Published:Updated:

ஐயோ பாவம் ஆன்ட்டி!

தொகுப்பு: ம.பிரியதர்ஷினி

ஐயோ பாவம் ஆன்ட்டி!

தொகுப்பு: ம.பிரியதர்ஷினி

Published:Updated:

முகநூலில் (ஃபேஸ்புக்), அவ்வப்போது யாராவது ஒரு பெண், அத்தனை பெண்களின் சார்பாகவும் இந்தச் சமூகம் பெண்களை அணுகும்விதம் பற்றிய கோபத்தை, ஆதங்கத்தை, நியாயத்தை அழுத்தமான எழுத்தால், தங்களின் 'சுவரில்’ போஸ்ட் செய்வார்கள். சமீபத்தில் அப்படி சாட்டையடியாக இருந்த கமலி பன்னீர்செல்வத்தின் போஸ்ட்... உங்களின் பார்வைக்கும்!

''சமூக வலைதளங்களால் மிகவும் கொச்சைப்படுத்தப்பட்ட ஒரு வார்த்தை, 'ஆன்ட்டி’. 35 வயது முதல் 45, 50 வயது வரை உள்ள பெண்களை 'ஆன்ட்டி’ என்பதுடன், 'செம கட்டை’ என்பது அதன் உள் அர்த்தம். மேலும் அவர்கள் எல்லாம் திருப்தியில்லாத தாம்பத்ய வாழ்க்கை வாழ்வது போலவும், யார் வேண்டுமானாலும் அணுகலாம் என்பது போலவும் ஒரு மனப்போக்கு பலருக்கு. அப்படி நீங்களும் 'ஆன்ட்டி’ என்று மட்டமான மனத்தோடு ஒரு பெண்ணைப் பார்க்கும் முன் இதைஎல்லாம் யோசித்துப் பாருங்கள்.

அவளின் மகள் அல்லது மகனின் படிப்பு, அல்லது அவர்களின் பருவ மாற்றம் காரணமான பிரச்னை அந்தப் பெண்ணின் மனதை ஆக்கிரமித்திருக்கலாம். திருமண வயதிலிருக்கும் பெண் பற்றிய கவலையில் இருக்கலாம். பள்ளிப் பருவத்திலேயே காதல் வயப்பட்ட தன் பெண்/பையனுக்கு, அதைத் தவறு என்று புரியவைக்கப் போராடிக்கொண்டிருக்கலாம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஐயோ பாவம் ஆன்ட்டி!

குடிப்பழக்கத்துக்கு அடிமையான கணவருடன் நாட்களை நரகமாக்கிக்கொண்டிருக்கலாம். அவள் ஏதோ ஒரு நோயுடன் போராடிக்கொண்டிருக்கலாம். குடும்பத்தில் சண்டை, தீர்க்க முடியாத சுமையாக மனதை அழுத்தலாம். உடல்நிலை சரியில்லாத கணவர் அல்லது குடும்பத்தினரின் கவலைகளைச் சுமந்திருக்கலாம். தனக்கு மார்பில் வந்திருக்கும் கட்டி, கேன்சர் கட்டியா என்ற அச்சத்தில் இருக்கலாம். கட்டுக்கடங்காமல் போகும் உதிரப்போக்கால் பயமும் பீதியும் அடைந்திருக்கலாம். மெனோபாஸ், அவளை எரிச்சலான மனநிலைக்கோ, மன உளைச்சலுக்கோ, சுயபச்சாதாபத்துக்கோ தள்ளியிருக்கலாம். மேலும் அந்தக் காலகட்டத்திலும் ஓய்வில்லாமல், வீட்டு வேலையையும் அலுவலகப் பணியையும் தனி ஒருத்தியாகச் சுமப்பவளாக இருக்கலாம்.

இவ்வளவு சாத்தியக்கூறுகள் இருக்கின்றன ஒரு 'ஆன்ட்டி’யின் வாழ்க்கையில். அவள் இதையெல்லாம் போர்டு போட்டு எல்லோருக்கும் அறிவித்துக்கொண்டிருக்க முடியாது. இனி வக்கிரங்களைச் சுமந்து 'ஆன்ட்டி’, 'ஃபிகர்’ என்று ஏளனமாக விளிக்கும் முன், மேலே சொன்னவற்றை கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்.

உடனே, பெண்கள் பற்றிய குற்றப்பட்டியலுடன் சிலர் எழக்கூடும். அவர்களுக்கு நான் சொல்வது ஒன்றுதான்... விதிவிலக்குகள் இருபாலரிலும் உண்டு!''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism