Published:Updated:

என்ன பண்றாங்க இந்த கேர்ள்ஸ்?

என்ன பண்றாங்க இந்த கேர்ள்ஸ்?

என்ன பண்றாங்க இந்த கேர்ள்ஸ்?

என்ன பண்றாங்க இந்த கேர்ள்ஸ்?

Published:Updated:

செமஸ்டர் முடிஞ்சு விட்டாச்சு லீவு. பாய்ஸ் எல்லாம் 'விர்ர்ர் ர்ர்ர்’னு பைக்ல சிட்டியைச் சுத்திச்சுத்தி வந்திட்டிருக்காங்க. ஆனா, இந்த கேர்ள்ஸ் என்ன பண்றாங்க? அதைப் பார்க்கறதுக்காக ஒரு ரவுண்ட் வந்தோம்!

நந்தினி, கோவை

''நிறைய மார்க் வாங்கணும்னு என்னை ஸ்ட்ரிக்ட்டான ஸ்கூல்ல சேர்த்துவிட்டாங்க. ஏதோ ஸ்கூலோட கஸின் மாதிரி, காலேஜும் ஸ்ட்ரிக்ட்டு. நாலு வருஷமும் பரபரனு ஓடிட்டே இருந்தேன். கடைசி எக்ஸாம் முடிஞ்சப்போ, 'அப்பாடா!’னு இருந்துச்சி. ஆனா, லீவ் ஆரம்பிச்சு ஒரே வாரத்துல அந்த பரபரப்பை மிஸ் பண்றேன். ஏதோ சோம்பேறி ஆயிட்ட மாதிரி இருக்கு. ஆனாலும், இதுதானே என் வாழ்க்கையில கடைசி லீவ். வேலையில் சேர்ந்துட்டா நோ ஹாலிடேஸ்ல... அதனால ஃப்ரெண்ட்ஸோட அவுட்டிங், அப்பா, அம்மாகூட அரட்டை, வீட்டை சுத்தம் பண்றதுனு ஒரே என்ஜாய்மென்ட்தான்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நேத்து...  ஷெல்ஃபை க்ளீன் பண்ணும்போது, ஸ்கூல் டேஸ்ல நான் பயன்படுத்தின பொருட்களை எல்லாம் பார்த்து, பழைய ஞாபகங்களைப் புரட்டிட்டு இருக்கேன்!''

என்ன பண்றாங்க இந்த கேர்ள்ஸ்?

காயத்திரி, சென்னை

''இங்க நான் என் சித்தி வீட்ல தங்கிப் படிக்கிறேன். சட்டப்படி (!) லீவ் விட்டதும் மயிலாடுதுறையில இருக்கிற எங்க வீட்டுக்குப் போயிருக்கணும். ஆனா, ஃப்ரெண்ட்ஸை மிஸ் பண்ணிடுவோமோனு இங்கயே தங்கியிருக்கேன். ஃபேஸ் பேக், ஃபேஷியல்னு என்னை கொஞ்சம் கவனிச்சுக்கிறேன். சமையலும், ஏதாவது ஒரு மொழியும் கத்துக்கணும்னு முடிவுஎடுத்திருக்கேன்.

ஃப்ரெண்ட்ஸ்கூட அப்பப்போ அவுட்டிங் உண்டு. ஆனா, தியேட்டருக்கு மட்டும் போகமாட்டோம். ஏன்னா, அங்க ஒருத்தருக்கொருத்தர் பேசிக்கவே முடியாது. எல்லோருமா சேர்ந்து மீட் பண்றதே கஷ்டமா இருக்கற இந்த ஹாலிடேஸ்ல, மூணு மணி நேரம் ஃப்ரெண்ட்ஸை கூட வெச்சுக்கிட்டு பேசாம இருக்கறது எவ்வளவு பெரிய கொடுமை தெரியுமா..!''

கீர்த்தனா, திருச்சி

''நான் ஒரு ஹாஸ்டல் பறவை. அங்க நாக்கு செத்துப் போயிருந்தேன். தினமும் வீட்டில் விதவிதமான மெனு சாப்பிடணும், ருசியா சாப்பிடணும், நல்லா சாப்பிடணும்... இதுதான் என்னோட முதல் ஹாலிடே பிளான். எங்க வீட்டுல நிறைய குட்டீஸ் இருக்காங்க. அவங்ககூட விளையாடுறதுல நேரம் போறதே தெரியல.

என் மாமா பையன் ஸ்பெல்லிங் காம்படிஷன்ல சேர்ந்திருக்கான். அவனுக்கு தினமும் டிரெயினிங் கொடுக்கிறேன். டிஸ்ட்ரிக்ட் லெவல், ஸ்டேட் லெவல் எல்லாம் ஜெயிச்சு, இப்போ நேஷனல் லெவல் போகப் போறான். பெருமையா இருக்கு.

ஹாஸ்டல்ல இருந்தப்ப என் வீட்டை ரொம்ப மிஸ் பண்ணினேன். இப்போ என் ஃப்ரெண்ட்ஸை ரொம்ப மிஸ் பண்றேன். அதனால அவங்களை எல்லாம் எங்க வீட்டுக்கு கூப்பிட்டு, ஒரு நாலு நாள் ஜாலியா இருக்கப் போறோம் அப்புறம் நகைக்கடை வெச்சிருக்கிற எங்க மாமா கடைக்குப் போய், நகை தயாரிக்கிறது, சேல்ஸ் பண்றது பற்றி நிறைய விஷயங்கள் தெரிஞ்சுக்கிறேன். பேங்க், எல்.ஐ.சி., மெடிக்ளைம் பத்தி எல்லாம் தெரிஞ்சுக்கிறேன். இப்படி பரபரனு இருக்கறதால, லீவ்ல 'போர்’ என்பதற்கே வேலை இல்ல.''

என்ன பண்றாங்க இந்த கேர்ள்ஸ்?

பிரியா  ஐஸ்வர்யா, மதுரை

''ரெண்டு பேரும் ட்வின்ஸ்...'' என்று ஆரம்பித்தார் பிரியா. ''ஒரே ஸ்கூல்ல படிச்சோம். ஆனா, வேற வேற காலேஜுக்குப் பிரிஞ்சுட்டோம். அதிலும் தங்கச்சிக்கு மார்னிங் காலேஜ், எனக்கு ஈவ்னிங் காலேஜ். அதனால ஒருத்தரை ஒருத்தர் ரொம்பவே மிஸ் பண்ணிக்குவோம். அதுக்கு சேர்த்து வெச்சி இந்த லீவ்ல ஷாப்பிங், அவுட்டிங், வீட்டு வேலையில அம்மாவுக்கு ஹெல்ப்,  சொந்தக்காரங்க வீடுனு என்ஜாய் பண்ணப் போறோம்.

வீட்டுக்கு அவ ஃப்ரெண்ட்ஸ் வந்தா, 'நான்தான் ஐஸ்வர்யா’னு கலாய்ப்பேன். என் ஃப்ரெண்ட்ஸை, 'நான்தான் பிரியா’னு அவ குழப்புவா. ஜாலி எபிசோட் அது. எங்க வெளிய போனாலும், அவ ஃப்ரெண்ட்ஸ், என் ஃப்ரெண்ட்ஸ்னு பெரிய கேங்காதான் போவோம். ட்ரீட் ட்ரீட்னு ஒரே ட்ரீட் மேளாதான்.

ரெண்டு பேருமே கால் லெட்டருக்காக வெயிட்டிங். வந்ததும் மறுபடியும் ஷெட்யூல் லைஃப் ஸ்டார்ட் ஆகிடும், ஜாலி டைம் குறைஞ்சிடும்!''

- ந.ஆஷிகா 

படங்கள்: என்.ஜி.மணிகண்டன், பா.காளிமுத்து, ர.சதானந்த், தி.குமரகுருபரன்  

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism