்கு போட்டோகிராஃபரா வேலை பார்க்கிற நாகூர் கனிகிட்ட, வேலைக்குச் சேர்ந்தேன். ரெண்டு வருஷமா அவர்கிட்டதான் வேலை பார்க்கிறேன். எவ்வளவு கடினமான வேலையையும் ஆர்வத்தோட செய்யும் கலையை அவர்கிட்டதான் கத்துக்கிட்டேன். என்னோட திறமையைப் பார்த்த அவர், அவருக்குக் கிடைக்கிற நல்ல நல்ல போட்டோ அசைன்மென்ட்ஸ் எல்லாத்தையும் எனக்குத் தருவார். அந்த இடத்துக்கு போய் நேஹா போட்டோகிராஃபிங்கிற பேர்ல நான் என் திறமையைக் காண்பிச்சுட்டு இருக்கேன். என்னோட 'போட்டோ ஷூட்ஸ்’-க்கும் அவர் வந்து ஹெல்ப் பண்ணுவார்'' என்று சொல்லும் நேஹாவின் 'நேஹா போட்டோகிராஃபி’, இப்போது ஹை ஸ்பீடில் சென்றுகொண்டிருக்கிறது. சமீபத்தில் சி.ஐ.ஐ. (CII- Confederation of Indian Industry) ''எனக்கு முகங்களை போட்டோ எடுக்கப் பிடிக்காது; தருணங்களை சிறைபிடிக்கிறதுலதான் விருப்பம். என்னோட முதல் போட்டோ ஷூட், என் நண்பனின் பெற்றோரோட 25-வது திருமண நாள் விழா. இதுவரைக்கும் கிட்டத்தட்ட 70 ஷூட்களுக்கு மேல பண்ணிட்டேன். நான் படிச்சிட்டிருக்கற பி.பி.ஏ படிப்பானது... என் தொழிலுக்குத் தேவையான பிராண்ட் விற்பனை, வாடிக்கையாளரை அணுகுற விதம், திறமையை மெருகுகூட்டும் முறைனு எல்லாத்தையும் சொல்லிக்கொடுக்குது''

- படபடவென்று சொன்ன நேஹா,

''சொந்த ஸ்டுடியோ ஆரம்பிக்கணும்... அதை நோக்கித்தான் ஓடிட்டு இருக்கேன்!''

- 'பை’ சொல்லி கேமராவை கையில் எடுக்கிறார்!

- சுகன்யா வர்மா

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism