Published:Updated:

உறவே வா... உற்சாகம் தா!

வாசகிகள் பக்கம், ஓவியம் : சேகர்

உறவே வா... உற்சாகம் தா!

வாசகிகள் பக்கம், ஓவியம் : சேகர்

Published:Updated:

 பரிசு

உறவே வா... உற்சாகம் தா!

 250

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

'உறவே வா... உற்சாகம் தா!' என்ற தலைப்பில் கடந்த 20-5-2014 தேதியிட்ட இதழில் அறிவித்திருந்த போட்டிக்கு, வழக்கம்போலவே எழுதிக் குவித்துவிட்டனர் தோழிகள். தேர்ந்தெடுக்கப்பட்ட உற்சாக தருணங்கள்.. ஒவ்வொன்றாக இடம்பிடிக்கும்.

'ஓரம்போ... ஓரம்போ... ருக்குமணி வண்டி வருது!’

முந்தின ஆண்டு விடுமுறைக்கு, மதுரையில் என் அக்கா வீட்டுக்குப் போய்விட்டு வரும்போதே எழுதப்படாத ஒப்பந்தமாக, ''அடுத்த ஆண்டு லீவுக்கு, நீங்க எல்லாம் அங்க வாங்க... ஜாலியா இருக்கலாம்!'' என்று அழைத்துவிட்டு வந்தோம்.

ஒப்பந்தம் நிறைவேற, அந்த விடுமுறையில் வீடெல்லாம் நிறைந்தது சந்தோஷம். திருகிவிட்டால் தண்ணீர் கொட்டும் குழாய்கள் இருந்தும், கிணற்றிலிருந்து தண்ணீரை இறைத்து ஒருவருக்கொருவர் அருவி மாதிரி கொட்டி ஆனந்தக் குளியல், சாப்பிடும்போது கூட ஓயாத பேச்சு, மதியம் கௌரவர், பாண்டவர் என்று குழுக்களாக மாறி தாயக்கட்டை விளையாட்டு, மாலையில் ஆண் பிள்ளைகள் 'தென்னமட்டை’ பேட், 'ரப்பர்’ பந்து சகிதம் கிரிக்கெட் விளையாட, பெண் குழந்தைகள் மல்லிகைப் பூ வைத்துப் பின்னி, கண்ணாடி முன் நின்று ரசிப்பதற்குள் இருட்டத் தொடங்கிவிடும். ஜடையை பல கண்களுக்கும் காட்டுவதற்காகவே, இரவு கோயிலுக்குப் போய்வருவர்.

உறவே வா... உற்சாகம் தா!

அடுத்தது, வாடகை சைக்கிள் எடுத்து ஓட்டப் பழகும் வைபவம். ஒருவன் குரங்கு பெடல் போட, மற்றவன் கூடவே ஓட, வெயிலில் களைத்து, கறுத்து, முட்டிகளில் விழுப்புண்களுடன் வந்து, ''ஹையா... சைக்கிள் ஓட்டக் கத்துக்கிட்டோமே!'' என்று களிப்பில் மிதந்தனர். அப்படி ஒரு நாள் சைக்கிளில் சற்று வேகமாக சென்றபோது... எதிர்ப்பட்ட ஒரு சிறுவன் மேல் மோத, அவனுக்கு பல் உடைந்துவிட, அதைப் பார்த்து இருவரும் தெறித்து ஓடி வந்து வீட்டில் சொல்ல, நாங்கள் பதறி ஓடிச் சென்று பார்த்தோம்.

''அடியெல்லாம் ஒண்ணும் இல்ல, ஆடிக்கிட்டிருந்த பல்லு விழுந்துருச்சு!'' என்று அவன் ஓட்டைப் பல்லுடன் சிரிக்க, குபீர் சிரிப்பு எங்களுக்கும்!

''பயந்தாங்கொள்ளிப் பசங்களா!'' என்று எங்கள் வீட்டு சைக்கிள் வீரர்களை நாங்கள் கிண்டல் பண்ண, ''ஒண்ணும் இல்லியே... அடுத்த லீவுக்கு நாங்க மதுரையில இருந்தே சைக்கிள்ல வந்துடுவோம் பாருங்க!'' என்று சவால்விட்டன அந்த வாண்டுகள்!  

உறவுகள் கூடும் விடுமுறைகள்... வரம்!

- சங்கரி வெங்கட், புது பெருங்களத்தூர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism