Published:Updated:

அடிச்சாச்சு 25%

ம.பிரியதர்ஷினி, வே.கிருஷ்ணவேணி, சா.வடிவரசு

அடிச்சாச்சு 25%

ம.பிரியதர்ஷினி, வே.கிருஷ்ணவேணி, சா.வடிவரசு

Published:Updated:

ந்தியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு, பிரதமராகப் பொறுப்பேற்றிருக்கும் நரேந்திர தாமோதர்தாஸ் மோடியின் அமைச்சரவையில், 25 சதவிகித இடத்தைப் பிடித்துள்ளனர் பெண்கள். பெருமை தருகிற இந்த விஷயத்தோடு, அந்த அமைச்சர்கள் பற்றிய சுவாரஸ்யமான 'இன்பாக்ஸ்’ இங்கே!

அடிச்சாச்சு 25%

சுஷ்மா ஸ்வராஜ் (வெளியுறவுத்துறை மற்றும் வெளிநாடுவாழ் இந்தியர் நலத்துறை அமைச்சர்)

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

1973-ல் உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞராக வாழ்க்கையைத் துவங்கிய சுஷ்மா ஸ்வராஜ், 25 வயதில் ஹரியானா சட்டசபை தேர்தலில் ஜனதா கட்சியின் சார்பில் போட்டியிட்டு வென்று, இளம்வயதில் மாநில கேபினட் அமைச்சர் பதவியைப் பெற்றவர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் ஆவார். படிப்படியாக பதவிகளும், பெருமைகளும் உயர, டெல்லியின் முதல் பெண் முதலமைச்சர் என்கிற பெருமையை 88-ம் ஆண்டில் எட்டினார். ஒருகட்டத்தில் பி.ஜே.பி-யில் அசைக்க முடியாத சக்தி எனும் அளவுக்கு வளர்ந்துவிட்ட இந்தப் பெண்மணி, டிவிட்டரில் மிகவும் ஆக்டிவாக இருப்பவர். இவருடைய இளமைக் கால படங்கள்தான், தற்போது டிவிட்டரில் அதிகமாக ஷேர் ஆகிறது.

அடிச்சாச்சு 25%

மேனகா காந்தி (பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர்)

இந்திராகாந்தியின் மருமகள். கணவர்  சஞ்சய் காந்தியின் மறைவுக்குப் பிறகு தனிக்கட்சி ஆரம்பித்தவர், ஒரு கட்டத்தில் ஜனதாதள் கட்சியோடு சேர்ந்ததில் கிடைத்தது அமைச்சர் பதவி. இன்று நாம் கடைகளில் 'பேக்டு’ உணவுப் பொருட்கள் வாங்கும்போது, சைவம் என்றால் பச்சை வட்டமும், அசைவம் கலந்த பொருள் என்றால் சிவப்பு வட்டமும் கூடிய அடையாளத்தைக் காண்போம். அது, அமைச்சராக இருந்தபோது மேனகாவின் முயற்சியால் கொண்டுவரப்பட்டது. மேனகா, என்றாலே 'பிராணிகள் நலன் விரும்பி' என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதான். முதன்முறையாக உருவாக்கப்பட்ட விலங்குகள் நலத்துறை அமைச்சகத்தின் பதவியையும் இவர் வகித்திருக்கிறார்.

அடிச்சாச்சு 25%

ஸ்மிரிதி இராணி (மனித வள மேம்பாட்டு அமைச்சர்)

ஆரம்ப காலங்களில் 'மெக்டொனால்ட்’ உணவகத்தில் வெயிட்ரஸ் பொறுப்பில் பணியாற்றி, பின்பு மாடலிங், சினிமா, சீரியல், தயாரிப்பாளர் என்று கடந்து வந்தவர் ஸ்மிரிதி இராணி. இன்று மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சராகி இருக்கும் இவரை, கல்லூரிப் படிப்பைக்கூட தொடவில்லை என்று காங்கிரஸ்காரர்கள் மட்டம் தட்ட, அதுவே அவருடைய புகழுக்குக் காரணமாக அமைந்துவிட்டது. 'அவருடைய ஆங்கிலம், இந்தி புலமை மற்றும் அவருக்குள் இருக்கும் திறமைகளை கண்டே அவருக்கு இந்தப் பதவி வழங்கப்பட்டிருக்கிறது. படிப்பு ஒரு பொருட்டே இல்லை’ என்று பி.ஜே.பி தரப்பில் இருந்து பதிலடி கொடுத்துள்ளனர். சமீபத்திய தேர்தலில், ராகுல் காந்தியை எதிர்த்து அமேதி தொகுதியில் போட்டியிட்ட இவர், தோல்வியைத் தழுவினாலும்... ராகுல் காந்திக்கு சிம்ம சொப்பனமாகவே இருந்தார்.

அடிச்சாச்சு 25%

ஹர்சிம்ரத் கவூர் பாதல் (உணவு பதப்படுத்துதல் மற்றும் தொழிற்சாலைத்துறை அமைச்சர்)

47 வயதாகும் ஹர்சிம்ரத்தின் உடைகள் படுபிரபலம். அட்டகாசமான வண்ணங்கள், அசத்தலான டிசைன்கள் என அவர் அணிந்து வருவதற்குக் காரணம் இல்லாமல் இல்லை. அடிப்படையில் டெக்ஸ்டைல் டிசைனரான ஹர்சிம்ரத், மிகவும் விலை உயர்ந்த 'டேன் டோட்’ கைப்பையின் ரசிகை. அவர் வைத்திருக்கும் கைப்பைகள் அத்தனையும் அந்த ரகம்தான். 2008-ல் பெண் சிசுக்கொலைகளுக்கு எதிராக இவர் பஞ்சாபில் நடத்திய பேரணி, மிகப் பிரபலம்.

உமாபாரதி (நீர்வள மேலாண்மை, நதிகள் மேம்பாடு மற்றும் கங்கை நதி புனரமைப்பு துறை அமைச்சர்)

மத்தியப்பிரதேச மாநிலம் டிகாம்கர் மாவட்டத்தில் பிறந்த உமாபாரதிக்கு, வயது 55. பள்ளிக்

அடிச்சாச்சு 25%

காலங்களில் மத நூல்கள் மற்றும் அரசியல் மீது அதிக ஆர்வம் கொண்டதால் பகவத் கீதை போன்றவற்றை மிகுந்த ஆர்வத்தோடு கற்றுக்கொண்டு, தன்னை ஒரு ஆன்மிக குழந்தையாகவே மாற்றிக்கொண்டார். பின்னர் பல்வேறு மத சொற்பொழிவுகளில் பங்கேற்றுப் பேசியவர், அரசியலிலும் அதீத ஈடுபாடு கொண்டார். 25 வயதிலேயே நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியுற்றார். கொஞ்சமும் மனம் தளராமல் அடுத்த தேர்தலில் மத்தியப்பிரதேசத்தின் கஜுராஹோ மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதைத் தொடர்ந்து அங்கே நடைபெற்ற அடுத்த மூன்று நாடாளுமன்றத் தேர்தல்களிலும் தொடர் வெற்றி பெற்று வரலாறு படைத்தவர். மாநிலத்தின் முதல்வராகவும் பதவி வகித்தவர்.

நஜ்மா ஹெப்துல்லா (சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர்)

அடிச்சாச்சு 25%

இந்தியாவின் சுதந்திர போராட்ட வீரர் மௌலானா அப்துல் கலாம் ஆசாத்தின் உறவினர். பிரபல நடிகர் அமீர்கானின் உறவினரும்கூட. பாரம்பரிய காங்கிரஸ் குடும்பத்தைச் சேர்ந்த இவர், 1986 முதல் ராஜ்யசபா உறுப்பினர் பதவியில் நீடிக்கிறார். இடையில் கட்சியில் ஏற்பட்ட கசப்பான அனுபவத்தால், 2004-ல் பி.ஜே.பி-யில் இணைந்த இவர், தற்போது அமைச்சரவையில் இடம்பிடித்துவிட்டார். பெண்கள் தொடர்பான பிரச்னைகள், வன்முறைகள் மற்றும் சமூக முன்னேற்றம் தொடர்பானவற்றை ஆய்வுக் கட்டுரைகளை எழுதி பல நாடுகளையும் திரும்பி பார்க்கச் செய்தவர். இந்த 74 வயதிலும் சமூகம் சார்ந்தும், ஆசிய நாட்டின் பெருமைகள் சார்ந்தும் புத்தகங்களை எழுதிவருகிறார் இந்த சீனியர்.

அடிச்சாச்சு 25%

நிர்மலா சீதாராமன் (வணிகம் மற்றும் தொழிற்துறை தனிப்பொறுப்புடன்கூடிய இணை அமைச்சர்)

நிர்மலா பிறந்தது, திருச்சியில். எம்.ஃபில் பட்டம் பெற்றவர். கணவர் பிரபாகர், காங்கிரஸ் குடும்பத்தைச் சேர்ந்தவர். ஆனால், அரசியலில் நிர்மலா சேர்ந்ததோ பி.ஜே.பி கட்சியில். கட்சியின் செய்தி தொடர்பாளராக உயர்ந்தார். மத்திய அமைச்சர்கள் அனைவரும் தொடர்பு மொழியாக ஆங்கிலத்தையும், இந்தியையுமே கொண்டிருக்க, டிவிட்டரில் அடிக்கடி தமிழ் ஸ்டேட்டஸ் போட்டு, தன் தமிழ் பாசம் காட்டுவார் நிர்மலா. மேற்படிப்பு, திருமணம் என வசிக்கும் மாநிலமும் மொழிகளும் மாறினாலும், தன்னுடைய மேடைத் தமிழ் என்றும் மாறியதில்லை என்று பெருமைப்பட்டுக் கொள்பவர். இதனாலேயே தென்னகத்தின், குறிப்பாக தமிழகத்தின் பிரதிநிதியாகவே இப்போது மந்திரிசபையில் பார்க்கப்படுகிறார்.