ஸ்பெஷல் 1
Published:Updated:

''ஜூனியரே... ஜூனியரே... வா வா!''

''ஜூனியரே... ஜூனியரே... வா வா!''

ல்லூரி திறக்கும் காலம் இது. பள்ளியிலிருந்து கல்லூரிக்கு வலது கால் எடுத்து வைக்கும் தங்களின் கத்துக்குட்டி ஜூனியர்ஸ் செய்யும் அப்பாவித்தனங்களை, ரசித்துச் சொல்கிறார்கள், மதுரையைச் சேர்ந்த இந்த சீனியர் மாணவிகள்!

''ஜூனியரே... ஜூனியரே... வா வா!''

''ஜூனியர்ஸை பார்த்தவொடனேயே கண்டுபிடிச்சுடலாம். சேம் பின்ச் வெச்சுக்கிட்டு, 'இது என் ஸீட்... எந்திரி’னு சின்னச் சின்ன விஷயங்களுக்கு எல்லாம் சண்டை போட்டுக்கிட்டு, காலேஜ் டைமுக்கு அரை மணி நேரத்துக்கு முன்னயே கேம்பஸ்குள்ள பிரவேசிச்சு, சொல்லி வெச்சு ஒரே கலர்ல டிரெஸ் போட்டுட்டு வந்துனு... ஸ்கூல் வாடை இன்னும் மிச்சம் இருக்கும். சீனியர்ஸ் யாராவது கூப்பிட்டுப் பேசினா போதும்... திருவிழாவுல தொலைஞ்சு போன பாப்பா மாதிரி திருதிருனு முழிக்கிறதைப் பார்க்க, காமெடியா இருக்கும். சீனியர்ஸ்கிட்ட அவங்க பயமில்லாம பேசவே, ஒரு செமஸ்டர் ஆகும். நாமளும் ஜூனியரா இருந்து சீனியர் ஆனவங்கதாங்கிறதால, அவங்களை அன்பாவே பார்த்துக்குவோம்!'' என்று அக்கறையாக சொன்னார், சி.ஆர். பொறியியல் கல்லூரி மாணவி பவித்ரா.

தியாகராசர் கல்லூரி மாணவி திரிபுவனி, ''சில ஜுனியர்ஸ், நம்மையே டீல்ல விட்டிருவாங்க!'' என்று சொல்லி தன் தோழி லட்சுமிப் பிரியாவைப் பார்த்து, ''சொல்லட்டுமா..?'' என்று கேட்க, ''நானே சொல்றேன்!'' என்று ஆரம்பித்தார் லட்சுமிப் பிரியா. ''ஒரு நாள் கேன்டீன்ல ஒரு பொண்ணு என்னைப் பார்த்து சிரிச்சு, 'ஹாய்... அதுக்குள்ள வந்துட்டீங்களா..?!’னு கேட்க, எனக்கு அது யாருனு தெரியல. ஆனாலும் சமாளிச்சுட்டே, 'இல்லக்கா... பிரேக் முடிச்சிட்டுப் போயிடலாம்னு இப்போதான் வந்தோம்க்கா...’னு நான் சொல்ல, எல்லோரும் விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பிச்சிட்டாங்க.

''ஜூனியரே... ஜூனியரே... வா வா!''
''ஜூனியரே... ஜூனியரே... வா வா!''
''ஜூனியரே... ஜூனியரே... வா வா!''

நான் புரியாம முழிக்க, அந்தப் பொண்ணு சிரிச்சிக்கிட்டே, 'ஐயோ அக்கா... நான் ஃபர்ஸ்ட் இயர்!’னு சொல்ல, பெருத்த அவமானமா போயிடுச்சு. அதுல இருந்து என் ஜூனியர்ஸ் எல்லாரும் என்னை 'தங்கச்சி’னுதான் கூப்பிடுவாங்க. ஹய்யோ ஹய்யோ!'' என்று செல்லமாக அலுத்துக்கொண்டார் இந்த சீனியர்.

ம்பிகா கல்லூரி மாணவி தனப்பிரியா, ''முதல் நாள் காலேஜுக்கு நெத்தியில விபூதி வெச்சு, புது டிரெஸ், புது பேக், புது செருப்பு எல்லாம் போட்டுட்டு வந்து, கூட்டத்துல தொலைஞ்சு போன ஆட்டுக்குட்டி மாதிரி, வெல்கம் பார்ட்டியில ஜூனியர்ஸ் உட்கார்ந்திருக்கிறதைப் பார்க்கும்போது, அந்த இன்னொசன்ஸ் ரொம்ப அழகா இருக்கும். பார்ட்டி முடிஞ்சு கிளாஸுக்கு வந்ததும், அவங்களை சகஜமாக்க, சீனியர்ஸ் எல்லோரும் அவங்ககிட்ட இயல்பா பேச்சுக் கொடுப்போம். 'நல்லவேளைக்கா... ரேகிங் பண்ணிடுவீங்களோனு பயந்தோம்!’னு சில கேர்ள்ஸ் சொன்னா,

''ஜூனியரே... ஜூனியரே... வா வா!''

'இந்தப் படத்துல வர்ற மாதிரி ரேக் பண்ணுவாங்களா, அந்தப் படத்துல வர்ற மாதிரி ரேக் பண்ணுவாங்களானு பயங்கர ஆர்வமா வந்தோம். 'நோ ரேகிங்’னு சொல்லி இப்படி சப்புனு ஆக்கிட்டீங்களே!’னு சில கேர்ள்ஸ் அலுத்துக்குவாங்க. இது எப்டி இருக்கு!'' என்று சிரித்தார்.

''ஜூனியரே... ஜூனியரே... வா வா!''

துரா கல்லூரி மாணவி நிவேதா, ''ஜூனியர்ஸா... அந்த உதறல் எல்லாம் மிஞ்சிப் போனா ஒரு மாசத்துக்குதான். அதுக்கு அப்புறம் அவங்க எங்களுக்குப் பட்டப் பெயர் வைக்க ஆரம்பிச்சுடுவாங்க'' என்று சுருக்கமாக முடித்தார்.

''ஓரியன்டேஷன், வெல்கம் பார்ட்டி, காலேஜ் டூர்... இதெல்லாம் வழக்கமான ஃபார்மலிட்டீஸ்தான். ஆனா, எங்க காலேஜ்ல, ஜூனியர்ஸுக்கு சீனியர்ஸ் நடத்துற ஃபன் கேம்ஸ், ஜாலியா இருக்கும். இப்படித்தான் நான் காலேஜ்ல சேர்ந்தப்போ, தரையில உடைஞ்சுபோன பீங்கான் பாட்டில்களைப் போட்டு வெச்சு, எங்கெங்க சிதறிக் கிடக்குனு ஒரு தடவை நல்லா பார்த்துக்கச் சொல்லிட்டு, கண்ணைக் கட்டிவிட்டுட்டாங்க. அப்படியே அதைக் கடந்து அடுத்த பக்கம் போகச் சொன்னாங்க. ஃபன் கேம்ஸ்னு சொல்லி இப்படி உயிரோட விளையாடுறாங்களேனு, நான் கண்ணுல துணியக் கட்டிக்கிட்டு, ஊருல இருக்கிற சாமிய எல்லாம் கும்பிட்டு நடக்க ஆரம்பிச்சேன். 'அங்க கால வைக்காத’, 'ஐயோ, அங்க பீங்கான் இருக்கு’னு எல்லோரும் கத்தி கத்தி திகிலாக்க, ஒருவழியா அடுத்த பக்கம் ரத்தம் வராம போய் சேர்ந்துட்டு, கண் கட்டைக் கழட்டிப் பார்த்தா, நான் நடக்க ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடியே அந்த பீங்கான் துண்டுகளை எல்லாம் எடுத்திருந்திருக்காங்க. சீனியர்ஸ் எல்லோரும், 'கூல்டா செல்லம்!’னு சொல்ல, ஃபீல் குட் அனுபவம் இது. இப்படித்தான் இந்த வருஷம் எங்க ஜூனியர்ஸுக்கும் நிறைய கேம்ஸ் காத்துட்டிருக்கு''னு சொன்னாங்க பாத்திமா கல்லூரி மாணவி சாரதா.

வெல்கம் ஜூனியர்ஸ்!  

- ந.ஆஷிகா  

படங்கள்: பா.காளிமுத்து