''சினிமா பார்க்க வர்றவங்க எல்லாரும், ஒரு ரெண்டரை மணி நேரத்துக்காவது எல்லாத்தையும் மறந்துட்டு கலகலனு சிரிச்சுட்டுப் போகணும்னு நினைப்பேன். அந்த வகையிலதான் குடும்ப சப்ஜெக்ட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்குற மாதிரியான படங்களை நான் இயக்க ஆரம்பிச்சேன்.

என் இனிய கதைநாயகிகள்! - 4

குடும்பங்கள்ல எப்பவுமே நம்ம தாய்க்குலங்களோட ஸ்பெஷல் பங்களிப்பு இருக்கும். அவங்களோட பிரச்னைகளையும் உள்ளுணர்வுகளையும் ரொம்ப சீரியஸா கொண்டு போகாம, நகைச்சுவையா சொல்ற மாதிரி என்னோட நாயகிகளைக் கொண்டுவந்தேன். அப்படி என் மனசுல எப்பவும் அழியாத நாயகி, 'முந்தானை முடிச்சு’ படத்துல வர்ற 'பரிமளம்’. இந்த கேரக்டர்ல ஊர்வசி நடிச்சிருப் பாங்க.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

என் நண்பரோட வாழ்க்கையில நடந்த சம்பவம்தான் 'முந்தானை முடிச்சு’. மனைவி இறந்த பிறகு, ரெண்டாவது கல்யாணம் வேண்டாம்னு ஒத்தையா கிடந்தார். யார் யாரோ... எவ்வளவோ சொல்லியும் மறுத்துட்டார். அப்ப அவரோட வாழ்க்கையில ஒரு பொண்ணு வந்தாங்க. அவங்களுக்கு, அவரைக் கல்யாணம் பண்ணிக்க ஆசை. இதை ஊரே கிசுகிசுக்க ஆரம்பிச்சாங்க. 'மனைவியை இழந்த ஒருவனை, ஒரு பெண் காதலிக்கறது தப்பா?'னு எனக்குள்ள கேள்வி எழுந்துச்சு. அந்த கேள்விக்கான முடிச்சை எடுத்து நான் போட்டதுதான்... 'முந்தானை முடிச்சு’.

கல்யாணம் வரைக்கும் விளையாட்டுப் பொண்ணா இருக்கற 'பரிமளம்’, அப்புறம் நேரெதிரா, ரொம்ப பக்குவமா நடந்துக்குவா. பெரும்பாலான பெண்கள் கல்யாணத்துக்கு அப்புறம் இப்படி சட்டுனு பக்குவமாகறதை நாம பார்த்திருக்கோம்... பார்க்கிறோம்தானே! ஹீரோவான நான், 'உன்ன நான் கெடுத்தது உண்மைனா, என் குழந்தையைத் தாண்டி சத்தியம் பண்ணு’னு சொல்லும்போது, தியேட்டரே டென்ஷனோட இருக்கும். சத்தியத்தைவிட பாசம்தான் முக்கியம்னு அந்தக் குழந்தையைத் தாண்டும் 'பரிமளம்’, அன்பைவிட தாம்பத்யம் பெருசில்லைனு வாழ்வா. ஒரு கட்டத்துல கணவனுக்காகவும், அவரோட குழந்தைக்காகவும் கருத்தடை பண்ணிக்கப் போவா. இப்படி அன்புக்காக எந்தத் தியாகமும் செய்யுற பெண்கள்தானே ஒவ்வொரு குடும்பத்தையும் தாங்கறாங்க. அவங்களுக்கு எல்லாம் என் 'பரிமளம்’ அர்ப்பணம்.

என் இனிய கதைநாயகிகள்! - 4

'அந்த ஏழு நாட்கள்’ 'வசந்தி’யை யாராலயும் மறக்க முடியாது. அம்பிகா, 'வசந்தியா’ நடிச்சிருப்பாங்க. நடிகர் சந்திரபாபுவோட கதைதான் அது. பெண்ணோட விருப்பத்தைக் கேட்காமலே கட்டாயப்படுத்தி அவருக்குத் திருமணம் செய்து வெச்சுட்டாங்க. கல்யாணத்துக்குப் பிறகுதான் சந்திரபாவுக்கு தெரிய வந்திருக்கு. அந்தப் பெண், ஏற்கெனவே ஒருத்தரை காதலிச்சிருக்காங்க. அவர் வெளிநாட்டுல இருந்த சமயம், இங்க இந்தக் கல்யாணம் நடந்திருக்கு. மனசு வலிச்சு அழுத அந்த பெண், திருமணத்துக்குப் பிறகு சந்திரபாபுவிடம் உண்மையை சொன்னப்போ, நல்ல மனசோட அவங்கள காதலனிடம் சேர்க்கறதுக்காக வெளிநாட்டுக்கு அனுப்பி வெச்சிருக்கார்.

என் இனிய கதைநாயகிகள்! - 4

சந்திரபாபுவோட புரட்சிகரமான சிந்தனை எனக்கு ரொம்பவே பிடிச்சது. இதை எத்தனை பேர் ஏத்துப்பாங்க அப்படிங்கற யோசனையோடயே படத்தை எடுத்தேன். க்ளைமேக்ஸ்ல அம்பிகாவை கல்யாணம் பண்ணிக்கிட்ட ராஜேஷ்கிட்ட, 'சாரே... என் காதலி உங்களுக்கு மனைவி ஆகலாம்; உங்க மனைவி என் காதலி ஆக முடியாது’னு சொல்லிட்டு, 'அவளை என் காதலியா திரும்பவும் நான் கூட்டிட்டுப் போகணும்னா, அவ தாலியை எடுத்துட்டு அனுப்புங்க’னு சொல்வேன். ஆனா, 'வசந்தி’ அதுக்கு உடன்படாம, தாலி கட்டினவனோட இருக்கற முடிவை எடுப்பாங்க.

தான் ஆசைப்பட்டவனோட வாழறதைவிட, தன்னைக் காதலன்கிட்ட ஒப்படைக்க நினைச்சு மிகப்பெரிய தியாகம் செய்யத் துணிஞ்ச கணவனோட நல்ல மனதுக்காக அவனை விரும்பி ஏற்றுக்கொள்ளும் 'வசந்தி’, என் அன்புக்குரியவள்.

எல்லாருமே வசந்தி மாதிரி இருக்கணும்னு நான் சொல்ல வரல. ஆனா, நம்ம கிராமத்துப் பெண்கள் மட்டுமில்ல, ஐ.டி வேலை பார்க்கிற பெண்களும், ஃப்ளைட் ஓட்டுற பெண்களும்கூட இப்பவும் கலாசாரம், பாரம்பரியம் இதுக்கெல்லாம் கட்டுப்பட்டவங்களா இருக்கறாங்க அப்படிங்கறதுதான் உண்மை.

பெண்களின் எல்லா வகையான தியாகங்களையும், அவங்களோட ஈடு இணையற்ற அன்பையும் எல்லா காலகட்டத்திலும் மதிக்கக் கூடியவன் நான். தாய்க்குலத்தின் மீது எப்பவுமே எனக்கு தனி மரியாதை உண்டு... எனக்கு வெற்றியையும், பேரையும், புகழையும் தந்த என் கதைநாயகிகளின் மீதும்!

சந்திப்பு: பொன்.விமலா

என் இனிய கதைநாயகிகள்! - 4

இப்பவும் 'வசந்தி’தான்!

''எனக்கு பெயர் வாங்கிக் கொடுத்ததுல 'அந்த ஏழு நாட்கள்’ படமும் ஒண்ணு. ஹ்யூமர் கேரக்டர்னா எனக்கு ரொம்ப பிடிக்கும். அதனால 'வசந்தி’யை ரொம்ப ரசிச்சுப் பண்ணினேன். ஒரு ஸீன்ல சகுனம் சரியா இருக்கானு பார்த்துட்டு பாக்கியராஜ் சார் கிளம்பும் போது, நான் மீன் நறுக்குவேன். சார் சொல்லிக் கொடுத்தது அவ்ளோதான். ஆனா, கூடவே மீனை நக்கிக் காட்டி 'வேணுமா’னு நான் கேட்பேன். யூனிட்டே பாராட்டினாங்க. திரையிலயும் அந்த ஸீன் பயங்கர ஹிட். பாக்கியராஜ் சார் இப்பவும் என்னை எங்க பார்த்தாலும், 'வசந்தி’னுதான் கூப்பிடுவார். நானும் அவரை இப்ப வரைக்கும் 'மாதவன்’னுதான் கூப்பிடறேன்!''

முந்திரிக்கொட்டை ஊர்வசி!

''அந்த படத்துல நான் நடிச்சதே ஒரு பாக்கியம்தான். என்னோட அக்கா கலாரஞ்சனி நடிக்க வேண்டிய படம் அது. அவ மலையாளத்துல பிஸியா இருந்ததால, ஒன்பதாவது படிச்சிட்டு இருந்த எனக்கு வாய்ப்பு கிடைச்சது. ஆரம்பத்துல அக்காவோட நானும் பாக்யராஜ் சாரை சந்திக்கப் போயிருந்தேன். டயலாக்கை அக்கா படிச்சுக் காட்டும்போது மலையாள வாடையில பேசினாங்க. உடனே அதைப் பிடுங்கி மடமடனு நான் படிச்சதும் பாக்யராஜ் சார், 'யாரும்மா அது முந்திரிக்கொட்டையாட்டம்? அப்படி தூரமா போய் உட்காரு’னு திட்டினார். அதிலிருந்து அவரைப் பார்க்கும் போதெல்லாம் முறைச்சிட்டே இருப்பேன்.

என் இனிய கதைநாயகிகள்! - 4

அப்புறம் அக்காவுக்காக நான் நடிக்க வேண்டிய சூழல் வந்தப்போ, எனக்கு விருப்பமே இல்ல. வீட்டுல இருக்கிறவங்க விருப்பப்பட்டதால ஒப்புக்கிட்டேன். அப்போ நான் நிஜமாவே விளையாட்டுப் பொண்ணு. ஷூட் முடிஞ்சவொடன, என்கூட நடிச்ச பசங்களோட விளையாடப் போயிடுவேன். நான் சரியான தூங்குமூஞ்சி வேற. 'சின்னஞ்சிறு கிளியே’ பாட்டு ஷூட் பண்ணும் போதெல்லாம், தூங்கி வழிஞ்சேன். அந்த கிராமத்துல யாராவது ஒருத்தர் வீட்டு திண்ணை கிடைச்சா போதும், சட்டுனு படுத்து தூங்கிடுவேன். 'ஹீரோயின் பாப்பாவை பார்த்தீங்களா’னு தேடிட்டு வரும் பாக்கியராஜ் சார், என்னைக் கண்டுபிடிச்சு திட்டுவார். நான் அழுவேன். 'அழற பாட்டுதான், அழுதுட்டே பாடு’ம்பார்.

கல்யாணம் ஆகாத நான், பசியில அழற குழந்தைக்கு பால் தர்ற மாதிரி ஒரு ஸீன் வரும். அதுக்குப் பிறகு ஹீரோவுக்கு என் மேல இரக்கம் வந்து, 'உனக்கு ஒரு குழந்தை பிறந்தாலும் என் குழந்தையை நீ இதே மாதிரி அன்பா பார்த்துப்பியா?’னு கேட்பார். 'பாருய்யா... உன்னையும் உன் புள்ளையையும் தவிர என் மனசுல வேற யாரும் இல்லனு சொல்ல நான் ஒண்ணும் ஆஞ்சநேயர் இல்ல. சந்தேகப்படுறதுக்குனே நீ இருக்க, சந்தோஷப்படாம இருக்க நான் இருக்கேன்’னு சொல்வேன். அந்த வசனம் இப்பவரைக்கும் எனக்கு ஞாபகம் இருக்கு. காமெடி, சென்டிமென்ட், கிளாமர்னு எல்லா ஏரியாவிலும் எனக்குப் பேர் வாங்கிக்கொடுத்த அந்த 'பரிமளம்’ மாதிரி இன்னொரு கேரக்டர் எனக்குக் கிடைக்கல.

'முந்தானை முடிச்சு’ படத்தோட பார்ட் 2... 'மாப்பிள்ளை விநாயகர்’ங்கற பேர்ல வரப்போகுது. நல்ல விஷயம்!''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism