Published:Updated:

''அரசுப்பணி லட்சியம்... ஜெயிப்போம் நிச்சயம்!''

''அரசுப்பணி லட்சியம்... ஜெயிப்போம் நிச்சயம்!''

''அரசுப்பணி லட்சியம்... ஜெயிப்போம் நிச்சயம்!''

''அரசுப்பணி லட்சியம்... ஜெயிப்போம் நிச்சயம்!''

Published:Updated:

சில ஆண்டுகளாக பெரும்பாலான மாணவர்களின் தேர்வு, பொறியியல் படிப்பாகவே இருந்தது. ப்ளஸ் டூ முடிப்பதற்கு முன்னரே பொறியியல் கல்லூரிகளில் இடம் வாங்கி வைத்தவர்கள்கூட உண்டு. இப்போது, யு.பி.எஸ்.சி எனப்படும் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வெழுத பல மாணவர்களும் கல்லூரியில் படிக்கும் காலத்திலேயே பயிற்சியில் இறங்கியிருப்பது, ஆரோக்கியமான விஷயம். கலை, அறிவியல் கல்லூரி, பொறியியல் கல்லூரி என்று எல்லா தரப்பு மாணவர்களும் போட்டித் தேர்வுகளில் ஆர்வம் கொண்டுள்ளனர்.

யு.பி.எஸ்.சி தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியாகியுள்ள நிலையில், வெற்றியாளர்கள் தந்த உந்துதலுடன், 'நாங்களும் ஐ.ஏ.எஸ் ஆவோம்’ என்று தீவிரமாகத் தயாராகிக்கொண்டிருக்கும் அடுத்த படையினரிடம் பேசினோம்.  

''ரிசல்ட் வந்த பிறகு, நீங்க என் னைப் பேட்டி எடுக்க வர்ற அளவுக்கு சாதிக்கணும்!'' என்று துடிப்புடன் ஆரம்பித்த ஜூஹி ஜஹான்,

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''ரொம்பக் கட்டுப்பாடான குடும்பம். பொம்பளப் பிள்ளைக்கு நல்லபடியா கல்யாணம் பண்ணி வைக்கணும்ங்கிறதுதான் அவங்களோட ஒரே ஆசை, இலக்கு, லட்சியம் எல்லாம். யு.பி.எஸ்.சி தேர்வுக்குப் படிக்கிறேன்னு நான் சொன் னப்போ, 'நல்ல விஷயம்தான்!’னு பச்சைக் கொடி காட்டினது எனக்கே சர்ப்ரைஸ். அதுக்கு மரியாதையா, நான் பெருமையான ஒரு பதவியோட அவங்க முன்ன போய் நிக்கணும். அதனால தீவிரமா பயிற்சி செஞ்சுட்டு இருக்கேன். ஸ்கூல் பசங்களுக்கு டியூஷன் எடுக்கிறதால, போட்டித் தேர்வுக்கான 610 வகுப்புகளுக்கான பாடங்களையும் அதன் மூலமாவே படிச்சிக்கிறேன். ஒரே கல்லுல ரெண்டு மாங்காய்!'' என்று சிரிக்கிறார், ஜூஹி.

''அரசுப்பணி லட்சியம்... ஜெயிப்போம் நிச்சயம்!''

''அரசு உயர் அதிகாரிகளோட ஆளுமை, சமூகத்துல மாற்றம் கொண்டுவரக்கூடிய பொறுப்பு மற்றும் அதிகாரம்... இதெல்லாம்தான் எனக்கு இந்தத் தேர்வுகளுக்குத் தயாராகும் ஆசை, லட்சியத்தை எனக்குள்ள விதைச்சுது. எங்கப்பாவும், அம்மாவும் முழு ஆதரவு தந்து, என் திறமையில் என்னைவிட அதிக நம்பிக்கை வெச்சு காத்திருக்காங்க. நான் படிக்கிறது உளவியல் - சமூகவியல். யு.பி.எஸ்.சி பாடத்திட்டத்தில் விருப்பப் பாடமா உளவியலும்  சமூகவியலும் இருக்கறதால, தேர்வுக்குத்

''அரசுப்பணி லட்சியம்... ஜெயிப்போம் நிச்சயம்!''

தயாராகிறது சுலபமா இருக்கு. இப்போ காலேஜ்ல செகண்ட் இயர் படிக்கிற நான், வார இறுதி நாட்கள்ல ஐ.ஏ.எஸ் அதிகாரி நடத்துற பயிற்சி வகுப்புகளுக்குப் போறேன். இறையன்பு சாரும், கிரண் பேடி மேடமும்தான் என் ரோல்மாடல்கள்!'' என்கிறார், செல்வ அபிராமி.

''எங்கப்பா அரசு ஊழியர்ங்கறதால, எனக்கும் அரசுப் பணிக்கான தேர்வுகள்ல தானாவே விருப்பம் வந்துடுச்சு!'' என்று சொல்லும் திவ்யா,

''நடனம், பாட்டுனு பல விஷயங்களில் எனக்கு திறமையும், ஆர்வமும் இருந்தாலும், பிராக்டிகலா யோசிச்சுப் பார்த்தா, கவர்ன்மென்ட் ஜாப்ல உட்கார்றதுதான் பெஸ்ட்னு புரிஞ்சுது. 'எப்போ பார்த்தாலும் டி.வி பார்த்துட்டே இருக்காதே’னு சொல்ற என்னைத் சுத்தி உள்ளவங்களுக்கு, டி.வி-யில் நான் என்ன பார்க்கிறேன், எத்தனை தகவல்களை உள்வாங்குறேன்னு தெரியாது. படிச்சு தெரிஞ்சிக்கிறதைவிட, பார்த்து தெரிஞ்சுக்கிறது சுவாரஸ்யம்ங்கிறது என் பாலிஸி. தவிர, நியூஸ் பேப்பர், இன்டர்நெட்னு எல்லா தளத்துல இருந்தும் தகவல்களை சேகரிச்சுட்டு இருக்கேன். கல்லூரி படிப்பை முடிச்சதும்தான் முறையான பயிற்சி வகுப்பில் சேரணும். ஆனாலும் இப்போ இருந்தே யு.பி.எஸ்.சி தேர்வுகளுக்காக என்னை நானே டியூன் பண்ணிட்டு வர்றேன்!'' என்றார்.

''மூணு வருஷத்துக்கு முன்ன கணித ஆசியராகணும்ங்கிறதுதான் என் லட்சியமா இருந்துச்சு. அதனாலதான் ப்ளஸ் டூ முடிச்சதும், பி.எஸ்ஸி., மேத்ஸ் படிக்க விண்ணப்பம் போட்டுக் காத்திருந்தேன். அந்தச் சமயம், எங்கப்பா மூலமா ஐ.பி.எஸ் அதிகாரியை சந்திக்க வாய்ப்பு கிடைச்சுது. அவர்தான் அரசுப் பணியோட முக்கியத்துவத்தை பத்தி ஆர்வம் ஏற்படும்விதமா விரிவா சொன்னார். அது மட்டுமில்லாம, போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகறதைப் பத்தியும் நிறைய ஆலோசனைகள் சொன்னார். ஆங்கில இலக்கியம் எடுத்துப் படிச்சா, தேர்வெழுத உதவியா இருக்கும்னு சொன்னார். உடனடியா பி.ஏ., ஆங்கிலத்துக்கு விண்ணப்பத்தைப் போட்டு, கோர்ஸிலும் சேர்ந்துட்டேன். கல்லூரி படிப்போட, இன்னொரு பக்கம் யு.பி.எஸ்.சி தேர்வுக்கான பாடங்களையும் படிச்சுட்டு இருக்கேன். கோர்ஸ் முடிச்சதும் முழு நேரப் பயிற்சியில் தீவிரமா இறங்கிடணும்!'' என்று நம்பிக்கையாகப் பேசுகிறார் ராஷ்மி.

''அரசுப்பணி லட்சியம்... ஜெயிப்போம் நிச்சயம்!''

பிரதிபா, முதுகலை மாணவி. ''சின்ன வயசுல இருந்தே போட்டித் தேர்வுகள் எழுதணுங்கிற ஆசை எனக்கு. இளங்கலை முடிச்ச நிலையில, சமீபத்தில்தான் எனக்குத் திருமணமாச்சு. இப்போ முதுகலை சேர்ந்துட்டேன். என் கணவர் நீச்சல் பயிற்சியாளர். என்னோட லட்சியத்தை கணவர்கிட்ட சொன்னப்போ, ரொம்ப சந்தோஷப்பட்டார். எனக்குத் தேவையான மெட்டீரியல்ஸ் எல்லாம் வாங்கித் தர்றார். அத்தை, மாமானு புகுந்த வீட்டில் எல்லோரும் முழு ஊக்கமும் தன்னம்பிக்கையும் கொடுக்கிறதோட, படிக்கிறதுக்கான சூழலையும் வீட்டில் உருவாக்கித் தர்றாங்க. இனி, ஓய்வில்லாம உழைக்கணும். நிச்சயமா தேர்வில் வெற்றி பெறணும்'' என்கிறார் பிரதிபா உறுதியோடு.

ஆல் தி பெஸ்ட்!

- லோ.இந்து 

படங்கள்: பா.காளிமுத்து

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism