Published:Updated:

வெளிநாட்டு மருத்துவப்படிப்பு! - உஷார்... உஷார்!

ஃபாலோ - அப்சா.வடிவரசு

வெளிநாட்டு மருத்துவப்படிப்பு! - உஷார்... உஷார்!

ஃபாலோ - அப்சா.வடிவரசு

Published:Updated:

''மருத்துவம் படிக்கலாம் வாங்க! என்ற தலைப்பில், 6.5.14 தேதியிட்ட இதழில் ஒரு கட்டுரை வெளியாகியிருந்தது. வெளிநாட்டில் மருத்துவம் படிக்க விண்ணப்பிப்பது எப்படி என்ற தகவலையும் சேர்த்தே வெளியிட்டிருக்கலாமே’' என்று ஆதங்கப்பட்டு விகடன் குரல்வழி சேவையில் (044-66802922) பதிவு செய்திருந்தார் நம் வாசகி ஒருவர்.

இதோ... அதற்கான தகவல்களை உங்களுக்காக தருகிறார்... சென்னை, ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி முதல்வர் மீனாட்சிசுந்தரம்...

''எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ் போன்ற இளங்கலை மருத்துவப் படிப்புகளுக்கு சில நாடுகளைச் சேர்ந்த கல்லூரிகளும், பல்கலைக்கழகங்களும் நுழைவுத் தேர்வின் மூலம் மாணவர் சேர்க்கையை நடத்துகின்றன. சில நாடுகளில் அது அவசியமில்லை. வெளிநாட்டில் மருத்துவம் படிக்க, அந்தக் கல்வி நிறுவனத்தின் வலைதளத்தில் விண்ணப்பங்களை டவுன்லோட் செய்து பயன்படுத்தலாம். ஆன்லைன் நுழைவுத்தேர்வு, ப்ளஸ் டூ மதிப்பெண்களின் அடிப்படையில் என்றெல்லாம்கூட சில கல்லூரிகளில் மாணவர்களைத் தேர்ந்தெடுக்கிறார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வெளிநாட்டு மருத்துவப்படிப்பு! - உஷார்... உஷார்!

எம்.டி போன்ற முதுகலை மருத்துவப் படிப்புகளைப் பொறுத்தவரையில், ஒவ்வொரு நாட்டுக்கும் பிரத்யேக நுழைவுத் தேர்வுகள் உண்டு. அமெரிக்காவில் படிக்க விரும்பினால்... இ.சி.எஃப்.எம்.ஜி (ECFMG-Educational Commission for Foreign Medical Graduates), யு.எஸ்.எம்.எல்.இ (USMLE-United States Medical Licensing Examination) நுழைவுத் தேர்வுகளையும், இங்கிலாந்தில் படிக்க விரும்பினால்... பி.எல்.ஏ.பி (PLAB-Professional and Linguistic Assessments Board) என்ற நுழைவுத் தேர்வையும் எழுத வேண்டும்.

சம்பந்தப்பட்ட நாட்டின் வரையறுக்கப்பட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டுதான் மருத்துவம் படிக்க முடியும். உதாரணமாக, ரஷ்யாவில் இளங்கலை மருத்துவம் படிப்பவர்கள், 7 ஆண்டுகள் படிக்கவேண்டும். அந்நாட்டு மொழியிலும் சில பாடங்களைப் படிக்கவேண்டியிருக்கும். இத்தகைய விதிமுறைகள், சேரவிருக்கும் கல்லூரி அல்லது பல்கலைக்கழகம் முறையாக அனுமதி

வெளிநாட்டு மருத்துவப்படிப்பு! - உஷார்... உஷார்!

பெற்றதா, அங்கு படித்தால் நம் நாட்டில் மருத்துவப் பணியினை தொடர முடியுமா என்பது போன்ற முக்கியத் தகவல்களை எல்லாம் தீர விசாரித்து அறிந்துகொண்டு முடிவெடுப்பது முக்கியம். இந்தியன் மெடிக்கல் கவுன்சிலை நாடியும் விவரங்களைப் பெறலாம்'' என்று விவரித்த மீனாட்சி சுந்தரம்...

''வெளிநாட்டில் மெடிக்கல் ஸீட் வாங்கித் தருவதாக லட்சங்களில், கோடிகளில்கூட ஏமாற்றும் தரகர்கள் நிறைய உள்ளனர்... ஜாக்கிரதை'' என்கிற முக்கியமான எச்சரிக்கையை சொல்லத் தவறவில்லை!

ஆம்... 'அமெரிக்காவுல மெடிக்கல் ஸீட் வாங்கித் தர்றேன்... ஆஸ்திரேலியாவுல வாங்கித் தர்றேன்’ என்றெல்லாம் சொல்லிக்கொண்டு திரியும் தரகர்கள் கூட்டம், இன்றைக்கு அதிகரித்துவிட்டது. இவர்களிடம் சிக்கினால்... ஏதோ ஒரு வெளிநாட்டு டுபாக்கூர் கல்லூரியில்தான் இடம் என்பதை மனதில் கொள்ளுங்கள்!