Published:Updated:

லெகிங்ஸ்... சரியா... தவறா?

ஒரு பரபர விவாதம் வே.கிருஷ்ணவேணி, படங்கள்: ப.சரவணகுமார்

லெகிங்ஸ்... சரியா... தவறா?

ஒரு பரபர விவாதம் வே.கிருஷ்ணவேணி, படங்கள்: ப.சரவணகுமார்

Published:Updated:

ஒரு காலத்தில் ஐந்தரை மீட்டர் புடவை கட்டிக்கொண்டு வளையவந்த பெண்கள், 'இதுதான் சூப்பர்' என்று ஒரு கட்டத்தில் சுடிதாருக்கு மாறினார்கள். காலங்கள் உருண்டோட... 'ஆஹா... என்ன ஒரு அற்புதமான டிரெஸ்!' என்கிறபடி இப்போது 'லெகிங்ஸ்' எனும் இறுக்கமான உடையின் மீது காதல்கொள்ள ஆரம்பித்துள்ளனர். டீன் ஏஜ் முதல்... நாற்பது வயதைக் கடந்தவர்கள் வரையிலும்கூட லெகிங்ஸ் அணிவது ஃபேஷனாகி இருக்கிறது. இந்நிலையில், இந்த லெகிங்ஸ் உடைக்கு எதிராக அதிருப்தி குரல்களும் ஆங்காங்கே கேட்கின்றன... நைட்டிக்கு எதிராக ஒலிப்பது போலவே!

லெகிங்ஸ்... சரியா... தவறா?

இங்கே... 'லெகிங்ஸ் சரியா, தவறா' என்று விவாதிக்கிறார்கள் நம் பெண்கள் சிலர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மனீஷா (கொரியோகிராஃபர்): நாம பார்க்கிற வேலைக்கு ஏத்த மாதிரி டிரெஸ் போடுறதுல என்ன தப்பு? யோகா, விளையாட்டு, தியானம் போன்றவைகளுக்கு இந்த லெகிங்ஸ் ரொம்பத் தேவையா இருக்கு. அதனால, நான் இதுக்கு முதல் ஓட்டு போடுறேன்.

குணால், (பிசினஸ்மேன்): பெண்களுக்கான ஆடைகளிலேயே கவர்ச்சியானதுனா, அது புடவைதான். லெகிங்ஸ், வசதியான உடை என்பதை மறுக்க முடியாது. இப்போ லெகிங்ஸ் மட்டுமில்ல... ஒரு காலத்துல பெண்கள் சுடிதாருக்கு மாறினப்போவும் இப்படித்தான் 'குய்யோ முறையோ'னு கத்தின கூட்டம் இருந்துச்சு. இப்போ அது ஏற்றுக்கொள்ளப்பட்ட உடை ஆகலையா? அதுமாதிரி லெகிங்ஸும் இனிவரும் காலங்கள்ல இயல்பான உடையாகிடும்.

சபீதா (நிகழ்ச்சிகள் ஒருங்கிணைப்பாளர்): புடவையைக் கவர்ச்சி உடைனு சொல்ற உங்களுக்கு, உடல் பாகங்களை அப்பட்டமா, ஆபாசமா காட்டக்கூடியது லெகிங்ஸ்னு தெரியலையா? வேகமா காற்றடிக்கும்போது டாப்ஸ் பறக்க ஆரம்பிச்சா... லெகிங்ஸின் கதி என்ன தெரியுமா?

ராதா (பள்ளி ஆசிரியை): ஒரு சுடிதார் செட் எடுக்க 400, 500 ரூபாயாகும். அதுக்கு தையற்கூலி தனி. ஆனா... லெகிங்ஸ், டாப்ஸ் சீப்பா முடிஞ்சுடும். மிக்ஸ் அண்ட் மேட்சாவும் போட்டுக்கலாம். அப்புறம்... தப்பா பார்ப்பாங்கனு சொல்றீங்க. அதுமாதிரியான ஆசாமிங்க... நீங்க போர்வையைப் போத்திட்டுப் போனாலும் உத்துப் பார்க்கத்தான் செய்வாங்க.

