ஸ்பெஷல் 1
Published:Updated:

“ஆண் பிள்ளைகள் அப்படித்தான் இருப்பார்கள்!”

சா.வடிவரசு

த்தரப்பிரதேச மாநிலத்தில் 2 சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, தூக்கிலிடப்பட்ட சம்பவம், நாடு முழுக்க கொந்தளிப்பை உருவாக்கியுள்ளது. இந்தச் செய்தி ஆவேசத்தைக் கிளப்பிக் கொண்டிருக்கும்போதே... அதே மாநிலத்தின் அலிகர் நகரில் பெண் நீதிபதி ஒருவர் மீது பாலியல் பலாத்கார முயற்சி நடந்திருக்கிறது. இதைத் தொடர்ந்து, அந்த மாநிலத்தின் பல பாகங்களிலிருந்தும் பாலியல் பலாத்கார சம்பவங்கள் பற்றிய செய்திகள் மீடியாக்களில் தொடர்ந்து இடம்பிடித்து வருகின்றன.

இந்நிலையில், தமிழகத்தின் பொள்ளாச்சியில், பள்ளி விடுதி ஒன்றில் தங்கியிருந்த இரண்டு சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருக்கும் செய்தி, குலைநடுங்க வைக்கிறது!

“ஆண் பிள்ளைகள் அப்படித்தான் இருப்பார்கள்!”

இந்தக் கொடுமைகள் எல்லாம் ஒருபுறம் நடந்துகொண்டிருக்க... இந்த சம்பவங்களை எல்லாம் அரசியல்வாதிகள் எந்த அளவில் கையாளுகிறார்கள் என்பதுதான் கொடுமையிலும் கொடுமையாக இருக்கிறது. மக்கள் எல்லாம், பெரிய மனிதர்கள் என்று ஓட்டுப் போட்டு தேர்ந்தெடுத்திருக்கும் இந்தப் 'புண்ணியவான்'களின் வாயிலிருந்து வந்துவிழுந்த வார்த்தைகள் சிலவற்றை இங்கே உங்கள் பார்வைக்காக வைக்கிறோம்....

''ஆண் பிள்ளைகள் அப்படித்தான் இருப்பார்கள்!''

- ஆளும் சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம்சிங் யாதவ்

''பாலியல் பலாத்காரம் உ.பி-யில் மட்டும்தான் நடக்கிறதா... கூகுள் தேடுதளத்தில் தேடிப்பாருங்கள். இந்தியா முழுக்க நடந்துகொண் டிருப்பது தெரியும்''

- உ.பி-யின் முதலமைச்சர் அகிலேஷ் யாதவ்  

''உத்தரபிரதேசம் என்பது ஒரு மிகப்பெரிய மாநிலம். எனவே, பலாத்காரம் ஆங்காங்கு நடந்துகொண்டுதான் இருக்கும். இதில் அரசை குறைகூறுவதில் எந்தவித நியாயமும் இல்லை''

- சமாஜ்வாடி கட்சியின் மூத்த தலைவர் மோசின் கான்

“ஆண் பிள்ளைகள் அப்படித்தான் இருப்பார்கள்!”

''பாலியல் பலாத்காரம் சில நேரங்களில் சரி. சில நேரங்களில் தவறு''

- மத்தியப்பிரதேச பி.ஜே.பி. அரசின் உள்துறை அமைச்சர் பாபுலால் கவுர்

''யாரும் வேண்டுமென்றே பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடுவதில்லை. தவறுதலாக நடந்துவிடுகிறது''

- சட்டீஸ்கர் மாநில பி.ஜே.பி அரசின் உள்துறை அமைச்சர் ராம் சேவக் பைக்ரா

''பொள்ளாச்சி பாலியல் பலாத்கார சம்பவத்துக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள். பாதிக்கப்பட்டோர் இழப்பீடு திட்டத்தின் கீழ் இரு மாணவிகளுக்கும் தலா 3 லட்ச ரூபாய் வழங்கப்படும்''

- தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா