Published:Updated:

குட்டீஸ் குறும்பு!

வாசகிகள் பக்கம்

குட்டீஸ் குறும்பு!

வாசகிகள் பக்கம்

Published:Updated:

ஒவ்வொன்றுக்கும் பரிசு:

குட்டீஸ் குறும்பு!

 200

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

'நயன்தாரா வீட்டுல தண்ணி வருது!’

ன்று குடிநீர் இணைப்புக் குழாயில் அரை மணி நேரத்தில் தண்ணீர் நின்றுவிட்டதால், கடுப்பில் இருந்தேன். வெளியே சென்றிருந்த என் பேத்தி விஷாலினி ஓடிவந்து, ''பாட்டி... நயன்தாரா வீட்டுல தண்ணி வருதாம்!'' என்று பரபரப்புடன் கூறினாள். குழம்பியபடியே வெளியே போய் விசாரித்தேன். 'நாயனக்காரர் வீட்டுலே தண்ணி வருது’ என்று யாரோ பேசிக்கொண்டிருந்ததை, சரியாக காதில் வாங்காமல், அவள் 'நயன்தாரா’ என்று சொல்லியிருக்கிறாள். இதைக் கேள்விப்பட்டு, எங்கள் தெருவே தண்ணீர் கஷ்டத்தை மறந்து சிரித்தது.

- சுப்புலட்சுமி சம்பத், மல்லசமுத்திரம்

குட்டீஸ் குறும்பு!

எலெக்ஷன் ஜோக்!

தேர்தலில் வாக்களிப்பது பற்றி சமீபத்தில் எங்கள் வீட்டில் நாங்கள் பேசிக்கொண்டிருந்தோம். என் தம்பியின் நான்கு வயது மகன், அதை உன்னிப்பாக கவனித்தான். நான், எனது கைவிரலைக் காட்டி ''நாளைக்கு எங்களோட விரல்ல மை வைப்பாங்க'’ என அவனிடம் சொன்னேன். உடனே அவன், ''வாயை 'ஆ...’னு திறந்து காட்டினா, சொட்டு மருந்து விடுவாங்களா?'' என்று போலியோ சொட்டு மருந்து விடுவதை நினைவில் கொண்டு கேட்கவும்...  வீட்டில் ஒரே சிரிப்பலைதான்!

- ஆர்.ஜெயலட்சுமி, திருநெல்வேலி

''நாங்க பாஸ்...  ஆனா டீச்சர்..?’

சென்ற வருடம், எல்.கே.ஜி-யில் இருந்து யு.கே.ஜி-க்கு உயர்த்தப்பட்ட என் அக்கா மகன் கோகுல், சம்மர் லீவுக்குப் பிறகு ஸ்கூல் சென்று திரும்பி வந்தான். அவனிடம், ''எல்.கே.ஜி-யில் எல்லாம் பாஸ் ஆயிட்டாங்களா?'' என்று கேட்டேன். அதற்கு அவன், ''எல்லாரும் பாஸாயிட்டோம்... ஆனா, அந்த டீச்சர் மட்டும் எல்.கே.ஜி கிளாஸ்லயே இருக்காங்க. சரியா படிக்கல போலிருக்கு'' என்று கவவையுடன் கூற... அவன் சிந்தனை திறமையும், அக்கறையையும் எண்ணி வியந்து சிரித்தோம்.

- ஜி.விஜயலட்சுமி, கும்பகோணம்

பாசக்காரச் சுட்டி !

சில மாதங்களுக்கு முன் எனக்கு வளைகாப்பு நடந்தது. நிகழ்ச்சிக்கு வந்திருந்த என் நான்கு வயது அக்கா மகன், என் வயிற்றைப் பார்த்துவிட்டு... ''சித்தி! உன் வயிறு ஏன் இப்படி குண்டா இருக்கு... வயித்த வலிக்குதா... பெருசா பலூன் மாதிரி இருக்கே... சீக்கிரமா டாக்டர்கிட்ட போய் ஊசி போட்டுட்டு வாங்க! இல்லேனா 'டமார்’னு வெடிச்சிடும்!'' என்று பதற்றத்துடன் அடுக்கிக்கொண்டே போக... ''வயித்துல பாப்பா இருக்கறதாலதான் வயிறு பெருசா இருக்கு. பாப்பா பிறந்ததும் சின்னதாயிடும்'’ என்று விளக்கம் கொடுத்து, அவனை அமைதிப்படுத்தினோம். இதை அவ்வப்போது நினைத்துப் பார்த்து சிரிப்பதோடு... அந்தப் பிஞ்சு உள்ளத்தில் நிரம்பியிருந்த அக்கறையை நினைத்து நெகிழ்ச்சியிலும் திளைப்பேன்!

- கே.ஜெயலஷ்மி, காரம்பாக்கம்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism