ஸ்பெஷல் 1
Published:Updated:

'கஸ்டமர் கேர் அடாவடி... குச்சி வெச்சு அடிக்கணும்! '

'கஸ்டமர் கேர் அடாவடி... குச்சி வெச்சு அடிக்கணும்! '

'மொபைல் மொக்கை, ராங் கால் அனுபவங்கள் எல்லாம் சொல்லுங்களேன்’னு கேட்டோம் சில டீன்ஸ்கிட்ட. கொட்டிட்டாங்க கொட்டி!

மீனா ''ஃபர்ஸ்ட் இயர் படிக்கும்போது, தினமும் சரியா 10 மணிக்கு ஒரு கால் வரும். 'நீங்க மீனாதானே?’, 'செம்ம அழகா இருக்கீங்க’, 'இன்னிக்கு நீங்க போட்டுட்டு வந்த ரெட் கலர் சுடிதார் சூப்பர்’, 'நாளைக்கு எனக்காக புடவை கட்டிட்டு வர்றீங்களா?’ - இப்படிஎல்லாம் யாரோ ஒரு முகம் தெரியாத முட்டாள், டெய்லி டார்ச்சர் பண்ணிட்டு இருந்தான். கேவலமா திட்டினாலும், மறுபடியும் கால் பண்ணுவான். தெரிஞ்சவனாதான் இருக்கணும்னு, சி.ஐ.டி வேலையில் இறங்கி, பார்க்கிறவங்களை எல்லாம் சந்தேகப்பட்டுனு கிறுக்குப் பிடிச்ச மாதிரி ஆயிடுச்சு எனக்கு. 'போடா புண்ணாக்கு!’னு சிம்மையே மாத்திட்டேன். அதுக்கு அப்புறம் நோ கால்ஸ். ஆனாலும் அந்த கலாய் ஆசாமி யாரா இருக்கும்னு அப்பப்போ மைண்டுக்குள்ள ஒரு யோசனை வந்து போயிட்டே இருக்கும்!

யாருடா நீ?''

தீபா ''அப்போதான் காலேஜ்ல சேர்ந்திருந்தேன். முதல் நாள் காலேஜ் கிளம்பிட்டிருந்தப்போ அந்த கால் வந்தது. 'நாங்க மேட்ரிமோனியில இருந்து பேசுறோம். எங்ககிட்ட நீங்க மெம்பெரான ஒரு மாசத்துக்கு 50 வரன்கள் இலவசமா பார்க்கலாம். இனிஷியல் பேமென்ட்டா 5,000 ரூபாய் கட்டினா போதும்’னு கடுப்பேத்தினாங்க. அடப்பாவிங்களா... ஒரு பச்சப் புள்ளைக்கிட்ட கேட்கிற கேள்வியா இதுனு நொந்து போய், 'நாட் இன்ட்ரஸ்டட்’னு கட் பண்ணிட்டேன். கொஞ்ச நாள்ல மறுபடியும் அதே கால் வந்தது. இப்ப வரைக்கும் அப்பப்போ வந்துட்டு இருக்கு. இப்படி போன் பண்ணி பண்ணியே என்னை ஒரு தீவிர முடிவு எடுக்க வெச்சிருக்காங்க... அதாவது வீட்டுல கல்யாண பேச்சு வந்தாலும், மேட்ரிமோனியில மட்டும் வரன் பார்க்கவே கூடாது. அவ்ளோ டார்ச்சர்மா... அவ்வ்வ்!''

'கஸ்டமர் கேர் அடாவடி... குச்சி வெச்சு அடிக்கணும்! '

அர்ச்சனா ''நானா தேடிப் போய் மாட்டின ராங் கால் அது. தோழியோட பிறந்த நாளன்னிக்கு, லேண்ட் லைன்ல இருந்து கால் பண்ணி, 'ஹேப்பி பர்த்டேடீ பட்டுக்குட்டி!’னு சொன்னதுக்கு அப்புறம்தான் கவனிக்கிறேன், 'ஹலோ’னு எதிர்முனையில் இருந்து ஆண் குரல். 'ஐயையோ, நம்பரை மாத்தி போட்டுட்டோம் போல’னு, டக்குனு கட் பண்ணிட்டேன். அதிலிருந்து எங்க லேண்ட் லைனுக்கு ஒரு கால் வரும்; நான் எடுத்தா, 'ஹேப்பி பர்த்டே!’னு கலாய்ப்பாங்க. யாராவது எடுத்தா கட் ஆகிடும். அப்பாகிட்ட சொல்லி பரேடு வாங்கிக் கொடுத்த பிறகு, 'பர்த் டே’ கால் வர்றதில்ல!''

துர்கா ''சன் மியூஸிக் சேனலுக்கு அடிக்கடி கால் பண்றது என் வழக்கம். 'ஜெயம்’ ரவி வந்திருந்த சிறப்பு நிகழ்ச்சிக்கு ரொம்ப நேரமா ட்ரை பண்ணிட்டே இருந்தேன். லைன் கிடைக்கவே இல்ல. நிகழ்ச்சி முடிய அஞ்சு நிமிஷம்தான் இருந்தது. இருந்தாலும், அவர்கிட்ட பேசியே தீரணும்னு டயல் பண்ணிட்டே இருந்தேன். கிடைச்ச ஒரு குண்டூசி கேப்ல, எனக்கு ஒரு கால் வந்துச்சு. 'ஐயோ, இப்போ போய் யார் போன் பண்றா..?’னு அவஸ்தையோட அட்டெண்ட் பண்ணினா, 'மேடம் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுக்கிறீங்களா?’னு கேட்டாங்க பாருங்க... கன்னாபின்னானு திட்டிட்டு, மறுபடியும் டயல் பண்ணிட்டே டி.வி-யைப் பார்த்தா, அடுத்த நிகழ்ச்சி... காண்டாயிட்டேன்!''

நந்தினி 'புது போன் வாங்கி, புது சிம் போட்டு, 'என் மொபைல்ல இருந்து உங்க மொபைலுக்குதான் முதல்ல பேசணும்’னு அம்மாகிட்ட சென்ட்டிமென்ட்டா டயலாக் எல்லாம் சொல்லிட்டு, பிள்ளையார்கிட்ட வெச்சு எடுத்தா, ஒரு கால் வந்தது. 'நம்பரே இன்னும் யாருக்கும் கொடுக்கல... அதுக்குள்ள யாரு?’னு புது போன் வாங்கின பரவசத்துல அட்டெண்ட் பண்ணினா, கஸ்டமர் கேர் கால். 'இந்த கேம்ஸ் விளையாடணுமா, இந்த நம்பரை அழுத்துங்க’னு ஆரம்பிச்சு... தாங்க முடியல. 'சென்ட்டிமென்ட் என்னாச்சு?!’னு வீட்டுல எல்லோரும் கலாய்ச்சாங்க. போகப் போகத்தான் தெரிஞ்சது கஸ்டமர் கேர் அடாவடிகள். அப்படியே குச்சி வெச்சு அடிக்கணும் போல இருக்கும். இப்போ பழகிடுச்சு. வேற என்ன பண்றது பாஸ்?''

- அ.பார்வதி 

படங்கள்: வி.சதீஸ்குமார்