ஷமீம் (கல்லூரி மாணவி): இவ்வளவு சர்ச்சைகள் இருக்கிற உடைதான் வேணும்னு பிடிவாதம் பிடிக்காம, பட்டியாலா, காட்டன் பேன்ட்னு அடுத்த சாய்ஸ் எடுக்கலாமே..?! அதிலும் லெகிங்ஸ் நம்ம உடல்வாகுக்கு ஏற்ற உடையா இருக்காதுங்கும்போது, அதை மத்தவங்க வேண்டாம்னு சொல்றதுக்கு முன்ன நாமே ரிஜெக்ட் பண்ணலாமே?

லெகிங்ஸ்... சரியா... தவறா?

லக்ஷ்மி சௌந்தர்யா (கல்லூரி மாணவி): நம்ம வசதிக்காகதான் நாம டிரெஸ் பண்ணணும். மத்தவங்க என்ன நினைப்பாங்கனு யோசிச்சா, எந்த டிரெஸையும் முழுமனசோட போட முடியாது. என்னைப் பொறுத்தவரை, லெகிங்ஸ் நல்ல உடைதான். சுடிதார், சேலைகளில் கிடைக்காத கலர்கள்கூட இதில் கிடைக்குது. ஒரு லெகிங்ஸ் எடுத்துட்டு, வேற வேற நிறங்கள்ல டாப்ஸ் மேட்ச் செய்து போட்டுக்கலாம். ஒரு ஷால் அல்லது ஸ்டோல் நீட் லுக் தரும். என்னைப் பொறுத்தவரை, ஜீன்ஸைவிட இது ஃபிட் லுக் தருது. லெகிங்ஸ் போடுறதுக்கு யாரோட அனுமதியும் வேண்டாம், ஃபிட்டான உடலும், தன்னம்பிக்கையான ஆட்டிட்யூடும் இருந்தா போதும்.

மோனா (பேராசிரியை, டொரன்டோ யுனிவர்சிட்டி, கனடா): முதன் முதல்ல ஐரோப்பாவுலதான் இந்த லெகிங்ஸ்ங்கற டிரெஸ்ஸைக் கொண்டு வந்தாங்க. போர் வீரர்கள் பலரும் குளிரிலிருந்து தற்காத்துக்க, யூனிஃபார்முக்கு உள்ள இதைப் போட ஆரம்பிச்சாங்க. பெண்கள், ஆண்கள்னு ரெண்டு

லெகிங்ஸ்... சரியா... தவறா?

பாலினருமே இதை பயன்படுத்திட்டு இருந்தாங்க. அதுக்கு பிறகுதான் மற்ற குளிர்ப்பிரதேச நாடுகளிலும் இதைப் பயன்படுத்த ஆரம்பிச்சாங்க. பொதுமக்களும் போட ஆரம்பிச்சாங்க.

ஆடைங்கிறது ஒவ்வொரு நாட்டோட சீதோஷ்ண நிலைக்கு தகுந்தாற்போல மாறக்கூடியது. சென்னையில ஒரு ரெஸ்டாரன்ட்ல, விருந்தினர்களை வரவேற்று உள்ளே அனுப்பும் ஒரு பணியாளர், உடம்புல முகம் தவிர மற்ற இடங்கள் துளியும் தெரியாத அளவுக்கு இறுக்கமா பேன்ட், ஷர்ட் - கோட் மாட்டி, வியர்வை வழியவழிய நின்னுட்டு இருந்தாரு. என்ன சொல்றதுனு தெரியல.

விளம்பிக்கா (கல்லூரி மாணவி): மேலைநாடுகளில் உடுத்துற மாதிரி நாமும் டிப் டாப்பா கோட், ஷூ, சாக்ஸ்னு போடலாமேனு யோசிக்கிறது தப்பு இல்ல. இந்த இடத்துக்கு, இந்த ஆடையில் போனா நல்லா இருக்கும்னு தோணினா, யோசிக்க வேண்டாம். மாலுக்குப் போகும்போது ஷார்ட் குர்தி, நண்பர்கள், உறவினர்கள் வீடுகளுக்குப் போகும்போது லாங் குர்தா, போற இடத்துக்குத் தோதான டாப்ஸ் போட்டுக்கலாம். என்னைப் பொறுத்தவரைக்கும், காட்டன் லெகிங்ஸ் நல்ல சாய்ஸ்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism