''அந்த ஷெல்ஃப்ல இருக்கிற தட்டை எடுக்கணும், தம்பியைக் கூப்பிடு'',

''பரண்ல இந்தப் பெட்டியை வைக்கணும், அண்ணனை வரச் சொல்லு''

- இப்படி வீட்டில் உயரத்தில் ஏறிச் செய்யவேண்டிய வேலைகளுக்கு, ஆண்களையே சார்ந்திருப்பதுதான் பெரும்பாலும் பெண்கள் ஜாதியின் வழக்கம். ஆனால், திண்டுக்கல், பள்ளப்பட்டி அருகே தோட்டத்தில் சரசரவென தென்னை மரம் ஏறுகிறார்கள் பெண்கள்! கண் இமைக்கும் நேரத்தில் காய்களை வெட்டிவிட்டு, அடுத்த மரத்துக்கு விரைகிறார்கள்!

ஆச்சர்யம் விலகாமல் அண்ணாந்தபடி இருந்த நம்மிடம் வந்தார், இவர்களுக்கு இந்தப் பயிற்சி அளித்த ராமசாமி. ''தென்னை வளர்ச்சி வாரியம் மூலம், தமிழ்நாடு முழுக்க ஆண், பெண் என இருபாலருக்கும் வேலை வாய்ப்பை ஏற்படுத்தி தரவும், தென்னைமரங்களை பாதுகாக்கவும் 'டாபா' (Tawpa) என்ற அமைப்பு உருவாகியிருக்கு. இது மூலம் மரம் ஏறுறதுக்கு இலவசப் பயிற்சி தர்றதோட, மரம் ஏறத் தேவையான கருவியையும் இலவசமா கொடுக்குறோம். ஆரம்பத்துல சிரமப்பட்ட பெண்கள், இப்ப தூள் கிளப்புறாங்க!'' என்று அவர் சொல்ல, ஓவர் டு பெண்கள்!

''எனக்குக் கல்யாணமாகி ஒரு பையன் இருக்கான். வீட்டுக்காரரு கூலி வேலை செய்றாரு. நான் 'டாபா’ ஆபீஸ்ல மரம் ஏற வர்றவங்களை கணக்கெடுக்கிற வேலை பார்க்குறேன். இங்க மரம் ஏறும் பயிற்சி கொடுத்தப்போ, நானும் அவங்க ளோட சேர்ந்துக்கிட்டேன்.

பயிற்சி பெற்ற 200 பேர்ல, ஏழு பேர்தான் பெண்கள். மொதல்ல ஒரு வாரம் பயிற்சி. ரொம்ப சுறுசுறுப்பா, கலகலப்பா இருக்கும். காலையில 10 மணியில இருந்து மதியம் 2 மணி வரைக்கும் தென்னை வளர்ப்பு பத்தியும், மரத்துக்கு வரும் நோய்கள், அதை குணப்படுத்துறது பத்தியெல்லாம் சொல்லிக் கொடுப்பாங்க. மதிய சாப்பாட்டுக்கு பிறகு, தோட்டத்துக்கு கூட்டிட்டு வந்து மரமேற பயிற்சி கொடுப்பாங்க. அதுக்கு முன்ன நிறைய உடற்பயிற்சி, யோகா செய்வோம்.

மரம் ஏறுறதுக்குனு பிரத்யேகமா மெஷின் இருக்கு. அதை மரத்துல பொருத்திட்டு, ஒவ்வொரு அடியா எடுத்து வெச்சு ஏறப் பழகணும். மரம் ஏறக் கத்துக்கறதுக்கு, ஒரு வாரம் ஆகும். மரம் ஏறும்போது உடம்புல ஒரு பெல்ட் போட்டு, அதுல அருவாளை செருகிக்குவோம். தேங்காயா இருந்தா குலையை அப்படியே வெட்டிடுவோம். அதுவே இளநீரா இருந்தா கயித்துல கட்டி மெதுவா கீழ இறக்குவோம்'' என்று சொல்லும் ராஜலஷ்மி,

''எங்களுக்குத் தோப்பு இருக்கு. பொதுவா காய் வெட்ட வர்றவங்களுக்கு மரத்துக்கு 10 ரூபா, பயணச்செலவு, டீ, காபினு செலவழிச்சு, 10 தேங்காயும் கொடுக்கணும். நாமளே காய் வெட்டக் கத்துக்கிட்டா, இதெல்லாம் மிச்சம்தானே!'' என்று கேட்டு அசத்தினார்.

அடுத்து பேசிய மகேஸ்வரி, ''ஏழு பெண்கள்ல, அஞ்சு பேர் மரத்துல ஏறி காய் வெட்டுவோம். ரெண்டு பேர் காய்களைக் குவிப்போம். அந்த அஞ்சு பேருல யாராச்சும் சோர்வாகிட்டா, மத்தவங்களை மாத்திவிடலாம். ஆரம்பத்துல ரெண்டு, மூணு மரம் ஏறுறதுக்குள்ளயே துவண்டு போயிடுவோம். இப்போ ஒரு நாளைக்கு சரசரனு 20 மரங்கள் ஏறி இறங்கிடுவோம். எங்க தோட்டத்துக்கு மட்டுமில்ல, மத்தவங்க தோட்டத்துக்கும் கூலிக்கு காய் வெட்டுவோம். மரத்துக்கு 10 ரூபா வாங்கிக்குவோம். காய் வெட்டுறப்பவே மரத்தைச் சுத்தி இருக்குற களையையும் எடுத்துடுவோம்'' என்றார் மகிழ்ச்சியோடு.

இந்த குழுவில் கல்லூரி மாணவி ஒருவரும் இருக்கிறார். ''மதுரை, அமெரிக்கன் காலேஜ்ல ஃபர்ஸ்ட் இயர் படிக்கிறேன். லீவு நாள்ல பொழுதுபோக்கா மரம் ஏறும் பயிற்சிக்கு வந்தேன். இப்போ முழு ஆர்வமாகி, நேரம் கிடைக்கிறப்போ எல்லாம் மரத்துலதான் தொங்கிட்டு இருக்கேன்!'' என்று சிரித்த மாலா,

''நான் மரம் ஏறுறேன்னு காலேஜ்ல என் ஃப்ரெண்ட்ஸ்கிட்ட சொன்னப்போ, யாருமே நம்பல. ஒரு நாள் அவங்க முன்னயே ஏறிக்காட்டணும். நான் டிரெயினிங்ல ரெண்டாவது நாளே மரத்துல ஏறி எல்லாரையும் ஆச்சர்யப்பட வெச்சேன். தென்னங்குருத்து வளர்ச்சி இல்லைனா, எலி கடிச்சுருக்குனு அர்த்தம். அதுக்கு மரத்துக்கு மூணு அந்துருண்டை வைக்கணும்!'' என்று டிப்ஸும் சொல்லி அசத்தினார் மாலா.

இந்தக் குழுவின் கடைக்குட்டியான ஜோதிமணி, பதினொன்றாம் வகுப்பு மாணவி. ''நான் மரம் ஏறுறதை எங்க ஸ்கூல்ல எல்லாரும் ஆச்சர்யமா பார்க்குறாங்க. ஒரு வாரம் பயிற்சி முடிஞ்சதும், ஆண்கள் உட்பட, எங்க குழுவுல இருக்குற 20 பேருக்கும் போட்டி வெச்சாங்க. 44 செகண்ட்ல மரம் ஏறி, நான்தான் முதல் பரிசு வாங்கினேன்!'' என்றார் உற்சாகமாக!

சபாஷ்!

- உ.சிவராமன்

படங்கள்: வீ.சிவக்குமார்