Published:Updated:

பறை அடிக்கும் பாவைகள்!

பறை அடிக்கும் பாவைகள்!

பறை அடிக்கும் பாவைகள்!

பறை அடிக்கும் பாவைகள்!

Published:Updated:

ல்லூரி மேடை என்றாலே... சினிமா பாடல்கள், வெஸ்டர்ன் நடனம், மிஞ்சிப்போனால்... பரதம் என்பதே வழக்கமாகிவிட்டது. ஆனால், கல்லூரி மாணவிகள் சிந்துஜாவும், அன்பரசியும் தங்களின் அழகான ஆர்வம் மற்றும் தீவிர முயற்சி காரணமாக... 'பேசும் பறை’ என்ற குழுவுடன் இணைந்து, மேடைதோறும் அதிரவைத்துக் கொண்டுள்ளனர்... பறை இசைத்து!

பறை கற்ற அனுபவத்தைவிட, அதன் பழமையையும் பெருமையையும் பேசுவதிலேயே ஆர்வம் காட்டுகிறார்கள் இருவரும்!  

''நாங்க ரெண்டு பேரும் சென்னை, அரசு இசைக் கல்லூரி மாணவிகள்...'' என்று ஆரம்பித்த அன்பரசி,

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''பறைதான் உலகத்துல தோன்றிய முதல் இசைக்கருவி. திருக்குறள்ல பறை, யாழ்னு ரெண்டு இசைக்கருவிகள் மட்டும்தான் குறிப்பிடப்பட்டிருக்கு.

பறை என்பது சாவுக்கு அடிக்கும் வாத்தியம்னு பரவியிருக்கிற எண்ணம், தவறானது. ஆதிகாலத்துல சுபகாரியம், கோயில் திருவிழாக்களுக்கு எல்லாம் பறையடிச்சிருக்காங்க. மக்கள் கூடும் இடங்கள்லயும், தகவல் தெரிவிக்கவும், விலங்குகள்கிட்ட இருந்து தங்களைப் பாதுகாக்கவும் பறையடிச்சிருக்காங்க.

பறை அடிக்கும் பாவைகள்!

இறப்புக்கு பறையடிக்கும் பழக்கம் ஏன் வந்ததுனா, பறையடிச்சும் அசையலைனா, அந்த உடலுக்கு உயிரில்லைனு உறுதிப்படுத்திக்கத்தான். அந்தளவுக்கு நரம்புகளைத் தூண்டுற இசை இது. ஆனா, பறையை சாதி பேர் சொல்லி தள்ளி வெச்சதுதான் நம்மோட சாபம்.

திருவிழாவுக்காக ஆந்திரக் கலைஞர்களை இங்க அழைச்சப்போ, அவங்க இசைச்ச கருவிக்குப் பெயர் 'டப்பு’. அதுக்குப் பிறகு நம்மோட பறை கருவியை 'தப்பு'னு கூப்பிட ஆரம்பிச்சிட்டாங்க. ஆனா, பறைங்கறதுதான் சரியான வார்த்தை. இது நம் தமிழர்களோட வாத்தியம். இதில் ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் ஒவ்வொரு வகை அடி இருக்கு. அதுதான் இதோட சிறப்பு!'' என்ற அன்பரசி, மறந்தும் காலணி அணிந்து பறையைத் தொடுவதில்லை. அதில் தெரிகிறது அவரின் அர்ப்பணிப்பு.

தொடர்ந்து பேசியவர், ''பி.சி.ஏ படிச்சிருக்கற நான், இப்போ மூன்றாம் ஆண்டு வாய்ப்பாட்டு படிச்சிட்டு இருக்கேன். எங்க கல்லூரியில் பறை பயிற்சி கிடையாது. தன்னார்வத்துலதான் பறை கத்துக்கிட்டோம். இப்போ அது எங்க வாழ்க்கையோட அங்கமாயிடுச்சு. நிறைய மாணவிகளுக்கு பறை மேல ஆசை இருந்தாலும், பெற்றோர் தடை போட்டிருவாங்க. அந்த வகையில் நான் என் அப்பா, அம்மாவுக்குத்தான் நன்றி சொல்லணும். சேலத்தைச் சேர்ந்த நடுத்தரக் குடும்பம் நாங்க. என் படிப்புக்காகத்தான் சென்னைக்கு வந்தோம். இப்போ வாய்ப்பாட்டு வகுப்புகள் எடுக்குற நான், கிராமியப் பாடல்களும், பறையும் கத்துக் கொடுக்க விரும்புறேன்'' என்றார் அன்பரசி.

சிந்துஜா பேசும்போது, ''நான் விடுதியில் தங்கிப் படிச்சேன். ஒன்பதாம் வகுப்பு படிச்சப்பவே பறை கத்துக்கிட்டேன். 'நீ நம்மோட பாரம்பரியக் கலையை கத்துக்கிறது பெருமையா இருக்கு’னு பெற்றோர் உற்சாகப்படுத்த, போட்டிகளுக்கும் விழாக்களுக்கும் போக ஆரம்பிச்சேன். ஆறு வருஷமா பறை அடிச்சிட்டு இருக்கேன்.

டீச்சர் டிரெயினிங் முடிச்சுட்டு, இப்போ அரசு இசைக் கல்லூரியில் பரதம் இறுதியாண்டு படிச்சிட்டு இருக்கேன். பரதமும் பறையும் இருதுருவங்கள். ஆனா, ரெண்டையும் என்னால சிறப்பா செய்ய முடியுது. 'பேசும் பறை’ குழுவோட இணைஞ்சு பல போட்டிகள்ல கலந்து வெற்றிபெற்றிருக்கோம். எங்களோட ஒற்றுமைதான் அதுக்குக் காரணம்!'' என்றார் பெருமையுடன்.

அதிரடியாக பறை அடித்து ஆடிக்காட்டினார்கள் இருவரும்; ரசித்துக் கொண்டேயிருந்தோம் நாம்!  

- ந.கீர்த்தனா 

படங்கள்: எஸ்.கேசவசுதன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism