ஸ்பெஷல் 1
Published:Updated:

சடசடவென சரியும் தங்கம்... இதுதான் வாங்குவதற்குரிய தருணம்!

இரா.ரூபாவதி,    படம்: ஜெ.வேங்கடராஜ்

'த ங்கத்தின் விலை, கிட்டத்தட்ட ஒரு மாத காலமாக இறங்குமுகத்திலேயே இருக்க... ஏற்கெனவே வாங்கி வைத்திருப் பவர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். 'இப்போது தங்கம் வாங்கலாமா... இல்லை இன்னும் குறையுமா?' என்று மற்றவர்கள் யோசித்துக்கொண்டுள்ளனர்.

சடசடவென சரியும் தங்கம்... இதுதான் வாங்குவதற்குரிய தருணம்!

இந்நிலையில் தங்கம் பற்றி பேசும் மும்பை, 'காம்டிரென்ட்ஸ் ரிஸ்க் மேனேஜ்மென்ட்’ என்ற நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஞானசேகர் தியாகராஜன், ''உலகப் பொருளாதாரம் வளர்ச்சி அடையத் தொடங்கியுள்ளதால், இந்தியப் பொருளாதாரமும் வளர்ச்சி அடையும் என்கிற நம்பிக்கை உருவாகியுள்ளது. அமெரிக்க டாலரின் மதிப்பும் வலுவான நிலையில் உள்ளது. இந்தக் காரணங்களால், தங்கத்தின் விலை குறைந்துள்ளது. பங்குச் சந்தையின் வளர்ச்சிக்குத் தேவையான நடவடிக்கைகளை மோடியின் அரசு எடுக்கும் என்ற நம்பிக்கையில், தங்கத்தில் இருந்து முதலீட்டை பங்குச் சந்தைக்கு மாற்றியுள்ளனர் பலரும். தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை மத்திய அரசு இன்னும் குறைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனாலும் விலை குறைகிறது. 10 கிராம் தங்கம் (24 காரட்) 24,000 ரூபாய் வரை குறைவதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஆறு மாதம் முதல் ஒரு வருடம் வரை இந்த இறக்கம் இருக்கும். எனவே, தங்கம் வாங்குவதற்கு இது நல்ல தருணமே!

அதேசமயம், பெரிய அளவில் விலை குறைவதற்கு வாய்ப்பு இல்லை. ஒரு வருடம் அல்லது அதற்கு அடுத்த காலங்களில் விலை உயரும் என்பதால், ஏற்கெனவே வாங்கி வைத்திருப்பவர்கள், அவசரமில்லாத பட்சத்தில் அதுவரை காத்திருக்கலாம்'' என்று சொன்னார்.

தங்கம் வாங்கத் தயாராகிவிட்டீர்களா?

சடசடவென சரியும் தங்கம்... இதுதான் வாங்குவதற்குரிய தருணம்!

தங்கம் வாங்குவது தொடர்பாக நிதி ஆலோசகர்கள் பொதுவாக முன்வைக்கும் டிப்ஸ்...

திருமணத்துக்காக தங்கத்தில் முதலீடு செய்பவர்கள், நகைகளாக வாங்குவதைத் தவிர்க்கலாம். இப்போது வாங்கும் டிசைன், இன்னும் 10 ஆண்டுகளில் பிடிக்காமல் போனால், மாற்றும்போது செய்கூலி, சேதாரம் என நஷ்டமாகும்.

முதலீடு நோக்கில் தங்கம் வாங்குபவர்கள் காயின்களாக வாங்குவதைத் தவிர்க்கவும். இவற்றை விற்கும்போது 3-5 சதவிகிதம் எடையில் கழிவு இருக்கும்.

நீண்டகால முதலீடு எனில், கோல்டு மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள், கோல்டு இ.டி.எஃப் திட்டங்களில் முதலீடு செய்யலாம். செய்கூலி, சேதாரம் போன்ற பிரச்னைகள் இருக்காது.