ஸ்பெஷல் 1
Published:Updated:

ஸ்ட்ராபெர்ரி கம்மல்!

செ.கிஸோர் பிரசாத் கிரண், படங்கள்: எம்.உசேன்

சென்னையிலிருக்கும் ஜி.ஆர்.டி ஹோட்டல், தன் சமையல் கலைஞர்களின் கூட்டு முயற்சியில் வித்தியாசமான சமையல் ரெசிப்பிகள் அடங்கிய புத்தகம் ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. 'கிரேட் ஃபூடீ குக் புக்' (Great Foodie cook book) என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புத்தகத்தை, ஜி.ஆர்.டி ஹோட்டல் மற்றும் ரிசார்ட்ஸ் மூத்த துணைத்தலைவர் விக்ரம் கோட்டே வெளியிட, பிரபல உணவு விமர்சகரும் எழுத்தாளருமான டாக்டர் கீதா பெற்றுக்கொண்டார்.

ஸ்ட்ராபெர்ரி கம்மல்!

நிகழ்வில் பேசிய விக்ரம் கோட்டே, ''ஜூன் 20, 21 தேதிகளில் 'மெட்ராஸ் கோட்டூவ் ஃபேஷன் வீக்' (Madras Couture Fashion Week) நடக்கவிருக்கிறது. இதில், வித்தியாசமான டிரெண்ட் அறிமுகம் செய்யவிருக்கிறோம். அதாவது பழம், காய்கறிகள் போன்றவற்றால் உருவாக்கப்பட்ட ஆபரணங்களை அறிமுகம் செய்யப்போகிறோம். உதாரணமாக, ஸ்ட்ராபெர்ரியால் ஆன கம்மலை ஒரு நிகழ்ச்சிக்கு அணிந்து சென்று, வீடு திரும்பியதும் அதை உண்ணலாம். இது முற்றிலும் புதுமையான முயற்சி!'' என்று சொல்லி வியப்பைக் கூட்டினார்!