Published:Updated:

அலட்டல் ஸீன்... அழுகாச்சி ஸீன்!

அலட்டல் ஸீன்... அழுகாச்சி ஸீன்!

அலட்டல் ஸீன்... அழுகாச்சி ஸீன்!

அலட்டல் ஸீன்... அழுகாச்சி ஸீன்!

Published:Updated:

ஸீன் போடுற காலேஜ் பொண்ணுங்களப் பார்த்திருப்போம். அப்படி அவங்க நிகழ்த்துற சில காட்சிகள்... அதாங்க ஸீன்களை சொல்லும்படி, திருச்சி காவேரி மகளிர் கல்லூரி மாணவிகள் சிலர்கிட்ட கேட்டோம்!

''முதல்ல டிரெஸ்ல இருந்து ஆரம்பிப்போம்!''னு ஸ்டார்ட் பண்ணின சூர்யா,

''மஞ்சள், ஃபேன்டா, ஃப்ளோரசென்ட் பச்சைனு கண்ணுல அடிக்கிற மாதிரி கலர் காம்பினேஷன்ல டிரெஸ் பண்ணிட்டுப் போனா, பார்க்காத கண்ணும் பார்க்குமே..! அப்புறம் ஒரு கற்றை முடியை மட்டும் முன்னாடி எடுத்துவிட்டு, அப்பப்போ ஒதுக்கிவிடாத டீன் பொண்ணுங்கள, அநேகமா கேம்பஸில் பார்க்க முடியாதுங்கிறது உங்களுக்குத் தெரிஞ்சதுதானே?! தமிழ்ல பேசினாலும் 'அவுச்’, 'ஓ நோ’, 'இட்ஸ் லைக்...’, 'யூ ஸீ’, 'ஆக்சுவலி’ -  இதைஎல்லாம் 'மானே தேனே’ மாதிரி அங்கங்க போட்டுக்கிட்டா, நம்மள பெரிய 'பீட்டர் பார்ட்டி'னு இந்த உலகம் நம்பிடும்!''னு ஃபர்ஸ்ட் கியர்லயே கொட்டித் தீர்த்தாங்க சூர்யா.          

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''மொபைல் போன்தான் இப்போ எங்க ஸீன்களுக்கெல்லாம் ஆதாரம்!''னு ஆரம்பிச்ச சுபா,

''சைனா செட்டா இருந்தாலும், கைக்கு அடங்காத சைஸ்ல ஒரு போனை வாங்கி வெச்சுக்கணும். எப்ப பார்த்தாலும் அதை நோண்டிட்டே இருக்கணும். பார்க்கிறவங்க, 'பிஸியா இருக்கா போல’னு நம்ம பக்கத்துலயே வரக்கூடாது. அந்தளவுக்கு மெயின்டெயின் பண்ணணும். அந்த சமயம் பார்த்து கால் வந்தா, பின்னிட வேண்டியதுதான். 'போன வாரம்தான் புது மொபைல் வாங்கினேன்’, 'ஐயோ, ஃபிரெஞ்ச் கிளாஸ் போகணுமே’, 'நாளைக்கு மால் போகலாம் வர்றியா?’னு, 'அவளா இவ’னு நம்மள எல்லாரும் பார்க்கிற மாதிரி, அவங்களுக்குக் கேட்குற மாதிரி பேசணும்... குறிப்பா, காலே வரலனாகூட!''னு சுபா சொன்னப்போ நம்மளோட மைண்ட் வாய்ஸ்... 'அவளா இவ!’

அலட்டல் ஸீன்... அழுகாச்சி ஸீன்!

''ஸாரி... சீக்கிரம் கிளம்பிட்டேன்... பட் லாஸ்ட் மினிட்ல...''னு பவித்ரா ஏதோ கதை சொல்ல ஆரம்பிக்க,

''கிளாஸ் ரூமுக்கு லேட்டா வந்தாலும் இதே டயலாக், எக்ஸாம் ஹாலுக்கு லேட்டா வந்தாலும் இதே டயலாக், இப்போ இங்கயுமா..?!''னு எல்லோரும் கோரஸா கேட்க... ம்ஹூம், சளைக்கலையே பவித்ரா.

''ஆக்சுவலி, இதுவும் ஒரு ஸீன்தான்பா. 'ஆன் டைம்’ல போயிட்டா, நம்மள யாரும் தேடமாட்டாங்க. எப்பவும் ஒரு அஞ்சு நிமிஷம் லேட்டா போனாதான், 'பவித்ராவைக் காணோமே.. பவித்ராவைக் காணோமே’னு அங்க ஒரு வைப்ரேஷனை கிரியேட் பண்ணலாம். அப்புறமா வந்து, 'ஸாரி... சீக்கிரம் கிளம்பிட்டேன்... பட்...’னு நாம கதை சொல்ல ஆரம்பிச்சா, செம்ம ஸீன்தான்!''னு விளக்கம் சொல்ல,

''அட, விஷக்கிருமியே!'' அவங்கள மொத்தினாங்க ஆல் கேர்ள்ஸ்.

''செஞ்சதை செய்யாத மாதிரியும், தெரியாததை தெரிஞ்ச மாதிரியும், இருக்கிறதை இல்லாத மாதிரியும் சொல்றதுலதான் கிக்''னு ஆரம்பிச்ச பிரியா,

''இப்படியெல்லாம் சொல்லிச் சொல்லியே நாங்க பழகிட்டோம்; மத்தவங்களும் கேட்டுப் பழகிட்டாங்க. யார் என்ன சொன்னாலும் 'ஆமா’ போட்டா, நம்மை உப்புக்குச் சப்பாணி ஆக்கிடுவாங்க. எல்லா விஷயத்துலயும் யாரோடவும் ஒத்துப்போகாம நேரெதிரா, எடக்குமடக்கானு கலாட்டாவா பேசினாதான், குரூப்ல ஸ்டார் அந்தஸ்து கிடைக்கும். என்னோட இந்த ஸீன் அகராதியை நல்லா நோட் பண்ணிக்கோங்க. காலேஜுல மட்டுமில்ல, நாளைக்கு வேலைக்குப் போற இடத்துலயும், குடும்பம் நடத்தப் போற இடத்துலயும் நல்லாவே பயன்படும்''னு இவங்க சொன்ன டிப்ஸ்ல அசந்துதான் போயிட்டோம்.  

''ஸீன் போடுறதுங்கிறது பந்தா பண்றது மட்டுமில்ல... பாவமா இருக்கிறதும்தான்''னு பன்ச் டயலாக் பேசின மீரா,

''இதுவும் ஒரு வகை ஸீன். அதாவது, எப்பவும் கிராண்டாவே காலேஜுக்குப் டிரெஸ் பண்ணிட்டுப் போவோம். 'அவ எப்பவுமே அப்படித்தான்’னு ஒரு இமேஜ் கிரியேட் ஆனதும், திடீர்னு ஒரு நாள் அநியாயத்துக்கு சிம்பிளா டிரெஸ் பண்ணிட்டுப் போறதோட, முகத்தையும் டல்லாவே வெச்சுக்குவோம். 'என்னனு தெரியலையே?’னு எல்லாரையும் மண்டை காயவிடுவோம். ஐடியா நல்லாயிருக்கா? சொல்லப்போனா, அலட்டல் ஸீன் போடுறதைவிட, அழுகாச்சி ஸீன்தான் ஹிட்டோ ஹிட்!''னு சொன்னாங்க மீரா.

ஃபேக்ட்டோ ஃபேக்ட்டு!

- ந.ஆஷிகா 

படம்: என்.ஜி.மணிகண்டன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism