Published:Updated:

நாட்டிய உத்ஸவ் - 2014

, படங்கள்: பொன்.காசிராஜன்

நாட்டிய உத்ஸவ் - 2014

, படங்கள்: பொன்.காசிராஜன்

Published:Updated:

தக், ஒடிஸி, பரதம் என்று இந்தியாவின் பாரம்பரிய நடனங்கள் ஒவ்வொன்றுமே ஒவ்வொரு வகையில் அழகு. இதில் தலைசிறந்த மேதைகள் ஒரே இடத்தில் மேடையேறினால்... கூடுதல் அழகுதானே! வண்ணமயமான இந்த உற்சவம், சர்வதேச நாட்டிய தினத்தைக் கொண்டாடும் வகையில், ஏப்ரல் 29 அன்று சென்னை, கிருஷ்ணகான சபாவில் நடைபெற்றது! பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு கலை மற்றும் கலாசாரத்தை வளர்க்கும்பொருட்டு 'கலை விமர்சகர்' சர்ச்சில் பாண்டியன் உருவாக்கிய 'உத்ஸவ் மியூசிக்' எனும் அமைப்புதான் இதற்கு ஏற்பாடு செய்திருந்தது. விழாவைத் துவக்கி வைத்து, மூத்த நடனக் கலைஞர் சித்ரா விஸ்வேஸ்வரனுக்கு 'உத்ஸவ் நிருத்ய ரத்னா' என்ற விருதை வழங்கினார், பிரிட்டிஷ் துணைத் தூதர் பரத் ஜோஷி!

பரத நாட்டியம் - ஊர்மிளா சத்யநாராயணா, சென்னை: பரதக் கலையில் ஜாம்பவான் கே.என். தண்டாயுதபாணி பிள்ளை, கே.ஜே.சரஸா மற்றும் கலாநிதி நாராயணா ஆகியோரிடம் பயின்ற நட்சத்திர மாணவி ஊர்மிளா. அழகுணர்ச்சியும் நளினமும் போட்டிபோட 'சதானந்த தாண்டவம்’ தந்தார்.

குச்சுபுடி - யாமினி ரெட்டி, ஹைதராபாத்: பத்மபூஷண் விருதுபெற்ற, பிரபல குச்சுபுடி கலைஞர்கள் ராஜா - ராதா ரெட்டி தம்பதியின் மகள். பாரம்பரிய முறைப்படி குச்சுபுடி ஆடும் கலையில் நிபுணரான யாமினி, குடும்பப் பாரம்பரிய இழை விட்டுப்போகாமல் அதைப் பின்பற்றி வருவது, அவர் ஆடிய சிவதாண்டவத்தில் வெளிப்பட்டது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நாட்டிய உத்ஸவ் - 2014
நாட்டிய உத்ஸவ் - 2014

கதக்  -  மேஹரஞ்சனி, அசாம்: புகழ்பெற்ற கதக் கலைஞர் மராமி மேதி - அசாமிய இசைக் கலைஞர் ஜோய்பிரகாஷ் மேதி தம்பதியின் புதல்வி. தாயிடமே கதக் பயிற்சிபெற்ற இவர், கதக் நடனத்தின் ஜாம்பவான் பண்டிட் பிர்ஜு மஹராஜ் நடத்திய பல பயிற்சிப் பட்டறைகளில் பங்கேற்றவர். அழகிய மயிலெனத் திகழும் மேஹரஞ்சனி, திரைப்படம், தொலைக்காட்சிப் படங்களில் கதாநாயகி.

நாட்டிய உத்ஸவ் - 2014

ஒடிஸி - ரேகா டான்டன், ஆரோவில், புதுச்சேரி: தொடக்கத்தில் பத்மஸ்ரீ மாதவி முத்கல்லிடம், பின்னாட்களில் குரு டீநாத் மஹாராணாவிடமும் பயிற்சிபெற்றவர் ரேகா டான்டன். கணவர் மைக்கேல் வெஸ்டன் எழுதிய, 'ஒடிஸி - எ டான்ஸ் ஆஃப் ஸ்கல்ப்சர்’ என்ற நூலுக்கு இணையாசிரியராகவும் பணியாற்றியிருக்கிறார்.

குழு நடனம் - ராதிகா சுரஜித்தின் 'த்ரயா’ குழுவினர், சென்னை: பத்மபூஷண் தனஞ்செயன் தம்பதியின் மூத்த மாணவியருள் ஒருவரான ராதிகா, அவருடைய குழுவுடன் மேடையேறி 2 அயிட்டங்களைக் கொடுத்தார். முதலில் தமிழ் வந்தனம். அடுத்ததாக சுதா ரகுநாதனின் இனிய குரலில் பாடப்பட்ட 'தாயே யசோதா’ பாடலுக்கு என்று இரு நடனங்கள். இரண்டுமே பார்வையாளர்களைக் கட்டிப்போட்டன.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism