வாசகிகளை கொஞ்சம் சிரிக்கவைக்க என்ன பண்ணலாம்னு யோசிச்சப்போ, 'ஆர்ஜே' பாலாஜி ஞாபகத்துக்கு வந்தார். அதாங்க, 'டொடடொன்டன்ட் டொன்டபென்ட்ன்ட்...’ இந்த அற்புதமான பழமொழியை(!) 'பிக் எஃப்.எம்’ ரேடியோவுல தினமும் மந்திரம் மாதிரி சொல்ற கலகல பார்ட்டி!

''எப்பவும் வாயாடிட்டே இருக்கிற நீங்க, வாயடைச்சுப் போன ஒரு மொக்கை சம்பவம் சொல்லுங்க ப்ளீஸ்!''னு அவர்கிட்ட கேட்டோம்.

கொய்ய்ங்ங்ங்ங்ங்ங்.... (வேற ஒண்ணும் இல்ல... கொசுவத்தி சுருளுது)

''அது இருக்கு எக்கச்சக்கம். இருந்தாலும், நான் சொல்லப் போறது டாப்! எங்க காலேஜ்ல பொண்ணுங்கதான் அதிகம். அவங்க முன்ன ஸீன் போடுறதுதான் பசங்களுக்கு ஆல்டைம் அஜெண்டா. ஒருவாட்டி ரத்ததான முகாம் நடந்துச்சு. இன்னிக்கு ஹீரோ இமேஜை போட்டுட வேண்டியதான்னு, முண்டி அடிச்சு முதல் வரிசையில போய் நின்னுட்டேன். 'உங்களுக்கு சர்வீஸ் மைண்டா..!’, 'உங்க சேவையில் மட்டுமில்ல, வாழ்க்கையிலும் உங்களோட இணைய நினைக்கிறேன்!’னு பல ஃபிகர்கள் நம்மள துரத்தப் போகுதுனு, மனசுக்குள்ள கலர் கலரா கனவு. 'அந்தச் சேர்ல போய் உட்காருப்பா...’னு, கனவைக் கலைச்சு டாக்டர் முன்ன உட்கார வெச்சாங்க ஒரு சிஸ்டர்.

அலப்பறைக்காக கை, கழுத்துல எல்லாம் நிறைய செயின் போட்டிருந்த காலம் அது. போதாக்குறைக்கு, வாட்சை கழுத்துல கட்டி தொங்கவிட்டிருப்பேன். 'கையில கட்ட வேண்டியதை கழுத்துல தொங்கவிட்டிருக்கே?!’னு கேட்டாரு டாக்டர். 'ஸ்ஸ்ஸ்டைலு சார்!’னு ஸ்டைலாவே சொன்னேன். 'இன்னும் எந்தப் படத்துலயும் வரலையேப்பா!’னு அவர் சொன்னதும், 'இதுக்கப்புறம் பாருங்க சார் வந்துடும்!’னு சொன்னேன்... பக்கத்துல நின்ன 10, 15 பொண்ணுங்கள கெத்தா பார்த்தபடி.

'சரி இங்க எதுக்கு வந்திருக்கே?’னு கேட்டார் டாக்டர். 'பிளட் டொனேட் பண்ண சார்'னு மறுபடியும் கெத்து காட்டினேன்! வெயிட் செக் பண்ணச் சொன்னார். 46 கிலோனு மெஷின் சொல்லிச்சு. 'நீ இப்ப ரத்தம் கொடுத்தா, நிச்சயமா படத்துல வந்துடுவே!’னு கழுத்துல மாலை போடுற மாதிரி சைகை காண்பிச்சார் டாக்டர். அங்க இருந்த பொண்ணுங்கல்லாம், பயங்கர ஜோக் கேட்டுட்ட மாதிரி விழுந்து விழுந்து சிரிக்க, என் மூஞ்சி ஜிஞ்சர் தின்ன மங்கி மாதிரி ஆயிடுச்சு. டாக்டருக்கு ரிட்டர்ன் கொடுக்க அந்த நேரத்துல பன்ச் எதுவும் சிக்காமப் போக, டின்ச் ஆகி நின்னதை மறக்கவே முடியாது'' என்று மலரும் நினைவுகளில் மூழ்கிய பாலாஜி,

''டொடடொன்டன்ட் டொன்டபென்ட்ன்ட்...!'' என்று முடித்தார்.