Published:Updated:

’திருஷ்டி சுத்திப் போடுங்க!’

உறவே வா... உற்சாகம் தா!

’திருஷ்டி சுத்திப் போடுங்க!’

உறவே வா... உற்சாகம் தா!

Published:Updated:
’திருஷ்டி சுத்திப் போடுங்க!’

ங்களுடையது... கூட்டுக் குடும்பம். எங்களுக்கும், கணவரின் சகோதரருக்கும் சேர்த்து ஆண், பெண் என 6 பிள்ளைகள். சிங்கப்பெருமாள் கோவில் அருகே, 12 வீடுகள் கொண்ட அபார்ட்மென்ட்டின் அத்தனை வீடுகளையும், எங்கள் பையன்கள், பெண்கள், சம்பந்தி சொந்தங்கள் மற்றும் பிள்ளைகளின் நண்பர்களே வாங்கிவிட, கோடை விடுமுறையில், ஒரே நாளில் நடைபெற்றது அத்தனை வீடுகளுக்கும் கிரகப்பிரவேசமும், ஒரு பேரனின் உபநயனமும். கொண்டாட்டத்துக்குக் கேட்கவா வேண்டும்! அனைவரும் நான்கு நாட்கள் அங்கேயே தங்கி, ஆள் வைத்து சமைத்து, பெரியவர்கள் பேசி மகிழ்ந்து, சிறியவர்கள் விளையாடித் தீர்த்து... என்று ஒரே குதூகலம்தான்.

வேலைக்குச் செல்லும் பேரன் முதல், மூன்றாம் வகுப்பு படிக்கும் பேரன் வரை, 10 பேரன், பேத்திகள் எங்களுக்கு. உறவினர்கள், நண்பர்கள் என இன்னும் 5, 6 மழலைச் செல்வங்களும் சேர்ந்தனர். அபார்ட்மென்டைச் சுற்றி இருக்கும் பெரிய மைதானத்தை மனதில் வைத்து, விசேஷத்துக்குக் கிளம்பும்போதே கிரிக்கெட் பந்து, பேட், ஃபுட் பால் உள்ளிட்ட அவுட்டோர் கேம் பொருட்களும்... தாயம், சீட்டுக்கட்டு, டிரேட், பல்லாங்குழி என இண்டோர் கேம் பொருட்களும் தனி லக்கேஜ் ஆனது... தனிக்கதை!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

’திருஷ்டி சுத்திப் போடுங்க!’

கேம்ஸ்கள் வழக்கம்போல களைகட்டின. எல்லா குடும்பங்களும் ஒரு வீட்டில் கூடி, சகஸ்ரநாமம், பஜனைகள் செய்து, மழலைகளின் ஆடல் பாடல்களில் திளைத்தோம். இரவு உணவுக்குப் பின் குழந்தைகள் லேப்டாப்-ல் படம் பார்த்து மகிழ, பெரியவர்கள் தாயம், சீட்டு, அரட்டைக் கச்சேரி என மகிழ்ச்சியில் நீந்தினோம். எல்லா வீடுகளும் எங்கள் உறவினர்களுடையதாகவே இருந்ததால், சுற்றுலா தலங்களில் எடுக்கும் வாடகை வீடுகள் போல, அவரவருக்கு பிடித்த அறைகளில் உறங்கினோம். ஒவ்வொரு நாளும், தீராத கதைகளைப் பேசித் தீர்த்து உறங்கச் செல்லும்போது, விடியற்காலைக்கு சற்று முந்தின நேரமாக இருக்கும் என்பது, டெயில் பீஸ்!

நகர சந்தடியின்றி, போக்குவரத்து ஆரவாரம் இன்றி, வெயில் தாக்கமின்றி, காற்றோட்டமான கிராமத்துச் சூழலில் இருக்கும் அந்த அபார்ட்மென்ட்களின் புதுமனை புகுவிழாவுக்கு வந்து வாழ்த்திய மற்ற உறவுகளும், நட்பும், 'திருஷ்டி படாம சுத்திப் போடுங்க!’ என்று சொல்லிச் சென்றனர்.

உண்மையில், உறவுகள் சேரும்போது கிடைக்கும் சந்தோஷத்துக்கு இணையே இல்லைதான்!

- எஸ்.விஜயலஷ்மி, ஆதம்பாக்கம்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism