Published:Updated:

லூஸ் பேன்ட்... கேர்ள்ஸ் டிரெண்ட்!

பொன்.விமலா

லூஸ் பேன்ட்... கேர்ள்ஸ் டிரெண்ட்!

பொன்.விமலா

Published:Updated:

பெரும்பான்மை மக்களைத் தன் பக்கம் ஈர்த்து வைத்திருக்கும் சினிமாவின் தூண்களில் ஒன்று, நட்சத்திரங்கள் அணிந்துவரும் ஆடைகள்! பெரும் பொறுப்பையும், பரவலான பாராட்டையும் பெற்றுத்தரும் காஸ்ட்யூம் டிசைனர் பணியை சினிமாவில் சிறப்பாகச் செய்துகொண்டிருக்கும் இந்தப் பெண்களிடம் பேசினோம்.

'திருமணம் எனும் நிக்காஹ்’ படத்தின் மூலம், வெள்ளித்திரை காஸ்ட்யூம் டிசைனர் ஆகியிருக்கிறார் வனிதா..

''நவீன சரஸ்வதி சபதம் படத்துக்கும் நான்தான் காஸ்ட்யூம் டிசைன் பண்ணினேன். ஆனா, அது முதல்ல வெளிவந்துடுச்சு. முதல் வாய்ப்பா இருந்தாலும் முழு சுதந்திரம் கொடுத்தார், 'திருமணம் எனும் நிக்காஹ்' பட இயக்குநர் அனீஸ். படத்தில் எல்லா வகையான கலாசாரமும் இருக்கும். அதனால எல்லா வகையான ஆடைகளையும் போடக்கூடிய கதாபாத்திரங்கள் படம் முழுக்க வந்துட்டு இருப்பாங்க. முதல் படத்திலேயே இத்தனை வெரைட்டியான வேலை செய்தது, பெரிய சந்தோஷம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

லூஸ் பேன்ட்... கேர்ள்ஸ் டிரெண்ட்!

'கண்ணுக்குள் பொத்தி வைப்பேன்’ கொலு பாடல்ல நஸ்ரியாவுக்கு டிசைன் பண்ணின தாவணியில, கொலு பத்தின டீடெய்ல்ஸும் இருக்கிற மாதிரி செய்திருப்பேன். தாவணியோட கலர் மயில் கலர் என்பதோட, குஞ்சத்துலயும் மயில் இருக்கும். பாவாடை - தாவணியெங்கும் கண்ணாடிகள் பதிஞ்சிருக்கும். நஸ்ரியாவோட கைகள்ல கண்ணன், ராதை மெகந்தி டிசைன் போட்டிருப்போம். அந்தப் பாட்டு, எனக்கு நிறைய பாராட்டுகள் வாங்கித் தந்திட்டிருக்கு. காஸ்ட்யூம் டிசைனிங் மட்டுமில்ல, எந்தத் தொழிலா இருந்தாலும் அதில் பிரசன்டேஷன் ரொம்ப முக்கியம்'' என்று அழுத்தம் கொடுக்கிறார் வனிதா.

''விஸ்காம் படிச்சுட்டிருந்தப்பவே சினிமா சார்ந்த விஷயங்கள் மேல ஆர்வம் வளர ஆரம்பிச்சுடுச்சு'' என்று சொல்லும் அனு வர்தன், பிரபல இயக்குநர் விஷ்ணுவர்தனின் மனைவி.

லூஸ் பேன்ட்... கேர்ள்ஸ் டிரெண்ட்!

''இந்தியில் 'அசோகா’ படம்தான், காஸ்ட்யூம் டிசைனரா என்னோட முதல் வாய்ப்பு. அந்த பீரியாடிக் ஃபிலிம், எனக்கு வித்தியாசமான அனுபவம் தந்துச்சு. பிறகு,  'பில்லா’, 'யட்சன்’னு போய்க்கிட்டிருக்கு.

கலர் சென்ஸ், யாருக்கு எந்த ஆடை பொருந்தும்ங்கிற அடிப்படை அறிவு இருந்தால்தான், நாம் உருவாக்குற டிசைன் சரியா ரீச் ஆகும். நயன்தாராவுக்கு புடவை அழகா இருக்கும். ஆனா, 'பில்லா’ படத்துல கதைக்கு தகுந்த மாதிரி அவங்களுக்கு கிளாமரைஸ்டா டிசைன் பண்ணி இருப்பேன். 'ஆரம்பம்’ படத்துல அஜித், ஆர்யா, நயன்தாராவோட கூட்டணி செம ஜாலி. அந்த 'மூட்', ஆடைகள்லயும் எதிரொலிச்சுருக்கும்'' என்று சொல்லும் அனு,

''லூஸ் பேன்ட்தான், இப்போ கேர்ள்ஸ்கிட்ட டிரெண்டா இருக்கு. காலத்துக்கு தகுந்த மாதிரி லேட்டஸ்ட் டிரெண்டையும் கதாபாத்திரத்தை பாதிக்காத மாதிரி டிசைன் செய்தா, நம்மோட வொர்க்குக்கு எப்பவும் வரவேற்பு இருக்கும்!'' என்று காலத்தையும் படிக்கிறார்!

'பரதேசி’ படத்தில் அறிமுமாகி, மு

லூஸ் பேன்ட்... கேர்ள்ஸ் டிரெண்ட்!

தல் படத்திலேயே சிறந்த ஆடை வடிவமைப்பாளருக்கான தேசிய விருது பெற்றிருப்பவர் பூர்ணிமா. ''பாலா சார் கொடுத்த வாய்ப்புதான் 'பரதேசி’. ஒவ்வொரு கதாபாத்திரக்கும் ஆடை வடிவமைக்கும்போது, அது எனக்குப் பிடிச்சிருக்கானு பார்க்க மாட்டேன், டைரக்டருக்கு திருப்தியா இருக்காங்கறதுதான் ஒரே இலக்கா இருக்கும். படத்துல வேதிகா, தன்ஷிகா ரெண்டு பேரையுமே அவங்களோட இயல்புக்கு நேரெதிரா, கதாபாத்திரத்துக்கு தகுந்த மாதிரி மாத்தினோம். பலரும் அசந்து போய் பாராட்டினாங்க. சினிமாவில் டிசைனரா வேலை பார்க்கும்போது, நமக்குப் பெயர் கிடைக்கணும்ங்கிறதைவிட, கதாபாத்திரத்துக்கு 100 பர்சன்ட் பொருந்திப் போற உடைகளா இருக்கணும்னுதான் பார்ப்பேன். இதுக்கான கிரெடிட்டை மேக்கப் மேன், கிளாத் டிசைனர், ஹேர்ஸ்டைலிஸ்ட் கூட பகிர்ந்துக்குவேன்.

லூஸ் பேன்ட்... கேர்ள்ஸ் டிரெண்ட்!

ஐஸ்வர்யா தனுஷ் இயக்கத்தில் வரப்போற 'வை ராஜா வை’ படத்துக்கு நான்தான் காஸ்ட்யூம் டிசைனர். படத்துல கவுதம் கார்த்திக், பிரியா ஆனந்த், டாப்சி நடிக்கிறாங்க. பிரியா ஆனந்துக்கு இந்திய, மேற்கத்திய ஆடைகள் ரெண்டுமே இருக்கு. டாப்சிக்கு மேற்கத்திய ஆடைகள் மட்டும்தான். 'நான்தான் சிவா’ படத்திலும் கமிட் ஆகியிருக்கேன்'' என்று சொல்லும் பூர்ணிமாவுக்குப் பிடித்த காஸ்ட்யூம் மற்றும் ஆசை...

''அழகி படத்துல நந்திதா தாஸ் மஞ்சள் பட்டுப்புடவை கட்டி, சிவப்பு பொட்டு வெச்சு, பெரிய ஜிமிக்கி போட்டு இருப்பாங்க. அதுதான் என்னோட ஃபேவரைட் காஸ்ட்யூம். இது காலத்தால் அழியாத காஸ்ட்யூமும்கூட. காஜல் அகர்வாலுக்கு பஞ்சாபி டிரெஸ்ஸும், நஸ்ரியாவுக்கு ஹாஃப் வொயிட் கேரளப் புடவையும் போட்டுப் பார்க்க எனக்கு ஆசை!'' என்றார் பூர்ணிமா.