Published:Updated:

என் டைரி - 330

கயமையே உருவாக ஒரு கணவன்!

என் டைரி - 330

கயமையே உருவாக ஒரு கணவன்!

Published:Updated:

வறான ஒருவனை துணையாக ஏற்றுவிட்டதால், வாழ்க்கையை நரகமாக்கிக்கொண்ட பெண் நான்! வீட்டில் பார்த்த வரன்தான். ஆனால், அவன் படிப்பும் வேலையும் எனக்குப் பொருத்தமாக இல்லை என்பதால் தயங்கினார்கள். திருமணத்துக்கு மனப்பொருத்தம்தான் முக்கியம் என, அவனைக் கரம் பிடித்தேன். என் தாய் முகம் காணாத நான், எனக்குத் தாயுமானவனாக இருப்பான் என்று பேரன்பு, பெரும் நம்பிக்கையுடன் வாழ்க்கையை ஆரம்பித்தேன். இருவரும் மென்பொறியாளர்கள் என்பதால், வேலைக்காக அமெரிக்கா சென்றோம்.

என் டைரி - 330

திருமணத்துக்கு முன்பே, தனக்கு 6 லட்சம் கடன் இருப்பதாகவும், அதை அடைத்தால்தான் திருமணம் என்றும் அவன் அழுததால், நான் கடன் வாங்கி, அவனுடைய கடனை அடைத்தேன். ஒரு வருடம் அவன் வேலை இல்லாமல் இருக்க, குடும்பத்தையே நான்தான் சுமந்தேன். இதையெல்லாம் அன்பின் மிகுதியால் முகம் கோணாமல் நான் செய்ய, அவனோ என்னை அடிமையாக்கினான். என் வருமானம் அனைத்தையும் வாங்கிக் கொண்டு, தினமும் கை செலவுக்கு மட்டுமே பணம் தந்தான்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அலுவலகத்தில் ஆண்கள் யாரிடமும் பேசக்கூடாது என்றான். இதையெல்லாம் பெரிதுபடுத்தாமல், என்னுடைய உடையில் இருந்து குணம் வரை அனைத்தையும் அவனுக்காக மாற்றிக்கொண்டேன். அமெரிக்க குடியுரிமை, வேலை இரண்டையுமே என் மூலமாக வாங்கிக்கொண்டவன், அதன் பிறகு, அடித்து - உதைத்து துன்புறுத்த ஆரம்பித்தான். ஆண் குழந்தை ஒன்று பிறந்த கையோடு வீட்டை விட்டு வெளியேறியவன், அவ்வப்போது வந்து போவதோடு சரி. நான்கு ஆண் நண்பர்களுடன் வெளியில் தங்கியிருப்பதாகக் கூறியவன், வேறு பெண்ணுடன் வாழ்க்கை நடத்திக்கொண்டிருப்பது தெரியவந்தபோது, மொத்தமாக அவனைப் பிரிந்துவிட்டேன்.

கடன் சுமை ஒரு பக்கம் அழுத்த... வேலைக்கும் போய்க்கொண்டு, குழந்தையையும் பார்த்துக்கொண்டு... வாழ்க்கையே போராட்டமாகிப் போனது. அப்படியும் விடாமல், தன் பிடிக்குள் வைத்துக் கொள்வதற்காக குழந்தையை அவனிடம் ஒப்படைக்கச் சொல்லி வழக்கு தொடர்ந்தான். குழந்தை என்னிடமே இருக்கலாம் என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

தொடர்ந்து, பரஸ்பர விவாகரத்து கேட்டேன். அவமானம் அடைந்த அந்த மிருகமோ... 'இவள் வேறு ஒருவரை திருமணம் செய்ய திட்டமிட்டிருக்கிறாள்' என்று சொல்லி, மனம் ஒப்பாத விவாகரத்து (சிஷீஸீtமீstமீபீ ஞிவீஸ்ஷீக்ஷீநீமீ) வழக்கு தொடர்ந்து, என்னை நோகடித்துக்கொண்டிருக்கிறது. கடன், வேலை, குழந்தை, வழக்கு என தொடர்ந்து போராடிக்கொண்டிருக்கிறேன் நான்.

தீயவை அத்தனையும் ஒருங்கே அமையப் பெற்ற ஒருவனை, எதற்காக நான் சகித்துக்கொள்ள வேண்டும்?

சட்டம் என்ன நீதி வழங்கப்போகிறதோ தெரியவில்லை. நீங்கள், என் பிரச்னைக்கு தீர்வு மட்டுமல்ல, என் மனவலிமையைக் கூட்ட வார்த்தைகளும் தாருங்கள் தோழிகளே!

- பெயர் வெளியிட விரும்பாத வாசகி

சிநேகிதிக்கு... சிநேகிதிக்கு...

என் டைரி - 330

என் டைரி 329-ன் சுருக்கம்

''லட்சணமான எனக்கு, அதற்கு நேரெதிரான தோற்றம்கொண்ட, அரசு வேலையில் இருக்கும் உறவினரை மணமுடித்தனர் பெற்றோர். இதுவே அவருக்கு தாழ்வுமனப்பான்மையை உண்டாக்க.. சந்தேகப் பேர்வழியாக மாறி, வாழ்க்கையை ரணமாக்கிக்கொண்டிருக்கிறார். போன் செய்யும்போது, 'பிஸி’ என்று வந்தால்... கேள்வி மேல் கேள்வி கேட்டுத் துளைப்பார். காலையில் நெற்றியில் வைக்கும் குங்குமம், மாலை வரை அழியாமலிருக்க வேண்டும். அழிந்தால்... அவ்வளவுதான்! 40 வயதைக் கடந்துவிட்டேன் நான். குழந்தைகளோ கல்லூரி செல்லும் வயதில். இந்த நிலையிலும் அவருடைய சந்தேகமும், என் கண்ணீரும் தொடர்கிறது. குற்றவாளிபோல் தினமும் பதைபதைத்து வாழ்வதைவிட, ஒரேயடியாக வாழ்க்கையை முடித்துக்கொள்ளலாம் என நினைக்கிறேன். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் தோழிகளே?!''

தனியாக வாழ்ந்து காட்டு!

இந்த சந்தேகப்பேயுடன், இத்தனை காலம் குடும்பம் நடத்தியதே மாபெரும் விஷயம். இப்படியிருக்க, நீ ஏன் வாழ்க்கையை முடித்துக்கொள்ள வேண்டும்? ''என்றைக்கு உன் சந்தேகம் தீருமோ... அன்றைக்குத்தான் திரும்புவேன்'’ என்று முகத்தில் அறைந்தாற்போலச் சொல்லிவிட்டு, பிள்ளைகளுடன் தனியாகச் சென்று வாழ்ந்து காட்டு. கல்லூரி வயதிலிருக்கும் குழந்தைகளும் உண்மை புரிந்து, உன்னுடன் வருவார்கள். அவர்கள் மூலமாகவே, கணவருக்கு புத்திபுகட்ட பார். எதுவும் பலன் அளிக்காவிட்டால்... தனியாக வாழ்ந்து காட்டு. என்றென்றும் கடவுள் துணை நிற்பார்!

- கமலா, சென்னை-78

பாசத்தால் வெற்றி கிட்டும்!

சந்தேகப் பேய் என்பது, உன் கணவரிடம் வெளியில் தெரிகிறது. பல வீடுகளில், உள்ளுக்குள்ளேயே ஆட்டம்போடும் என்பதுதான் நிதர்சனம். இது, வீட்டுக்கு வீடு வாசற்படி கதைதான். இதற்காகவெல்லாம் பிரிந்து வாழ ஆரம்பித்தால்... ஏகப்பட்ட குடும்பங்கள் இப்படித்தான் பிரிந்துகிடக்க வேண்டியிருக்கும். நீ நினைத்திருந்தால், ஆரம்பத்திலேயே சரிசெய்திருக்க முடியும். இப்போதும் காலம் கெட்டுவிடவில்லை. கணவருக்குப் பிடித்தமான சாப்பாடு, தின்பண்டங்கள் போன்றவற்றை அடிக்கடி செய்துகொடு; அவருடைய பெற்றோரிடம் அதிக பாசத்தைக் காட்டு; அலங்காரங்களை குறைத்துக்கொள்; எளிமையாகவே உடை உடுத்து; கணவர் வேலை முடிந்து வீடு திரும்பும்போது புன்னகையோடு வரவேற்று உபசரி; எல்லா விஷயங்களிலும் அவரை சுதந்திரமாக செயல்படவிடு... அதன் பிறகு பார், வெற்றி உனக்கே!

ஒவ்வொன்றுக்கும் பரிசு: 100ரூ

- ச.லட்சுமி, கரூர்