Published:Updated:

''கதறிக் கதறி கார்ட்டூன் பார்க்கிறவங்க நாங்க! ''

''கதறிக் கதறி கார்ட்டூன் பார்க்கிறவங்க நாங்க! ''

''கதறிக் கதறி கார்ட்டூன் பார்க்கிறவங்க நாங்க! ''

''கதறிக் கதறி கார்ட்டூன் பார்க்கிறவங்க நாங்க! ''

Published:Updated:

கார்ட்டூன் சேனல் பார்க்கும் காலேஜ் கேர்ள்ஸ் நிறைய பேர் இருக்கிறார்கள். மதுரையைச் சேர்ந்த சில பெண்களிடம், 'சின்னப்புள்ளத்தனமா இருக்கே..!’ என்று கேட்டால்.... 'நாங்க சின்னப்புள்ளதானே!’ என்று வாயில் விரல் வைக்கும் டீன்ஸ், தங்களின் கார்ட்டூன் காதல் சொல்கிறார்கள் இங்கே!

''பீம் பீம் பீம்!'' என்று ஆரம்பித்த வந்தனா,

''எனக்கு 'சோட்டா பீம்’ ரொம்பப் பிடிக்கும். ஏன்னா, பீம் மாதிரியே எனக்கும் லட்டு பிடிக்கும். எல்லோரும் என்னை முறைக்கிற மாதிரி தெரியுதே. எத்தனை வயசானா என்ன, கார்ட்டூன் சேனல் பார்த்தா... மைண்டே ரிலாக்ஸ் ஆயிடும். அழுவாச்சி மெகா சீரியல் பார்க்கிறவங்க எல்லாம், ஒரு முறை கார்ட்டூன் சேனல் பாருங்களேன். நீங்களே உணர்வீங்க. ஆனா, நான் ரொம்ப கார்ட்டூன் பார்க்கிறேன்னு ஒரு தடவை எங்க வீட்ல கார்ட்டூன் சேனல்ஸை மட்டும் 'சப்ஸ்க்ரைப்’ பண்ணல. அப்புறம் கெஞ்சிக் கூத்தாடி, ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் மட்டும் பார்க்கிறேன்னு ஒப்பந்தமெல்லாம் போட்டு ஒப்புக்க வெச்சேன். இன்னமும் அந்தக் கட்டுப்பாட்டை மதிச்சு வாழ்ந்துட்டு இருக்கேன். இதுல என்ன காமெடினா, அந்த ரூல் போட்டது நான் எட்டாம் கிளாஸ் படிக்கும்போது. இப்போ சி.ஏ படிக்கிறேன்... கார்ட்டூன் பார்த்துட்டே!'' என்று சிரிக்கிறார் சி.ஏ படிக்கும் வந்தனா.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''கதறிக் கதறி கார்ட்டூன் பார்க்கிறவங்க நாங்க! ''

''பென்டென்... என்னோட ஃபேவரைட் பா!'' என்று சொல்லும் சரண்யா,

''என்னோட ஃபேஸ்புக் புரொஃபைல் பிக்சர்ல இருந்து 'வாட்ஸ்ஆப்’ வரைக்கும் எல்லாமே 'பென்’தான். காலேஜ்ல என் பட்டப் பெயர் 'பொம்மப்படம்’. இந்த கிண்டலுக்கெல்லாம் அசிங்கப்படாம, ஆனந்தமா கார்ட்டூன் பார்ப்பேன். நானும் என் தம்பியும் போட்டி போட்டு 'பென்டென்’ வாட்ச் வாங்கிக் குவிப்போம். அதையெல்லாம் காலேஜுக்கு கட்டிட்டுப்போனா ரவுண்ட் கட்டி கிண்டலடிப்பாங்கனு, நான் வாங்கறதையும் தம்பிகிட்டயே கொடுத்துடுவேன். எவ்வளவு பெரிய மனசு பாருங்க! நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து 'பென்டென்’ ஸ்டிக்கர்ஸை வீடெல்லாம் ஒட்டி வச்சிருக்கோம். 'எப்போதான் திருந்துவே?’னு திட்டுறாங்க எல்லோரும். நான் என்ன தப்பு பண்றேன், திருந்துறதுக்கு? காலேஜ் முடிச்சு, வேலைக்குப் போய், கல்யாணம் ஆனதுக்கு அப்புறமும்... 'பென்டென்’ பாப்பேன்!'' என்று அழுத்தமாகவே சொல்கிறார் மதுரை லேடி டோக் கல்லூரியில் இங்கிலீஷ் லிட்ரேச்சர் படிக்கும் சரண்யா.

'இன்ஜினீயரிங் முடிக்கப் போற எனக்குப் பிடிச்ச சேனல்கள், 'போகோ’, 'கார்ட்டூன் நெட்வொர்க்’, 'டிஸ்னி’, 'ஜெடிக்ஸ்’! திட்டித் திட்டி அம்மாவுக்கு அலுத்துப் போச்சு. சிலசமயம் வேற வழியில்லாம அவங்களும் கூட உட்கார்ந்து 'டாம் அண்ட் ஜெர்ரி’ பார்ப்பாங்க. ஆனா, 'கே.ஜி பிள்ளைங்க மாதிரி கார்ட்டூன் பெட் ஸ்ப்ரெட் வாங்கிறதெல்லாம் டூ மச்!’னு சிலர் கண்டனம் தெரிவிக்கிறாங்க. அடப் போங்கப்பா!'' என்கிறார் மதுரை, வேலம்மாள் கல்லூரியில் படிக்கும் பிரியா.

''ஸ்டுவர்ட் லிட்டில்ங்கற அனிமேட்டட் சீரீஸ் பாருங்க... நீங்களும் ஃபேன் ஆயிடுவீங்க!'' என்று பரிந்துரைக்கும் மதுரைப் பொண்ணு மீனு, சென்னை எஸ்.ஆர்.எம் பொறியியல் கல்லூரியில் இன்ஜினீயரிங் படிக்கிறார்.

''அதுல ஸ்டுவர்ட்டா வர்ற அந்த வெள்ளை எலி, ஸோ கியூட்! நிறைய ஸ்டூவர்ட் டாய்ஸ் வெச்சிருக்கேன். நான் ஸ்கூல் படிக்கும்போது எங்கப்பா எனக்காக 'ஸ்டுவர்ட் லிட்டில் 3’ பட டி.வி.டி வாங்கிட்டு வந்தார். அப்போ எனக்கு எக்ஸாம் நடந்துட்டு இருந்தது. ஆனாலும், ஆர்வக்கோளாறுல அந்தப் படத்தைப் பார்த்தேன். அம்மா டென்ஷனாகி, எங்கப்பாவைத் திட்டி, என்னைத் திட்டி, கடைசியா டி.வி.டி-யை உடைச்சுப் போட்டுட்டாங்க. அப்போ அழுத அழுகை மாதிரி இதுவரை நான் அழுததில்லை. அப்படி கதறிக் கதறி கார்ட்டூன் பார்க்கிறவங்க நாங்க!'' என்று கெத்தாகச் சொல்கிறார்!

வளர்ந்த குழந்தைகள்!

- அ.பார்வதி 

படங்கள்: எ.கிரேசன் எபினேசர்