பிரீமியம் ஸ்டோரி
பேனசோனிக் ஸ்பெக்ட்ரா குக்கர்!

மையலை, பிரஷர் குக்கரைவிட மேலும் எளிதாக்க வந்ததுதான்... எலெக்ட்ரிக் ரைஸ் குக்கர். இதிலும் புதுப்புது வசதிகளை சேர்க்கும் பேனசோனிக் நிறுவனம், உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் நான்கு வகை நவீன எலெக்ட்ரிக் ரைஸ் குக்கர்களை வெளியிட்டுள்ளது.

இதைப்பற்றி பேசும் இந்நிறுவனத்தின் இந்தியாவுக்கான மேலாண்மை இயக்குநர் ஹிடேநேரி அசோ, ''இந்த ஸ்பெக்ட்ரா குக்கரில் அரிசியைப் போட்ட 33 நிமிடத்தில் பூப்பூவாக மலர்ந்து நிற்கும். Z9 என்ற மாடலைத் தவிர, மற்ற மூன்று மாடல்களிலும் ஆட்டோமேடிக் வாமிங் வசதி உள்ளது. சமைக்கும் முன்பாக 'ஆட்டோமேடிக் வாமிங்' பட்டனை ஆன் செய்தால் போதும்... சமைக்கப்பட்ட உணவு, 5 மணி நேரம் வரை சூடாகவே இருக்கும். காலையில் குக்கரை ஆன் செய்துவிட்டு போனால், மதியம் வந்து சூடாக சாப்பிடலாம்.

இதில் 184 வகையான இந்திய உணவுகளைத் தயார் செய்யமுடியும். எப்படி சமைக்க வேண்டும்; என்னென்ன ரெசிப்பி சமைக்கலாம் என்ற தகவல் அடங்கிய பட்டியலையும் சேர்த்தே கொடுக்கிறோம். அறிமுகச் சலுகையாக, தமிழ்நாடு முழுவதும் உள்ள வாடிக்கையாளர்கள், எந்த ஒரு சமையலறை சாதனத்தையும், எந்த நிலையில் இருந்தாலும் 'எக்ஸ்சேஞ்ச்' செய்துகொண்டு 25 பர்சன்ட் தள்ளுபடி விலையில், இந்த ஸ்பெக்ட்ரா குக்கரை பெறலாம்'' என்று சொன்னார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு