Published:Updated:

படிக்க வசதியில்லை... திறமைக்கு பஞ்சமில்லை!

ந.ஆஷிகா,தி.ஹரிகரன், பா.வேலுமணி,உ.சிவராமன்,ஜெ.பாரதிபடங்கள்: பா.காளிமுத்து, வீ.சிவக்குமார், ச.வெங்கடேசன்

படிக்க வசதியில்லை... திறமைக்கு பஞ்சமில்லை!

ந.ஆஷிகா,தி.ஹரிகரன், பா.வேலுமணி,உ.சிவராமன்,ஜெ.பாரதிபடங்கள்: பா.காளிமுத்து, வீ.சிவக்குமார், ச.வெங்கடேசன்

Published:Updated:

ரசுப் பள்ளிகள் என்றாலே... பரிதாபப் பார்வை வீசப்படுவது வாடிக்கை. ஆனால், 'நாங்களும் சாதிப்போம்ல...' என்றபடி இந்த ஆண்டு பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வில், தமிழக அளவில் அரசுப் பள்ளிகள் பலவும் அசத்தல் சாதனை படைத்துள்ளன. அந்த வகையில் அரசுப் பள்ளிகளில் நன்மதிப்பெண்கள் எடுத்திருக்கிறார்கள் மாணவிகள் பலரும். இவர்களில், வறுமைக்கு வாக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த மாணவிகளின் சாதனை... ஆனந்தக் கண்ணீரைப் பெருக்குகிறது. வாழ்த்துக்களுடன் சிலரைச் சந்தித்தபோது...

அனுஷியா, காக்கைப்பாடினியார் மேல்நிலைப் பள்ளி, மதுரை (494/500)

படிக்க வசதியில்லை... திறமைக்கு பஞ்சமில்லை!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''எங்க வீட்டுல நாலு பொண்ணுங்க. நான்தான் கடைசி. நான் கைக்குழந்தையா இருந்தப்பவே, அம்மா இறந்துட்டாங்க. நாங்க எல்லாரும் பாட்டி வீட்டுக்கு வந்துட்டோம். அஞ்சாவது படிச்சிட்டு இருந்தப்போ அப்பாவும் உடம்பு சரியில்லாம இறந்துட்டார். வயசான தாத்தாவும், பாட்டியும், அவங்களுக்கு வர்ற முதியோர் உதவித்தொகையில என்னைப் படிக்க வைக்கிறாங்க. கூடவே, சொந்தக்காரங்க, ஆசிரியர்கள் எல்லாம் உதவி செய்றாங்க.

'யாரையும் சிரமப்படுத்தாம, நல்ல வேலைக்குப் போக, நல்லா படிக்கணும்'னு உறுதியோட படிச்சேன். மதுரை மாநகராட்சிப் பள்ளிகள் அளவில் முதல் மதிப்பெண் வாங்கியிருக்கேன். டாக்டராகணும்னு ஆசை. ஆனா, தாத்தா பாவம், அவரால என்ன செய்ய முடியும்?''

மஞ்சுளா, அரசினர் மேல்நிலைப் பள்ளி சத்துவாச்சாரி, வேலூர் (468/500)

படிக்க வசதியில்லை... திறமைக்கு பஞ்சமில்லை!

''அப்பாவுக்கு நெசவுத் தொழில். அதுவும் நூல் கிடைக்கும்போதுதான் செய்ய முடியும். தவிர, கரன்ட் கட் வேற பிழைப்பைக் கெடுக்கும். அம்மா, பீடிக்கான நூல் உருண்டை செய்வாங்க. அக்கா, நான், தங்கச்சினு எல்லாருமே அப்பா, அம்மாகூட சேர்ந்து அந்த வேலைகளைப் பார்ப்போம். இப்படி குடும்பமே உழைச்சாலும், மாசம் 4,000 - 5,000-தான் வருமானம் வரும். தினமும் அஞ்சு பேரும் அரை வயிறுதான் சாப்பிடுவோம். அப்பா, அம்மா ரெண்டு பேரும் ரேஷன் அரிசி சாதம் சாப்பிட்டுட்டு, எங்களுக்கு கடை அரிசி சோறு போடுவாங்க. இதை எல்லாம் பார்த்துப் பார்த்து வளர்ந்ததால... 'படிச்சு வேலைக்குப் போய் சம்பாதிக்கணும்'ங்கிற வெறி எனக்குள்ள வந்துடுச்சு. வாசக்கதவுகூட இல்லாத வீட்டுல, தறிச்சத்தத்துக்கு நடுவுலதான் படிச்சேன். பள்ளிக்கூட அளவுல ரெண்டாவது மார்க் வாங்கியிருக்கேன். சாப்பாட்டுக்கே உன்னப்பிடி, என்னப்பிடினு இருக்கு. இதுல மேற்கொண்டு படிக்க வைங்கனு எங்கப்பாகிட்ட எப்படி கேட்க முடியும்னு தெரியலையே!''

ஸ்ரீதேவி நாச்சியார், செயின்ட் ஜான்ஸ் மெட்ரிக் பள்ளி, வீரவநல்லூர், நெல்லை (496/500)

படிக்க வசதியில்லை... திறமைக்கு பஞ்சமில்லை!

''அப்பா விவசாயம் பார்க்கிறாங்க. 'பெண்களுக்கு அந்தக் காலத்துல படிப்பு எட்டாக்கனியா இருந்துச்சு'னு அம்மாவும், பாட்டியும் சொல்லிச் சொல்லியே வளர்த்ததால, சின்னவயசுல இருந்தே ஃபர்ஸ்ட் ரேங்க்தான். பி.இ படிக்கணுங்கிற என்னோட ஆசை எங்கப்பாவுக்குத் தெரியும். 'என்னை மாதிரி அஞ்சுக்கும் பத்துக்கும் கஷ்டப்படாம, ஆசைப்படுற மாதிரியே நல்லா படிச்சு வேலைக்குப் போகணும்’னு உற்சாகப்படுத்திட்டே இருப்பார். அவருக்கு செலவு வைக்காம படிக்கணும். அதுக்கு ப்ளஸ் டூ-லயும் நல்ல மார்க் வாங்கி, நல்ல காலேஜ்ல மெரிட்ல ஸீட் வாங்கணும். வேலைக்குப் போய், உழைக்க மட்டுமே தெரிஞ்ச எங்கப்பாவை, உட்கார வெச்சு பார்த்துக்கணும்!''

ஆவுடையம்மாள், தியாகராஜா மேல்நிலைப் பள்ளி, ஸ்ரீவில்லிபுத்தூர் (411/500)

''எங்க அண்ணன் கல்யாணம் பண்ணி போனதுக்கு அப்புறம், அவர் வருமானம் அவர் குடும்பத்தைக் காப்பாத்தவே சரியா இருக்கு. அப்பா, அப்பப்போ ஏதோ காசு கொடுப்பார். மத்தபடி குடிச்சே அழிப்பார். குடி, குடியைக் கெடுத்துரும்ங்கிறதை உறுதிப்படுத்தற மாதிரி, கொஞ்ச நாளைக்கு முன்ன இறந்தும் போயிட்டார். இப்போ நானும், அம்மாவும்தான் வீட்டுல. அம்மா நெசவுத் தொழில் செஞ்சு பசியை ஆத்துறாங்க. இன்ஜினீயரிங் படிக்கணும்னு ஆசை. ஆனா, பதினோராம் வகுப்புப் படிக்கிறதே கஷ்டம்ங்கிறதுதான் வீட்டோட நிலைமை!''.

படிக்க வசதியில்லை... திறமைக்கு பஞ்சமில்லை!

காளீஸ்வரி, சீனிவாசன் மெமோரியல் மேல்நிலைப் பள்ளி, சத்திரப்பட்டி, திண்டுக்கல் மாவட்டம், (477/500)

''எங்க வீட்டுல மூணு பொண்ணுங்க. நான் கடைசிப் பொண்ணு. அப்பா - அம்மா கூலி

படிக்க வசதியில்லை... திறமைக்கு பஞ்சமில்லை!

வேலைக்குப் போறாங்க. எவ்வளவு கஷ்டத்துலயும், படிப்புக்காக என்ன கேட்டாலும் வாங்கிக் கொடுப்பாங்க. இப்படி பழைய நோட்ஸ்களைஎல்லாம் வாங்கித்தான் படிச்சேன். போன வருசம் எங்க ஸ்கூல்ல படிச்ச ஒரு அக்கா, 475 மார்க்குக்கு மேல எடுத்தாங்க. அவங்களை கவர்மென்ட்டே இலவசமா படிக்க வைக்கறாங்க. நாமளும் நல்ல மார்க் எடுத்தா அப்பாவை சிரமப்படுத்தாம படிக்கமுடியும்னு மன சுல வெச்சு படிச்சு இந்த மார்க் எடுத் திருக்கேன். எனக்கும் உதவி கிடைச்சா, ப்ளஸ் டூ-லயும் நல்ல மார்க் வாங்குவேன்!''

தனலட்சுமி, சிறுமலர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, மாரம்பாடி, திண்டுக்கல் (429/500)

படிக்க வசதியில்லை... திறமைக்கு பஞ்சமில்லை!

''அப்பா, அம்மா ரெண்டுபேரும் கூலி வேலைக்காக காலையிலயே போடுயிடுவாங்க. மூத்த பொண்ணான நான்தான் மூணு தம்பி, தங்கச்சிங்கள குளிக்க வெச்சு, டிரெஸ் பண்ணி, சாப்பாடு கொடுத்து ஸ்கூலுக்கு அனுப்புவேன். பிறகு, நானும் கிளம்புவேன். சாயந்திரம் அவங்களை கூட்டிட்டு வந்து, அம்மா - அப்பா வர்ற வரைக்கும் கவனிச்சுக்குவேன். லீவு நாளாயிருந்தா... பக்கத்து வீடுகள்ல புளி தட்டுற வேலைக்குப் போயிடுவேன். இந்த வேலைகள் எல்லாம் இருக்கறதால, தினசரி வகுப்பு பாடங்களை, ஸ்கூல்லயே படிச்சுட்டு வந்திடுவேன். ஸ்கூல் நேரத்துல படிச்சதால மட்டுமே கிடைச்சதுதான் இந்த மார்க். இப்பகூட இவ்ளோ மார்க் எடுத்ததுக்கு, 'ஓ அப்படியா!’னு மட்டும்தான் அப்பா - அம்மா கேட்டாங்க. டாக்டராகணும்... இல்லனா, டி.என்.பி.எஸ்.சி குரூப் எக்ஸாம் எழுதி நல்ல வேலைக்குப் போகணும்னு ஆசையிருக்கு. ஆனா, அதுக்கெல்லாம் பணம் நிறைய வேணுமே!''

பெருமையிலும் பெருமை!

பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வு முடிவுகளில்... இந்த ஆண்டு வரலாற்று சாதனையாக... 19 பேர் முதலிடத்தைப் பிடித்துள்ளனர். இவர்களில் 18 பேர் பெண்கள் என்பது... பெருமைக்குரிய விஷயம்! இவர்களில் ஒரே ஒருவர் அரசுப் பள்ளியில் படித்தவர் என்பது... பெருமையிலும் பெருமையான விஷயமே!

படிக்க வசதியில்லை... திறமைக்கு பஞ்சமில்லை!

திருநெல்வேலி மாவட்டம், பத்தமடை, அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்த பாஹிரா பானு, 499/500 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.

''நாங்க நடுத்தர குடும்பம்தான். அப்பா சவுதியில இருக்காங்க, அம்மா ஹவுஸ் வொய்ஃப். சின்ன வயசுல இருந்தே நான் நல்லா படிப்பேன். எப்பவுமே ஸ்கூல் ஃபர்ஸ்ட்தான். முக்கியமா மேத்ஸ் எனக்கு ரொம்ப பிடிக்கும். அதேநேரத்துல மத்த பாடங்களும் எனக்கு பிடிச்சதுதான். இப்போ ப்ளஸ் டூ-வுல மேத்ஸ் - பயாலஜி எடுத்து படிக்கப் போறேன். டாக்டருக்கு படிக்கணும்ங்கிறதுதான் என்னோட ஆசை'' என்று சொல்லும் பாஹிரா பானு, தமிழ் பாடத்தில் 99 மதிப்பெண்கள், மற்ற நான்கு பாடங்களில் 100-க்கு 100 எடுத்திருக்கிறார்.