Published:Updated:

கைவிட்ட விதி... கைகொடுத்த மதி!

தமிழ்ச்செல்விக்கு வெற்றி தந்த ஜூட் பேக் வே.கிருஷ்ணவேணி, படங்கள்: எம். உசேன்

கைவிட்ட விதி... கைகொடுத்த மதி!

தமிழ்ச்செல்விக்கு வெற்றி தந்த ஜூட் பேக் வே.கிருஷ்ணவேணி, படங்கள்: எம். உசேன்

Published:Updated:

'கைவசம் பல லட்சம் ரூபாய் முதலீடு, பெருசா ஒரு இடம், நிறைய தொழிலாளர்கள்... எல்லாம் இருந்தாதான் ஒரு பெரிய தொழிலை உருவாக்க முடியும்ங்கிற பொதுக்கருத்து பரவலா இருக்கு. இதெல்லாம் இல்லைனாகூட பெரிய அளவுல ஒரு தொழிலை வெற்றிகரமா உருவாக்க முடியும். சாதுர்யமும் சளைக்காத உழைப்பும்தான் இதுக்கு முக்கியம்!’ என்றபடி வாழ்க்கை நதியில் கரைசேர முடியாமல் தவிப்பவர்களுக்கு, தன் அனுபவ சொற்களால் துடுப்பு தருகிறார் தமிழ்ச்செல்வி!’ - 27.9.2011 தேதியிட்ட அவள் விகடனில், தஞ்சாவூர், அருளானந்தம் நகரைச் சேர்ந்த தமிழ்ச்செல்வி ஆனந்த் பற்றி வெளியான கட்டுரை யின் ஆரம்ப வரிகள் இவை!

''அவள் விகடனில் இடம்பெற்ற வெற்றிச்செல்விகள் பங்கேற்கும் 'வாருங்கள் தோழிகளே... வளம்பெறலாம்!' பகுதியில்... இம்முறை நீங்கள்!’' என்றதும், அளவில்லா ஆனந்தம் தமிழ்ச்செல்விக்கு.

கைவிட்ட விதி... கைகொடுத்த மதி!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''ஜூட் பைகள் செய்துகிட்டிருந்த என்னைப் பற்றி 'அவள் விகடன்'ல கட்டுரை வந்ததும்... சென்னை, மயிலாப்பூர்ல இருந்து ஒன்றரை லட்ச ரூபாய்க்கு ஆர்டர் வந்துச்சு. என்னை நம்பி இவ்வளவு பெரிய ஆர்டர் வந்தது அப்போதான். ஒன்றரை மாசத்துல முடிச்சுக் கொடுக்க சொன்னதை, ஒரே மாசத் துல முடிச்சுக் கொடுத்தேன். அவங்ககிட்டே இருந்து ஆர்டர் வந்துட்டே இருக்கு. அவள் விகடனுக்கு நான் ரொம்பவே நன்றிக்கடன் பட்டிருக்கேன்...!'' என்று  கண்களில் ஆனந்தத் துளிகளுடன் ஆரம்பித்தார் தமிழ்ச்செல்வி.

கைவிட்ட விதி... கைகொடுத்த மதி!

''சென்ற முறை பேட்டி எடுக்க வந்திருந்தப்போ, என் கணவர் கோமா நிலையில் இருந்தார். வீடு, கார், டிராவல்ஸ்னு இருந்த சொத்தை எல்லாம் இழந்து, ஒரே நாள்ல வீதிக்கு வந்தப்போ, எதிர்பாராத ஏமாற்றத்தால அவ ருக்கு ஏற்பட்ட நிலை அது. அப்போ கலங்கி நின்ன எனக்கு கைகொடுத்தது... ஜூட் பேக்.

என்னோட ஃப்ரெண்ட் ஒருத்தவங்க ஜூட் பேக் செய்துட்டு இருந்தாங்க. 'ஜிப்’ போன என்னோட ஒரு பையை சரிபண்ணிக் கொடுக்கச் சொல்லி போனப்போ, 'ஒண்ணுமே பண்ண முடியாது'னு சொல்லிட்டாங்க. நானே முயற்சி செய்து சரிபண்ணினப்போதான், நாமும் ஜுட் பேக் தொழில் செய்யலாமேனு யோசனை வந்துச்சி. அப்படி ஆரம்பிச்சதுதான் இந்தத் தொழில். இதில் பெண்கள் நிலைத்திருக்க முடியாதுனு சொல்லுவாங்க. காரணம், கைவலி அதிகமா இருக்கும். கூடவே, டஸ்ட் அலர்ஜி ஏற்படும். ஆனா, நான் ஏழு வருஷமா இதுல நிலைச்சிருக்கேன். இன்னிக்கு பியூட்டீஷியன், ஃபேஷன் ஜுவல்லரி மேக்கர், கிராஃப்ட் மேக்கர், டெயிலர்னு பலதரப்பட்ட தொழில்கள்ல நான் இயங்கிட்டு இருந்தாலும், எனக்குக் கைகொடுத்து தூக்கிவிட்டது, இந்த ஜூட் பேக்தான்.

எங்கிட்ட இப்போ 10 பேர் வேலை பார்க்கறாங்க. 'அவள் விகடன்’ கட்டுரைக்குப் பிறகு கிட்டத்தட்ட 40 சுயஉதவிக் குழுக்களுக்கு 'ஜூட் பேக்’ பயிற்சி கொடுக்கிற வாய்ப்பு கிடைச்சது. தொடர்ந்து பல பெண்களுக்கும் ஜூட் பேக் தயாரிப்பு வகுப்பு எடுக்கறதோட, வேலைவாய்ப்பையும் கொடுத்துட்டு இருக்கேன்'' என்ற தமிழ்ச்செல்வி, தன் சொந்த வாழ்வில் ஏற்பட்ட மலர்ச்சியையும் கூறினார்.

''கோமா நிலையில் இருந்த கணவர்கிட்ட, 'நமக்கு கல்யாணம் ஆகிடுச்சு, ரெண்டு குழந்தைகள் இருக்காங்க, காலேஜ் போயிட்டு இருக்காங்க’னு சொல்லி, எங்க கல்யாண ஆல்பம், குழந்தைகளோட போட்டோக்களை எல்லாம் காட்டிட்டே இருப்பேன். என் நம்பிக்கை வீண் போகல. திடீர்னு ஒரு நாள் கோமாவில் இருந்து மீண்டு வந்தார். இன்னிக்கு அவர் தனியா ஒரு கடையைப் பார்த்துக்கிற அளவுக்கு உடல் நிலையில் முன்னேறியிருக்கார்!'' என்று பூரித்தவர்,

''இப்போ ஜூட்ல செப்பல்களையும் செய்யக் கத்துட்டு இருக்கேன். ஃபினிஷிங் சரியா வந்துட்டா, அதுலயும் ஒரு கை பார்த்துடுவேன். ஜூட் பேக் தொழிலைப் பொறுத்தவரை, 15 நாட்களுக்கு ஒரு முறை 1,000 பேக்குக்கும் மேல ஆர்டர் வரும். மாசம் 60,000 லாபம் மட்டும் நிக்கும். பல தடைகளையும் பல்லைக் கடிச்சுட்டு தாண்டி வந்ததாலதான், இன்னிக்கு இந்த லாபம் எனக்கு கிட்டியிருக்கு! அடுத்தகட்டமா அவள் வாசகிகளுக்குப் பயிற்சி கொடுக்கப்போறதை நினைச்சா, பெருமையா இருக்கு. அவங் களையும் என்னைப் போல தொழிலதிபரா ஆக்க, ரெடியா இருக்கேன்!''

- உற்சாகத்தோடு காத்திருக்கிறார் தமிழ்ச்செல்வி!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism