செல்லப்பிராணிகள் வளர்ப்பது என்றால்... குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலருக்கும் மிகுந்த ஆர்வம்தான். ஆனால், இவர்களில் பலருக்கும் இவற்றை வளர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள், இவற்றுக்கென உள்ள பிரத்யேக குணங்கள் என பல விஷயங்கள் அறியாத ஒன்றாகவே இருக்கும். இவர்களுக்கு மட்டுமல்ல... இப்படி செல்லப் பிராணிகளை வளர்க்காமல் இருப்பவர்களுக்கும் அதிசயிக்கத்தக்க அத்தகைய விஷயங்களை, பலவழிகளில் எடுத்துச்

சொல்வதை முக்கிய பணியாக மேற்கொண்டிருக்கிறார், திருநெல்வேலி, அரசு கால்நடை மருத்துவக் கல்லூரியின் மூத்த பேராசிரியர் குமரவேல். கடந்த 21 ஆண்டுகளாக இந்தப் பயணத்தை தொடர்ந்து வருபவரை, ஒரு மதியவேளையில் சந்தித்தோம்.

''சென்னை, அரசு கால்நடை மருத்துவக் கல்லூரியில் படிப்பை முடித்ததோடு, ஜெயங்கொண்டம் அருகே உள்ள கிராமத்தில் கால்நடை மருத்துவராக சேர்ந்தேன். ஓய்வு நேரங்களில், அருகிலுள்ள கிராமங்களுக்குச் சென்று மக்களைச் சந்தித்து கால்நடைகள் குறித்து அவர்கள் அறியாத பல விஷயங்களையும் கலந்துரையாடுவேன். அதனால் பலரும் பயனடைய, அதையே தொடர்ந்து செய்யும் உற்சாகம் பெற்றேன். கல்லூரிப் பேராசிரியர் பணியில் சேர்ந்த பின்னும், இது தொடர்ந்தது'' என்பவர், சென்னை, நாமக்கல் அரசு கால்நடை மருத்துவக் கல்லூரிகள் எனக் கடந்து, தற்போது திருநெல்வேலியில் பணிபுரிந்து வருகிறார்.

''கால்நடைகள் மற்றும் செல்லப்பிராணிகள் குறித்த அறிவியல் சார்ந்த விஷயங்களைப் பற்றி சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள் எழுதத் தொடங்கினேன். இதற்கு மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. இப்போது திருநெல்வேலி கால்நடை மருத்துவக் கல்லூரி முதல்வருடன் இணைந்து, மாணவர்களைக் கொண்டு, மக்கள் மத்தியில் 'தெருநாய்களை வளர்ப்பதில் எந்தத் தப்பும் கிடையாது’ என்பதை, காரணங்களுடன் பல்வேறு விழிப்பு உணர்வு நிகழ்ச்சிகள் மூலம் அறிவுறுத்தி வருகிறோம்.

முன்பு மக்கள் கால்நடைகளையும், செல்லப் பிராணிகளையும் ஆர்வத்தோடு வளர்த்து வந்தார்கள். இப்போது வெகுவாகக் குறைந்துவிட்டது. இவற்றின் முக்கியத்துவத்தை அறிந்தால், மீண்டும் கால்நடைகள் மற்றும் செல்லப்பிராணிகள் வளர்க்கும் ஆசை மக்களிடம் எழும். நாய்கள், பூனைகள் போன்றவற்றிடம் ஏராளமான பிரத்யேக குணங்கள் இருக்கின்றன. செல்லப்பிராணிகளின் செயல்பாடுகளை உற்றுப்பார்த்தால், இதையெல்லாம் உணர முடியும். தங்களுடைய செயல்களின் மூலம், நமக்கு ஏதேனும் ஒரு விஷயத்தை அவையெல்லாம் உணர்த்துவதைப் பார்க்கலாம். அது நம்மை எச்சரிக்கைப்படுத்துவதாகவும் இருக்கலாம்.

இன்று மக்கள் பலவிதமான மனநோய்களில் சிக்கித்தவித்து வருகிறார்கள். அவர்களெல்லாம், தங்களுக்கு ஏற்ற செல்லப் பிராணிகளை வளர்ப்பதன் மூலம், நோயின் பிடியிலிருந்து விலக முடியும். இப்படித்தான், கிராமங்களில் உள்ளவர்களுக்கு அவர்களுடைய செல்லப்பிராணிகளும், கால்நடைகளும் ஒரு காலத்தில் உதவியிருக்கின்றன. இன்றும்கூட இது நடந்துகொண்டுதான் இருக்கிறது. எனவே, கால்நடைகள் மற்றும் செல்லப்பிராணிகள் வளர்க்க ஆரம்பிக்கலாம் வாருங்கள்'' என்று அழைக்கிறார் குமரவேல்.