Published:Updated:

''வேடிக்கை பார்க்க வந்த எனக்கு.... பம்பர் பரிசு!''

உற்சாக குளுக்கோஸ் ஏற்றிய ஒரு திருநாள் ஹெச்.ராசிக்ராஜா, படங்கள்: எம்.உசேன், சொ.பாலசுப்ரமணியன்

''வேடிக்கை பார்க்க வந்த எனக்கு.... பம்பர் பரிசு!''

உற்சாக குளுக்கோஸ் ஏற்றிய ஒரு திருநாள் ஹெச்.ராசிக்ராஜா, படங்கள்: எம்.உசேன், சொ.பாலசுப்ரமணியன்

Published:Updated:

கோடையை குதூகலமாகக் கொண்டாட... வாசகிகளை சென்னை 'ஜாலி டே’வுக்கு அழைத்திருந்தது அவள் விகடன். 'சத்யா’ நிறுவனம் இணையாக நிற்க... 'ஜி.ஆர்.டி கோல்டு’, 'ரேடியோ சிட்டி’ ஆகிய நிறுவனங்களும் துணையாக வர... மே 17-ம் தேதியன்று நடத்தப்பட்ட முதல் நாள் போட்டிகளில் இருந்தே தொடங்கியது... மகிழ்ச்சி ஆரவாரம்!

இந்த முறை வாசகிகளின் வசதிக்காக சென்னையில் முகப்பேர், திருவல்லிக்கேணி, குரோம்பேட்டை ஆகிய மூன்று இடங்களில் முன்தேர்வுப் போட்டிகள் கலக்கலாக நடத்தப்பட்டன. அனைத்து இடங்களிலும் திரண்டு வந்து, போட்டிகளில் கலக்கினர் தோழிகள். குறிப்பாக... ரங்கோலி, வீணாக்காதே, சூப்பர் ஹேர் ஸ்டைல் போன்ற போட்டிகளில் ஒவ்வொருவரும் விதம்விதமாக அசத்தினர். டான்ஸ் மச்சி டான்ஸ், உல்டா புல்டா போட்டிகளில் பல பாட்டிகள், டீன்ஸ்களையே தூக்கிச் சாப்பிட்டனர்.

''வேடிக்கை பார்க்க வந்த எனக்கு.... பம்பர் பரிசு!''

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

18-ம் தேதி காலையில் இருந்தே களைகட்டியது 'ஜாலி டே’! சென்னையின் மிகப்பெரிய அரங்கமான காமராஜர் அரங்கத்தில், பெரிய அளவில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. வழக்கமான உற்சாகத்தோடு நிகழ்ச்சித் தொகுப்பாளர் சுபாஷினி அந்த நாளைத் துவக்கி வைத்தார். டான்ஸ் மச்சி டான்ஸ் இறுதி போட்டிகள் நடந்தேறியபோது, மேடைக்குக் கீழேயும் கலக்கினர் மச்சீஸ். கல்லூரி மாணவிகள் பலர் குரூப் குரூப்பாக வந்திருந்து காட்டிய உற்சாகத்தில் அரங்கம் அதிர்ந்தது என்றே சொல்ல வேண்டும்.

இடையிடையே பொது நடனத்துக்கு அழைப்பு விடுத்து, ஹிட் பாடல்கள் பீட் கொடுக்க, தோழிகள் வயதை மறந்து ஆடித் தீர்த்தனர். நடுநடுவே சர்ப்ரைஸ் போட்டிகள் மற்றும் லேட்டஸ்ட் அவள் விகடன் இதழிலிருந்து கேள்விகள் கேட்கப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. ஜி.ஆர்.டி நிறுவனம் சார்பிலும் கேள்விகள் கேட்கப்பட்டு, கிஃப்ட் வவுச்சர்கள் வழங்கப்பட்டன. 'ரேடியோ சிட்டி’யின் 'ஆர்ஜே’வான சக்தி யின் 'வார்த்தையோடு விளையாடு’ எனும் போட்டி வாசகிகளை வெகுவாக ஈர்த்தது.

''வேடிக்கை பார்க்க வந்த எனக்கு.... பம்பர் பரிசு!''

ஸ்ரீரங்கம், ஆரணி, கடலூர் என நீண்ட தூரத்திலிருந்தும் வந்திருந்த நீண்ட நாள் வாசகிகள், தங்கள் அனுபவங்களை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொண்டது... பலரையும் கவர்ந்தது!

அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்த 'என்ன விலை’ போட்டி மற்றும் 'பம்பர் பரிசு’ப் போட்டிகள் நிறைவு நிகழ்ச்சிகளாக நடத்தப்பட்டன. முடிவுகளை அறிவிப்பதற்கு முன்பாக நடுவர்கள் பில்டப்களை அதிகரிக்க, அரங்கம் முழுவதும் அமைதியோ அமைதி! இறுதியில் சத்யா வழங்கிய 'என்ன விலை’ போட்டியில் திருவேற்காடு, தேவிபாலாவுக்கு டி.வி கிடைக்க... ''ரொம்ப ஹேப்பியா இருக்கேன். முதல்லயே சத்யா ஷோரூமுக்கு போய் எல்லா பொருட்களோட விலையையும் பார்த்துட்டு வந்தேன். எனக்கு சான்ஸ் கிடைக்கவும்... சரியா விலையைச் சொல்லி டி.வி-ய அள்ளிட்டேன்ல!'' என்றார் முகம் கொள்ளா மகிழ்ச்சியுடன்.

சத்யா வழங்கிய பம்பர் பரிசுப் போட்டி யில் வென்ற மாலதி, அடையாரில் உள்ள தனியார் நிறுவனத்தில் டெபுடி ஜெனரல் மேனேஜர். ''நான் நீண்டகால வாசகி. நிகழ்ச்சி முடியும் வரை இருந்து என்ஜாய் பண்ணணும்னு நினைச்சுதான் உக்கார்ந்திருந் தேன். இதுக்காக பம்பர் பரிசையும் கொடுத் தது... இரட்டிப்பு மகிழ்ச்சி!'' என்றார் அசத்தலாக!

''வேடிக்கை பார்க்க வந்த எனக்கு.... பம்பர் பரிசு!''

பாட்டுக்கு பாட்டு, மௌன மொழி, உல்டா புல்டா, குரலிசை என்று உள்ளிட்ட அனைத்துப் போட்டிகளின் முடிவுகளும் அறிவிக்கப்பட்டு மூன்று லட்ச ரூபாய் மதிப்புள்ள பரிசுகள் வழங்கப்பட... வாசகிகள் பலரும், சுமக்க முடியாமல் சுமந்து நின்ற காட்சி... ஆஹா!

காலையின் உற்சாகம் மாலை வரை குறையாதிருந்ததோடு, கூடுதலாகவும் உற்சாக குளுக்கோஸ் ஏற்றிக்கொண்ட திருப்தியோடு வீடு திரும்பினார்கள் தோழிகள்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism